Site icon Eyeview Sri Lanka

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலை குழந்தைகளுடன் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனரான HNB FINANCE PLC, ஒக்டோபர் 01ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மத்திய ஆரம்பப் பாடசாலையில் பல உற்சாகமான நிகழ்ச்சிகளுடன் கூடிய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. HNB FINANCE ஆனது கடந்த ஆண்டு ஒவ்வொரு வருடமும், இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் உள்ள அடிப்படை வசதிகளில் பின்தங்கியுள்ள பாடசாலைகளை இனங்கண்டு உலக சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலையை மையமாக கொண்டு HNB FINANCE ஏற்பாடு செய்திருந்த இவ்வருட உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் பாடசாலை அதிபர் S. கீதீஸ்வரன், ஆசிரிய பீடத்தினர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டதுடன், HNB FINANCE PLC இன் விற்பனைப் பிரிவின் பிரதானி உதார குணசிங்க, தலைமை அலுவலகத்தின் விற்பனைப் பிரிவு மற்றும் சேமிப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி கிளையின் ஊழியர்கள் இந்த சிறுவர் தின நிகழ்ச்சிக்கு பங்களிப்பை வழங்கி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த சிறுவர் தின நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் குழந்தைகளின் படைப்பு சிந்தனை மற்றும் கலை திறன்களை வளர்ப்பது, சிறந்த உணர்திறன் கொண்ட குழந்தையை உருவாக்குவது மற்றும் குழந்தைகளின் சமூக பாதுகாப்பு மற்றும் நிதி கல்வியறிவு குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

அந்த நோக்கத்துடன், HNB FINANCE சிறுவர் தின நிகழ்வு கலை நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமானதுடன், சிறுவர்கள் சித்திரம் வரைவதற்குத் தேவையான உபகரணங்கள் வழங்கி ஓவியம் வரைவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. கலை ஆலோசகர் தேவராஜ் ஜெசிந்தன் குழந்தைகளின் படைப்பு திறன்களை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதலை வழங்கினார்.

மேலும், குழந்தைகளின் சமூகப் பாதுகாப்பு குறித்து பெற்றோருக்குத் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இலங்கை காவல்துறையின் பெண் துணை பொலிஸ் பரிசோதகர் இஷானி திலோச்சனா, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஆர். சஜிஸ்திரிக்கா மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கோதை துஷ்யந்தன் ஆகியோரின் பங்களிப்புடன் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வின் பின்னர், நுண்கடன் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவோரின் நிதி அறிவை வலுப்படுத்தவும், அவர்களுக்கு நிதி அறிவை வழங்குவதற்காகவும், நாட்டின் நீண்ட காலப் பொருளாதாரத்தை நிலையாக வலுப்படுத்தும் நோக்குடன், HNB FINANCE PLC நடத்தும் பயிற்சிப் பட்டறைத் தொடரில் மற்றொரு நிகழ்ச்சி இங்கே நடத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில், அந்த நிகழ்ச்சித் திட்டம் HNB FINANCE PLC இன் பயிற்சிப் பிரிவில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சிப் பட்டறையானது உதவிப் பயிற்சி முகாமையாளர் யோகராஜா பிரகாஷ் அவர்களால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“பெரியவர்களால் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு முக்கியமான காரணி குழந்தைகளின் மன நலம் மற்றும் அவர்களின் படைப்பு திறன்களை வளர்ப்பதில் அவர்களின் ஆர்வம் ஆகும். மறுபுறம், இன்றைய சிறுவர்கள் சமூகத்தில் பெரும்பாலும் பாதுகாப்பாக இல்லை. முன்னெப்போதையும் விட குழந்தைகளின் சமூகப் பாதுகாப்பில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. கிராமப்புறங்களில் வாழும் மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்கு அறிவு, ஆதரவு மற்றும் புரிதலை வழங்குவது அவசியம்.” என HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் கூறினார்.

HNB FINANCE PLC இத்திட்டத்தில் பங்குபற்றிய ஒவ்வொரு குழந்தைக்கும் பெறுமதியான பரிசை வழங்க ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

HNB FINANCE ஆனது எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டி குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றுவதில் அதிக மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அவர்கள் ஒருநாள் நாட்டின் உழைக்கும் குடிமக்களாக தங்கள் வாழ்க்கையை வெல்வார்கள். HNB FINANCE ஆல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுடன் இணைந்து, சிரமங்களை எதிர்கொள்ளும் கிராமப்புற குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அத்தியாவசியமான மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றுக்கு வசதிகளை வழங்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Share with your friend
Exit mobile version