கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பாரிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டமான TRI-ZEN வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதைக் குறிக்கும் வகையில், John Keells Properties மற்றும் Indra Traders ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து 2025 பெப்ரவரி 28 அன்று நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தன. 897 அடுக்குமனைகளுடன். கொழும்பு 2, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள TRI-ZEN செயற்திட்ட வளாகமானது, தொழில்நுட்பம், வசதிகளுக்கான அணுகல் மற்றும் சமகால வடிவமைப்பு ஆகியவற்றின் சங்கமத்துடன், நகர வாழ்வுக்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாரிய முயற்சி நிறைவுபெற்றுள்ளதைக் கொண்டாடும் வகையில், இச்செயற்திட்டத்துடன் தொடர்புட்ட தரப்பினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடும் நிகழ்வாக இது இடம்பெற்றது.

இந்ரா சில்வா (தலைவர், Indra Traders), ருஷாங்க சில்வா (முகாமைத்துவப் பணிப்பாளர், Indra Traders), நயன மாவில்மட (தலைவர், சொத்து ஆதனப் பிரிவு, ஜோன் கீல்ஸ் குழுமம்), இனோக் பெரேரா (பகுதித் தலைவர், John Keells Properties மற்றும் நிறைவேற்று உப தலைவர், ஜோன் கீல்ஸ் குழுமம்) ஆகியோர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், ஊடகத் தரப்பிலிருந்து முக்கிய பிரதிநிதிகள் என பலரும் செயற்திட்டத்தின் பூர்த்தியைக் குறிக்கும் இந்த விசேட நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர். 52வது மாடியில், TRI-ZEN ன் மேற்தளத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், நயன மாவில்மட, ருஷாங்க சில்வா மற்றும் நதீம் ஷம்ஸ் ஆகியோரின் விசேட செய்தி உரைகளுடன் இவ்வைபவம் ஆரம்பமானது.
ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சொத்து ஆதனப் பிரிவின் தலைவர் நயன மாவில்மட அவர்கள் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “TRI-ZEN செயற்திட்டமானது வெறுமனே ஒரு குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டம் என்பதற்கும் அப்பாற்பட்டது. கொழும்பின் மையத்தில் வாழ்வதன் அர்த்தத்திற்கு மிகவும் தைரியத்துடன் மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது. 2019 முதல் இதன் ஆரம்பத்திலிருந்தே எமது குறிக்கோள் மிகவும் தெளிவாகவே காணப்பட்டது. நகர வாழ்வின் எதிர்காலத்தை இப்போதே திட்டமிட்டு, அதற்கேற்றவாறு நிர்மாணிக்க ஆரம்பித்தோம். எமது கனவு நனவாக்கியுள்ளது என்பதை இன்று நாம் இங்கு கூறுவதில் பெருமை கொள்ள முடியும். நாம் அன்று கற்பனை செய்த ஒரு உலகத்திலேயே நாம் தற்போது வாழ்கின்றோம்.
எனினும் இப்பயணம், தனியாக சாதித்த ஒன்றாக அமைந்து விடவில்லை. எமது கட்டடக் கலைஞர்கள், ஒப்பந்தகாரர்கள் முதல் John Keells Properties ல் எமது அணிகள் வரை அயராத உழைப்பு, மகத்துவம்மிக்க அணியின் நெகிழ்திறன் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குச் சான்றாக TRI-ZEN ன் வெற்றி அமைந்துள்ளது. அவர்களுடைய அர்ப்பணிப்பே இச்செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பின்னாலுள்ள பாரிய உந்துசக்தியாக அமைந்தது.
நாம் கனவுகண்ட ஒப்பற்ற வாழ்க்கைமுறையை, குடியிருப்பாளர்கள் மற்றும் இங்கு வாடகைக்கு இருப்பவர்கள் தற்போது நனவாக அனுபவிக்கின்ற வாய்ப்பினை வழங்கியுள்ள ஒரு செயற்திட்டமான TRI-ZEN வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதைக் கொண்டாடும் ஒரு முக்கியமான தருணமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. நகரத்தின் வான்பரப்பிற்கு மறுவடிவம் கொடுத்து, அடுக்குமனை வாழ்வுக்கு புதிய தராதரமொன்றை நிலைநாட்டியவாறு, கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மிகப் பாரிய குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டத்தில் இன்று ஒன்றுகூடியுள்ள நாம் பெருமைப்படவேண்டிய சாதனை மைல்கல்லினை பதித்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Indra Traders முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷாங்க சில்வா அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “நெகிழ்திறன், நோக்கம் மற்றும் இடைவிடாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு சான்றுபகருகின்ற சாதனை மைல்கல் நிகழ்வைக் கொண்டாட இன்று நாம் இங்கு ஒன்றுகூடியுள்ளோம். ஒத்துழைப்பினால் நாம் அடையக்கூடிய சாதனைகளுக்கு கலங்கரைவிளக்கமாக, கொழும்பின் மையப்பகுதியில் அமைந்துள்ள, 897 அடுக்குமனைகளைக் கொண்ட, புகழ்பெற்ற அடுக்குமனை வளாகமான TRI-ZEN ஐத் திரைநீக்கம் செய்து வைப்பதற்கு நாம் இங்கே சந்திக்கின்றோம்.
TRI-ZEN ன் பயணமானது இலகுவான ஒன்றாக அமைந்துவிடவில்லை. உலகைப் புரட்டிப்போட்ட கோவிட்-19 தொற்றுநோய், இலங்கை முகங்கொடுக்க நேர்ந்த பொருளாதார சவால்கள் என பல்வேறு பாதகமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுத்து, அவற்றை நாம் கடக்க வேண்டியிருந்தது. இது வரை 500 க்கும் மேற்பட்ட அடுக்குமனைகள் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள மிகப் பாரிய அடுக்குமனை செயற்திட்டத்தை வெற்றிகரமாக கட்டமைத்து, நிர்மாணித்து, பூர்த்தி செய்துள்ளதையிட்டு எம்மால் பெருமை கொள்ள முடியும்.
இந்த மகத்தான செயற்திட்டமானது எமது செழுமையான வரலாற்றின் ஆணிவேர்கள் மூலமாகவே தோற்றம் பெற்றது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் மோட்டார் வாகனத் தொழிற்துறையில் முன்னணி சக்தியாகத் திகழ்ந்து வருகின்ற Indra Traders, இந்த விலைமதிப்பற்ற காணியின் உரிமையைக் கொண்டிருந்ததுடன், இது எமது ஸ்தாபகர் திரு. இந்ரா சில்வா அவர்களின் சிந்தனையில் உதித்ததாகும். மிகவும் பலம்வாய்ந்த John Keells Properties நிறுவனத்துடன் கைகோர்த்ததன் மூலமாக, கனவை நனவாக்க எம்மால் முடிந்துள்ளதுடன், கனவுகள், அபிலாஷைகள் மற்றும் கொழும்பின் துடிதுடிப்பான வாழ்வு அனுபவத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்கும் மூன்று பிரமாண்டமான கட்டடத்தொகுதிகளை கட்டியெழுப்பியுள்ளோம்.
மேற்குறிப்பிட்ட தடைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியிலும், ஒப்பீட்டளவில் குறைந்த விலைகளில், ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட அடுக்குமனைகளைச் சொந்தமாக்கிக் கொள்ளும் அரிய வாய்ப்பினை TRI-ZEN வழங்குவதுடன், அர்ப்பணிப்பும், புத்தாக்கமும் சங்கமிக்கும் போது எதுவும் சாத்தியம் என்பதற்கான அடையாளமாகவும் திகழ்கின்றது. பகிரப்பட்ட விழுமியங்களின் மூலமாகவே John Keells Properties உடனான ஒத்துழைப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தலைவர் திரு. கிறிஷான் பாலேந்திரா மற்றும் TRI-ZEN Apartments பணிப்பாளர் சபை ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை கட்டாயமாக தெரிவித்தே ஆக வேண்டும். உங்களுடைய வழிகாட்டல், மதிநுட்பம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன இதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இன்று இச்செயற்திட்டத்தை திரைநீக்கம் செய்து வைக்கும் இத்தருணத்தில், தனது கனவை நனவாக்குவதில் உறுதியாகத் திகழ்ந்த திரு. இந்ரா சில்வா அவர்களையும் நான் போற்றிப் பாராட்டுகிறேன். நிறைவாக, வலிமையான அடையாளமாகவும், விடாமுயற்சியின் பலனாகவும், மற்றும் கொழும்பின் எதிர்காலத்தின் கலங்கரைவிளக்கமாகவும் திகழும் TRI-ZEN செயற்திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டார்.
John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியும் மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உப தலைவருமான நதீம் ஷம்ஸ் அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “கொழும்பு நகரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமையப்பெற்றுள்ளமை முதல், திறன் தொழில்நுட்பத்தை இடைவிடாது ஒருங்கிணைத்துள்ளமை வரை, நகர்ப்புற வாழ்வுக்கு TRI-ZEN மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ளது. துடிதுடிப்பான சமூகத்தை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இது, மேற்தள சினிமா, அதிநவீன உபகரண வசதிகள் கொண்ட விளையாட்டுக்கள் அறை, பல்வகை நிகழ்வுகளுக்கான அறைகள், இரண்டு நீச்சல் தடாகங்கள், இரண்டு உடற்பயிற்சிக்கூடங்கள், மேற்தள பட்மின்டன் திடல், மற்றும் ½ கிமீ நடைப்பயிற்சித் தடம் உட்பட, ஒட்டுமொத்த குடும்பத்தினதும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சகல வசதிகளையும் இது கொண்டுள்ளது. உள்ளக சலவையகம், பராமரிப்பு சேவைகள் மற்றும் கஃபே ஆகியவற்றையும் TRI-ZEN கொண்டுள்ளது.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதன் அமைவிடம் மற்றுமொரு முக்கியமான அனுகூலமாகும். பிரபல ஹோட்டல்கள், உணவகங்கள், கஃபேக்கள், இரவு கேளிக்கைகள், சுப்பர்மார்க்கெட்டுக்கள், மற்றும் சினிமாக்கள் என அனைத்தும் ஒரு சில அடி தூரத்தில் அமைந்துள்ளதுடன், அனைத்திற்கும் சௌகரியமாக சென்று வருவதையும் உறுதி செய்கின்றது.
TRI-ZEN கொண்டுள்ள திறன்மிக்க வடிவமைப்பு அதன் தனித்துவமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். உட்புற இட வசதிகள் மற்றும் பயன்பாட்டை உச்சமாக்கும் வகையில் 1-, 2-, 3-படுக்கையறைகளைக் கொண்ட அடுக்குமனைகள் மிகவும் கவனமாக சிந்தித்து வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், குடியிருப்பாளர்கள் தமது சௌகரியத்திற்கு எவ்விதமான பாதிப்புமின்றி இட வசதியை அனுபவிப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைவிட, கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைந்த விலைகளில் அடுக்குமனைகளை வழங்குகின்ற ஒரு சில நிர்மாணச் செயற்திட்டங்களில் ஒன்றாக TRI-ZEN தொடர்ந்தும் திகழ்ந்து வருவதுடன், சந்தையில் இத்தகைய வாய்ப்புக்கள் கிடைக்கின்றமை தொடர்ந்தும் அருகி வரும் நிலையில், இது அனைவருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,” என்று குறிப்பிட்டார்.
TRI-ZEN என்பது 897 அடுக்குமனைகளுடன், கொழும்பு 2, யூனியன் பிளேஸின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வளாகமாகும். அத்திவாரத்திலிருந்து திறன் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் இச்செயற்திட்டம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், இட வசதிகளின் பயன்பாட்டை உச்சப்படுத்தி, பல்வகை வசதிகள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளையும் கொண்டுள்ளது. மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.trizen.lk என்ற இணையத்தளத்தைப் பாருங்கள் அல்லது +94 702 294 294 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துங்கள்.