Eyeview Sri Lanka

கொழும்பு டெக்ஸ்டைல்ஸ் குழுமம் ‘Shop & Win Avurudu Promotion’ வெற்றியாளர்களைக் கொண்டாடி மகிழ்கின்றது

Share with your friend

சுமார் 3 தசாப்த கால அனுபவமுள்ள இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான டெக்ஸ்டைல்ஸ் குழும நிறுவன ங்கள், அண்மையில் தமது “Shop & Win Avurudu Promotion” ஐ நிறைவுசெய்தது, இது ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நாடு பூராகவும் உள்ள பல சில்லறை விற்பனைக் கடைகளிலும் சமூக ஊடகங்களிலும் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான பரிசளிப்பு விழா அண்மையில் கொழும்பு சினமன் கிரான்டில் நடைபெற்றது.

Shop & Win புதுவருட விளம்பரமானது, பெரி ஆலன் மற்றும் டென்சோ ஆகிய வர்த்தகச் சின்னங்களை மையமாகக் கொண்டது, பொது மக்களிடமிருந்து மிகவும் நேர்மறையான பதிலைப் பெற்றது, 3 வார காலப்பகுதியில் ஆயிரக்கணக்கான உள்ளீடுகள் பெறப்பட்டன, அதில் 8 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்வில், முதல் 3 வெற்றியாளர்கள் முறையே பாங்காக்கிற்குச் சென்று திரும்புவதற்கான விமானச் சீட்டு (1வது பரிசு), ஒரு சலவை இயந்திரம் (2வது பரிசு) மற்றும் ஒரு நிறுத்தி வைக்கும் மின்விசிறி (3வது பரிசு) ஆகியவற்றைச் சுவீகரித்த அதே வேளை மேலும் 5 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பிலியந்தலையின் பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் (முதலாம் பரிசு), மாலபேயின் சுபுல் கலெக்ஷன் (இரண்டாம் பரிசு), அகுரஸ்ஸவின் சீப் சைட் (3ம் பரிசு) ஆகிய சில்லறை விற்பனை நிலையங்களில் வெற்றியாளர்கள் கொள்வனவு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கொழும்பு டெக்ஸ்டைல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.பி.எஸ். சமரக்கொடி மற்றும் பணிப்பாளர்களான தமாரா சமரக்கொடி, ஷானிகா சமரக்கொடி மற்றும் பல சில்லறை விற்பனை நிலையக் கூட்டாண்மைகளின் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். 

வெற்றிகரமான ஊக்குவிப்பு குறித்து தனது கருத்துக்களை ஆர்.பி.எஸ். சமரக்கொடி பகிர்ந்துகொள்கையில், “இலங்கை ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து சென்றுள்ளதுடன், ஏறக்குறைய 30 வருடங்களாக உயர்தர ஆடைகளை உற்பத்தி செய்து வரும் நிறுவனம் என்ற வகையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சில புதுவருட விடுமுறைக் குதூகலத்தை வழங்குவது எமது பொறுப்பாகும் எமது சில்லறைக் கூட்டாளர்களின் உதவியுடன், எங்களால் ஒரு அற்புதமான ஊக்குவிப்பை நடத்த முடிந்தது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன், இது எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்றது, இது சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான உள்ளீடுகள் மூலம் தெளிவாகத் தென்படுகின்றது.”

கொழும்பு டெக்ஸ்டைல்ஸ் குழும நிறுவனங்கள் கடந்த 29 வருடங்களாக இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகின்றது. இந்நிறுவனம் நாட்டின் மிகப்பெரிய மேல்சட்டை உற்பத்தி மற்றும் விநியோக வணிகங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது, இது நம்பகத்தன்மை மற்றும் தரமான தயாரிப்புகளுக்கான நற்பெயரைப் பெற்றுள்ளது, அவை நவநாகரீக வண்ணங்களிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு கண்ணைக் கவரும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. ஸ்மார்ட் ஃபிட், ஸ்லிம் ஃபிட் அல்லது ரெகுலர் ஃபிட் – கேஷுவல், கார்ப்பரேட், மாலைநேர மற்றும் லினன் கலெக்‌ஷன்களில் இருந்து தயாரிப்பு வண்ணங்கள், அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் அன்றாடத் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய பல்வேறு உடலமைப்புகளுடன் சரியாகப் பொருந்துகிறது. 

கொழும்பு டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் தயாரிப்புகளை சீப் சைட் (அக்குரஸ்ஸ), ஹெமாரா ரிச் லுக் (காலி), சுபுல் ஃபேஷன் (மாலபே, கடுவெல மற்றும் ஹன்வெல்ல), பிரசாத் டெக்ஸ் (பிலியந்தலை), பிரசாத் ஃபேஷன் ஸ்கெயார் (கொட்டாவ மற்றும் மாத்தறை), திலகவர்தன டெக்ஸ் (கண்டி, கிரிபத்கொட மற்றும் நிட்டம்புவ), ரஞ்சன் கன்கா (கம்பஹ), கண்டி ஸ்டோர்ஸ் (குருணாகல், கண்டி, கடவத்தை மற்றும் நுகேகொட) மற்றும் அப்டவுன் (கண்டி மற்றும் கொழும்பு) உட்பட பல முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் காணலாம்.


Share with your friend
Exit mobile version