இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக, அறிவு பகிர்வு மற்றும் கல்விசார் வாய்ப்புகளை மேம்படுத்தல் போன்றவற்றினூடாக சமூகனத்தின் நலனை மேம்படுத்துவதற்கான யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில் சந்தையின் போக்கை கவனத்தில் கொண்டு, பட்டதாரிகளுக்கு தாம் தெரிவு செய்யும் துறையில் முன்னேறுவதற்கு அவசியமான அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொடுக்கும் முன்னாயத்தமான வழிமுறையை பின்பற்றுகின்றது. கல்விசார் அமைப்புகளுடன் கைகோர்ப்பதனூடாக, தொழிற்துறைகளின் தேவைகளுக்கேற்ப கல்வித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் எதிர்பார்ப்பதுடன், பணிச்சூழலில் கேள்விகளுக்கு பொருந்தும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்துவதை உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
பல்கலைக்கழகத்தில் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு பரிபூரண பயிற்சித் திட்டங்கள் மற்றும் தொழிற்பயிற்சிக்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்துள்ளது. நேரடி பயிலல் அனுபவங்கள், வழிகாட்டல்கள் மற்றும் திறன் விருத்தி போன்றவற்றினூடாக, இந்தப் பங்காண்மையினால், கல்விப் பாடக் கோட்பாடு மற்றும் நிபுணத்துவ செயற்பாடுகளிடையெ காணப்படும் இடைவெளியை இல்லாமல் செய்ய எதிர்பார்க்கப்படுவதுடன், பட்டதாரிகளுக்கு வலுவூட்டி, புதிய தலைமுறை திறமைசாலிகளை உருவாக்கி, அதனூடாக வியாபித்துச் செல்லும் வியாபார கட்டமைப்பில் காணப்படும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம முகவர் அதிகாரி இம்தியாஸ் ஆனிஃப் கருத்துத் தெரிவிக்கையில், “தேசத்தின் முன்னேற்றத்தில், கல்வியில் முதலீடு செய்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் எமது பங்காண்மையினூடாக, மாணவர்களுக்கு அவசியமான திறன்களைப் பெற்றுக் கொடுத்து, அவர்கள் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்து, தேசிய அபிவிருத்தியில் பங்களிப்பு வழங்குகின்றோம். திறமையை ஊக்குவித்தல் மற்றும் இலங்கையர்களின் நலனை மேம்படுத்தல் போன்றவற்றில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இது போன்ற திட்டங்கள் முன்மாதிரியான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.” என்றார்.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய கூட்டுநிறுவனமான, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் (ஜேகேஎச்) அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. இது 7 வகையான பரந்துபட்ட தொழில் துறைகளில் 80இற்கும் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு இயங்குகின்றது. அதன் அங்கத்துவ நிறுவனமாகத் திகழ்ந்து, துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன், 2024 ஜுன் மாத இறுதியில் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 28.6 பில்லியனையும், ஆயுள் நிதியமாக ரூ. 71.6 பில்லியனையும் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.