Site icon Eyeview Sri Lanka

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ‘தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வடிவமைப்புத் தீர்வுகள்’ இறுதிப் போட்டியில் இலங்கையின் புத்தாக்கமான இளம் மனதுகளை வெளிப்படுத்திய SLIIT  

Share with your friend

இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை வளர்ப்பதற்கான உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அர்த்தமுள்ள தீர்வுகளை உருவாக்க இளம் மனங்களின் திறனை வெளிப்படுத்தக் கூடிய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ‘தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வடிவமைப்புத் தீர்வுகள்’ சவால் போட்டி நிகழ்வை SLIIT இலங்கையின் முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்தது. 

இணையற்ற திறமைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்திய ஹிஜாஸ் சர்வதேச பாடசாலையின் ஏரோ லிங்க் அணி முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், இந்த அணியின் உறுப்பின்ரகள் அனைவரும் தலா ஐபாட் ஒன்றைப் பரிசாகப் பெற்றுக்கொண்டனர். கண்டி திருத்துவக் கல்லூரியின் அன்ஃபேஸட் அணி அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மக்கள் விருதைப் பெற்றுக் கொண்டதுடன், மாணவர்கள் தங்கள் சாதனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் சுயவிவரங்களைப் பதிவேற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருந்த  ‘Edu-Link’   அவர்களின் இணையத்தளம் நடுவர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. இந்த அணிக்கு மூன்று புதிய எயார்பொட்ஸ் ப்ரோ கருவிகள் வழங்கப்பட்டன.

இறுதிப் போட்டிக்கு 16 அணிகள் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், அவை நிஜஉலகப் பிரச்சினைகளுக்குப் புத்தாக்கமான தீர்வுகளை முன்வைத்திருந்தன. இதில் பங்குபற்றிய அனைவருக்கும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

SLIIT  இன் ஆய்வு மற்றும் சர்வதேசத்துக்கான பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் சமந்த தெலிஜ்ஜகொட கருத்துத் தெரிவிக்கையில், உள்நாட்டில் உயர்தரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் விமர்சன சிந்தனை மற்றும் ஆக்கப்பூர்வமான வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாயும் ஆற்றலை வளர்க்கும் தளமாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் வழங்கும் இந்தப் புத்தாக்கப் போட்டியை SLIIT  நடத்தியமை குறித்து நாம் பெருமகிழ்ச்சியடைகின்றோம். உலகளாவிய ரீதியில் மதிக்கப்படும் நிறுவனத்துடன் ஒத்துழைப்பதன் மூலம், சகல துறைகளிலும் திறமை மிக்க, சமூக உணர்வுள்ள நாளைய தலைவர்களை எம்மால் உருவாக்க முடியும். எங்கள் மாணவர்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளனர், மேலும் சிறப்பான மற்றும் புத்தாக்கங்கள் மூலம் தேசிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கூட்டாண்மையை மேம்படுத்த நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

உயர்தர பாடசாலை மாணவர்கள் மத்தியில் தொழில்முனைவுத் தன்மையை உக்குவிக்கும் நோக்கில் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ‘தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வடிவமைப்புத் தீர்வுகள்’ போட்டி நடத்தப்பட்டது. இந்த அற்புதமான முன்முயற்சியானது இளம் மனங்களுக்கு தொழில்முனைவுத் திறன்களை ஆராய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒர் தளத்தை வழங்கியிருப்பதுடன், நிஜ வாழ்க்கை சிக்கல்களைத் தீர்க்க தொழில்நுட்பத்தின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கற்றுக்கொடுக்கிறது.

இந்தத் திட்டமானது ஐந்த கட்டங்களைக் கொண்டிருந்ததுடன், தொடர்ச்சியான வாரங்களில் நிகழ்நிலை மற்றும் பௌதீக ரீதியான அமர்வுகள் நடத்தப்பட்டன. தொழில் முனைவோர் சிந்தனை, சிக்கலைக் கண்டறிதல், தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை வடிவமைத்தல், தகவல் தொடர்பாடல் மற்றும் கதைசொல்லல், வழிகாட்டுதல் மற்றும் சரிசெய்தல், சமூக நலனை இலக்காகக் கொண்ட ஆக்கப்பூர்வமான வணிக சிந்தனையை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் இதில் உள்ளடங்கியிருந்தன.

புதிய தயாரிப்பு அல்லது சேவையை உருவாக்கும் போது அதில் காணப்படும் பல்வேறு படிநிலைகள் குறித்த புரிதலை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் வகையில் அமர்வுகள் அமைந்திருந்தன. இந்த நிகழ்ச்சி முன்னெடுத்துச் செல்லப்படும்போது தெரிவுசெய்யப்பட்ட குழுக்கள் ஆக்கப்பூர்வமான சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் விமர்சன சிந்தனை ஆகியவற்றில் அனுபவத்தைப் பெற்ற நடுவர்களுக்குத் தமது யோசனைகளை முன்வைத்தன.

SLIIT  இன் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டி மாணவர்கள், கல்விபுகட்டுவோர்; SLIIT  மற்றும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பொறியியல் வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் அனுபவங்களுக்கான பிரதி இணை பீடாதிபதி, சிரேஷ்ட விரிவுரையாளர் இணைப் பேராசிரியர் செய்யத் அமினோசதாதி, பொறியியல் வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் இணை விரிவுரையாளர் கலாநிதி ஷோன் சென்,  வணிகம் மற்றும் பொருளாதாரம், சட்ட பீடத்தின் தெற்காசிய பிராந்தியத்துக்கான முகாமையாளர் ஜனார்தன் கெவின் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் குயின்ஸ்லாந்து பல்கலக்கழலகத்தின் இணைப் பேராசிரியர் செய்யத் அமினோசதாதி, கலாநிதி ஷோன் சென், SLIIT இன் வணிகப் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க்ரிஷாந்த விசந்திகே ஆகியோரும், வெளியக நடுவராகக் கலந்துகொண்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் முகாமையாளர் நதீஷா ப்ரக்னாரத்ன உள்ளிட்டோர் அடங்கிய நடுவர் குழாத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டன. அசல் தன்மை, சாத்தியத் தன்மை மற்றும் விளக்கக்காட்சியின் செயல்திறன் போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இறுதிப் போட்டியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.

இணைப் பேராசிரியர் பேராசிரியர் செய்யத் அமினோசதாதி குறிப்பிடுகையில், “எமது இந்த வருகையை மனதார ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (SLIIT ) எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். ஈர்க்கக்கூடிய SLIIT  கம்பஸ் மற்றும் அதன் பீடங்களை ஆராய்வதற்கு இது எமக்குத் தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. எங்கள் வருகையின் போது, நிஜ உலக சவால்களைச் சமாளிப்பதற்கான அவர்களின் புதுமையான அணுகுமுறைகளைக் காண்பிக்கும் வசீகரிக்கும் போட்டியில் பங்கேற்ற புத்தாக்கம் கொண்ட உயர்தர மாணவர்களுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்தது. SLIIT  மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தனித்துவமான நிறமான ஊதா நிறத்தில் ஈர்க்கக்கூடிய கட்டமைப்பில் தெளிவாகக் காட்சிப்பட்டுள்ளது. கல்வி மற்றும் புத்தாக்கத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஊக்குவிப்பதற்கும் SLIIT  மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை இந்தச் சாதனை பிரதிபலிக்கிறது. உயர்தர மாணவர்களுக்கான இந்தப் போட்டியின் வெற்றியானது 2024 இல் விரிவாக்கப்படுவதுடன், விநியோகத்திற்கான திட்டங்களைத் தூண்டும் வகையில், எதிர்காலத்தில் மேலும் ஒத்துழைப்பையும் வெற்றியையும் கொடுக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்றார். 

2024ஆம் ஆண்டுக்கான QS உலகப் பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் 43வது இடத்தைப் பெற்றிருப்பதுடன், 2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரப்படுத்தலில் 70வது இடத்தையும் பெற்றுள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் நற்பெயர் பெற்ற உலகின் முன்னணி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க Universitas 21 consortium இல் உறுப்புரிமையைக் கொண்ட 3 அவுஸ்திரேலியப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகவும், Go8 பல்கலைக்கழகங்களின் நிறுவுன உறுப்பினராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பல்கலைக்கழக வலையமைப்பின் ஒரு பகுதியாக குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம பல மதிப்புமிக்க பல்கலைக்கழக கூட்டணிகளின் வலிமையை மேம்படுத்துகிறது.

முக்கியமாக, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற SLIIT  மாணவர்கள் உற்சாகமான தொழில் வாழ்க்கைப் பாதைகளை உறுதிசெய்கின்றனர். SLIIT  மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு இடையிலான கூட்டாண்மை உள்நாட்டு மாணவர்களுக்கு உலகப் புகழ்பெற்ற குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் வணிகப் படங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை உறதிசெய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டப்பாடத் திட்டங்களின் அடிப்படையில் மாணவர்கள் ஒன்று முதல் இரண்டு வருடங்களை SLIIT  இல் பெற்று, இறுதி ஆண்டை அவுஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்று கல்வி கற்றுப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.


Share with your friend
Exit mobile version