Site icon Eyeview Sri Lanka

கொவிட்-19ற்கு மத்தியிலும் இலங்கையர்களைப் பாதுகாக்கவும் வலுப்படுத்தவும் பீப்பள்ஸ் லீசிங் மற்றும் பைனான்ஸ் பிஎல்சி முன்முயற்சி எடுத்துவருகின்றது.

Share with your friend

இலங்கையில் வங்கிகளைத் தவிர்ந்த அரசாங்கத்திற்கு சொந்தமான முன்னணி நிதி நிறுவனமான பீப்பள்ஸ் லீசிங் மற்றும் பைனாஸ் பிஎல்சி ( பீப்பள்ஸ் லீசிங்) கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தேசிய பதிலளிப்புச் செயற்பாட்டினை வலுப்படுத்துவதற்காக அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அண்மையில் அன்பளிப்புச் செய்திருந்தது. பரிசோதனை மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்காக முக்கியமான மருத்துவப் பொருட்கள் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

இலங்கையில் வங்கிகளைத் தவிர்ந்த நிதிச் சேவைகளின் முன்னோடியாகத் திகழ்வதும் அரச வங்கியில் ஜாம்பவானான (பீப்பள்ஸ் பாங்க்) மக்கள் வங்கியின் துணை நிறுவனமுமான பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பைனான்ஸ் ( பீஎல்சி) தற்போது எதிர்கொண்டுள்ள நிலையை சமாளிப்பதற்காக நிதி உதவிகளை வழங்கியும் பல்வேறு பெருநிறுவன (ஊளுசு)கூட்டு சமூக பொறுப்புணர்வு முன்முயற்சிகளையும் கடந்த இரண்டு வருடகாலமாக முன்னெடுத்துவருகின்றது.

தெரிவு செய்யப்பட்ட அரசாங்க வைத்தியசாலைககளுக்கு 25 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம் சாராத உபகரணங்களை தெரிவு செய்யப்பட்ட அரச மருத்துவமனைகளுக்கு மற்றும் 3 உடனடி கொவிட் பராமரிப்பு நிலையங்களுக்கு அன்பளிப்புச் செய்தல் இ இட்டுகம கொவிட்-19 நிதியத்திற்கு 5 மில்லியன் ரூபா அன்பளிப்பு இ ‘செனகச புலமைப்பரிசில்’ திட்டத்தினூடாக ஒன்லைன் கற்றல் நடவடிக்கைகளுக்காக 53 பயனாளர்களுக்கு இலத்திரனியல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்தல் இ திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு 10 அகச்சிகப்பு வெப்பமானிகளைக் கையளித்தல் இ 21 அரசாங்க பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் பகுதிகளையும் கைகள் கழுவும் வசதிகளையும் ஏற்படுத்தித்தந்தமை ஆகியன அந்த முன்முயற்சிகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான உதவிகளுக்கு அப்பால் கடன்தவணையைச் செலுத்தும் காலத்தை நீடிக்கும் வசதியை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அமைவாக 50மூ ற்கும் அதிமான வாடிக்கையாளர்களுக்கு சட்ட பூர்வமாக கடன்தவணை நீடிப்பு அனுமதியை வழங்கியிருந்தது. இதற்கு அமைவாக முதற்தடவை கடன் தவணை நீடிப்பின்போது 57இ253 வசதிகளுக்கு ஈடான 67.96 பில்லியன் ரூபாவாகவும்; இரண்டாவது கடன்தவணை நீடிப்பின் போது 15இ722 வசதிகளுக்கு ஈடான 25.36 பில்லியன் ரூபாவாகவும் அமைந்திருந்தது. கடன்தவணை நீடிப்பிற்கு தகுதிபெறாத வாடிக்கையாளர்களுக்காக பீப்பள்ஸ் லீசிங் கடன்களை மீள்கட்டமைத்தல் மற்றும் மீள் அட்டவணைப்படுத்தல் நடவடிக்கையை எடுத்திருந்தது.

மேலும் விருந்தோம்பல் மற்றும் இலங்கையின் பயணிகள் போக்குவரத்து துறைகளுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்களுக்கு ; பீஎல்சி தொடர்ந்தும் மானியவசதியை வழங்கிவருகின்றது. இந்த இருதுறைகளும் கொவிட்-19 பெருந்தொற்றால் பெரும் பாதிப்பைக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைப் போக்குவரத்து துறையுடன் தொடர்புடைய பீஎல்சியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முதலாவது அலையின் போது 8.13 பில்லியன் ரூபா என்ற பெறுமதியை உடைய 4362 பேருந்துகளுக்கு 4 வீதமான வரி நிவாரணத்தை பிஎல்சி வழங்கியிருந்தது.

பிஎல்சி நிறுவனமானது குவைஉh சுயவiபௌ டுயமெய ஃபிட்ச் ரேட்டிங்; லங்காவிடமிருந்து ‘யூ (டமய) ழுரவடழழம ளுவயடிடந என்ற தராதரக் கணிப்பீட்டைக் கொண்டுள்ளது. அத்தோடு 7 வருடங்களாக இலங்கையின் மிகச்சிறந்த 10 பெரு நிறுவனங்களில் (கோப்பரேட்) ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள பதிவுசெய்யப்பட்ட 50 முன்னணி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் ட்ரான்ஸ்பெரன்சி கோப்பரேட் ரிப்போர்ட்டிங் மதிப்பீட்டில் 3வது இடத்தை பிஎல்சி பெற்றுள்ளது. பிராண்ட் பைனான்ஸ் லங்காவினால் பிஎல்சி நிறுவனம் நிதிச் சேவைகள் துறையில் மிகவும் பெறுமதிமிக்க பாவனையாளர் பிராண்ட் என்ற விருதையும் பிசினஸ் டுடேயின் மதிப்பீட்டின் படி இலங்கையின் 30 முன்னணி பெரு நிறுவனங்களில் 18வது இடத்தையும் பெற்றது.

பிஎல்சி மிகவும் பொறுப்புக்கூறல் மிக்கதும் அறம்சார்ந்ததுமான நிறுவனமாக இருப்பதுடன் ஒழுங்குபடுத்தல் தராதரங்களுக்கு இணக்கமாக இயங்கிவருகின்றது. பிஎல்சி தனித்துவமான பொது-தனியார் துறை நிறுவனமாக இருக்கும் நிலையில் அனைத்து பிரஜைகளையும் வரவேற்கும் சூழலை ஏற்படுத்தித்தருகின்றது. தனது பெயரிற்கு நம்பகத்தன்மையாக இருந்துவரும் பிஎல்சி அதன் ஆரம்பகாலத்திலிருந்து கடந்த 25 வருடங்களாக செயற்படுவதுபோன்று மக்களின் நலன்களை முதன்மைப்படுத்தி அதன் பணியை செயற்படுவதையே நோக்காகக்கொண்டுள்ளது.


Share with your friend
Exit mobile version