Eyeview Sri Lanka

கேப் வெலிகம மீண்டும் திறக்கப்பட்டது: இலங்கையின் தென் கடற்கரையின் மகுடம் மீள திரும்புகிறது

Share with your friend

சொகுசு சுற்றுலாவில் மூலோபாய மீள் முதலீடு

தென் பகுதியில் 270 பாகை கடல் காட்சிகளைக் கொண்ட 12 ஏக்கர் வெப்பமண்டல தோட்டங்களில் இயற்கை அழகுடன் குன்றின் மேல் அமைந்ததாக தோற்றமளிக்கும் கேப் வெலிகம உல்லாச விடுதியானது [Resort] நவீன வசதிகளுடன் மெருகேற்றப்பட்ட நிலையில் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

“தென் கடற்கரையின் மகுடம்” என்று அழைக்கப்படும் இந்த விடுதியானது தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட கடல் உல்லாசப் பயணங்கள், சமையல் பயணங்கள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கோவ் கடற்கரை உட்பட விரிவாக்கப்பட்ட விருந்தினர் அனுபவங்களை வழங்குகிறது. இந்த மேம்பாட்டு அம்சங்கள் விருந்தினர்கள் மற்றும் இலங்கையின் தென் கடற்கரையின் துடிப்பான கலாசாரம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Malik and Dilhan Fernando

இலங்கையின் சுற்றுலாப் பொருளாதாரத்தின் தூண்

தென் கடற்கரையானது இலங்கையின் சுற்றுலாத் துறையின் அடிநாதமாக உள்ளது, அதிக உயர்தர வசதிகளுடன் கூடிய உல்லாச விடுதிகளை தன்னகத்தே கொண்டதாக திகழ்கிறது. மற்றும் நாட்டின் முதன்மையான பயணத் தலமாக நாட்டின் உலகளாவிய நிலைப்பாட்டில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. கேப் வெலிகமவின் புத்துயிர்ப்பானது உலக அரங்கில் இலங்கையின் ஈர்ப்பாற்றலை உயர்த்துவதற்கு ஆடம்பரப் பயணத்தில் முதலீடு செய்வதன் முக்கியத்தை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

Resplendent Ceylon இன் தலைவரான மாலிக் ஜே பெர்னாண்டோ இது தொடர்பாக தெரிவிக்கையில் பரந்த ரீதியிலான பொருளாதார தாக்கத்தை வலியுறுத்தினார்: “கேப் வெலிகம போன்ற பெறுமதி வாய்ந்த சொத்தானது விருந்தோம்பலின் தேவையை அதிகரிக்கிறது, ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் சிறிய தங்குமிடங்கள் வரை அனைத்திற்கும் பயனளிக்கிறது. இது அதிக நிகர மதிப்புள்ள பயணிகளையும் ஈர்க்கிறது. வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா மட்டுமல்ல, சர்வதேச அளவில் நாட்டின் சுயவிவரத்தை பறைசாற்றுகிறது.

Cape Weligama Reopening

பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குதல்

இந்த உல்லாச விடுதியின் மீள் திறப்பானது  இலங்கையின் சுற்றுலாத் துறையின் ஒரு திருப்புமுனையை அடையாளப்படுத்துகிறது, இது  வளர்ச்சி மற்றும் வாய்ப்புக்கான காலகட்டத்திற்கு நகர்கிறது. இந்த வேகத்தைத் தக்கவைக்க வலுவான அரசாங்க ஒத்துழைப்பானது அவசியம் என பெர்னாண்டோ வலியுறுத்தினார்.

“இலங்கை உலகளாவிய நுகர்வோர் தகவல் தொடர்பு பிரசாரத்தை ஆரம்பிக்க  வேண்டும் மற்றும் பயனுள்ள ஒருங்கிணைப்பு மூலம் கலாசார மற்றும் வனவிலங்குகளை ஈர்க்கும் பார்வையாளர் முகாமைத்துவம்  போன்ற முக்கிய விருந்தினர் அனுபவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்..”

ஆடம்பர மற்றும் நிலைபெறுதகு தன்மையில் சிறந்து விளங்குவதற்கான கேப் வெலிகமவின் அர்ப்பணிப்பு, இலங்கையில் சுற்றுலாவின் எதிர்காலத்திற்கான ஒரு அளவுகோலை அமைக்கிறது.


Share with your friend
Exit mobile version