Eyeview Sri Lanka

சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான HCL, தனது இலங்கை மைய அலுவலகத்துக்காக Cinnamon Life இன் ‘The Offices’இல் 80% ஆன பகுதியை பெற்றுள்ளது

Share with your friend

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன வசதிகள் படைத்த அலுவலகத் தொகுதியான Cinnamon Life இன் ‘The Offices’ இல், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான HCL Technologies’இலங்கையில் தனது பிரதான அலுவலகத்தை நிறுவுவதற்காக மொத்த அலுவலகத் தொகுதியின் 80%  ஆன பகுதியை தெரிவு செய்துள்ளது. கொழும்பில் அமைந்துள்ள முதல் தர அலுவலக கோபுரத் தொகுதியாக Cinnamon Life அமைந்துள்ளதுடன், தனது வளாகத்தில் பெரும்பாலான சர்வதேச பல்தேசிய நிறுவனங்களுக்கு தமது அலுவலகங்களை நிறுவுவதற்கு கவர்ந்திழுப்பதாகவும் அமைந்துள்ளது.

30 அடுக்குகளைக் கொண்ட முதல் தர அலுவலகத் தொகுதியில் தமது அலுவலகத்தை நிறுவுவதற்கான உடன்படிக்கையில் John Keells Holdings (JKH) உடன் HCL டெக்னொலஜிஸ் கைச்சாத்திட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக ஒன்றிணைக்கப்பட்ட கலப்பு அபிவிருத்தித் திட்டமான Cinnamon Life க்கு, தனது அலுவலகத் தொகுதியை நிறுவுவதற்கான HCL இன் அர்ப்பணிப்பு என்பதனூடாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை கவர்ந்திழுப்பதாக அமைந்திருக்கும். தெற்காசிய பிராந்தியத்தில் வணிக மையமாக கொழும்பை திகழச் செய்வதன் நீண்ட கால வியாபார மீண்டெழல் பிரதிபலிப்பாக இது அமைந்துள்ளது.

Cinnamon Life இன் பிரதான அமைவிடம், பரந்தளவு வசதிகள் மற்றும் உயர் தரத்துக்கான அதிகளவு முக்கியத்துவம் போன்றன HCL க்கு வெற்றியீட்டும் ஒன்றிணைவாக அமைந்துள்ளன.

HCL டெக்னொலஜிஸ் கூட்டாண்மை உப தலைவர் ஸ்ரீ மதி சிவசங்கர் கருத்துத் தெரிவிக்கையில், “Cinnamon Life இன் நவீன வசதிகள் படைத்த அலுவலகத் தொகுதி என்பது, இலங்கையில் HCL இன் வளர்ச்சித் திட்டத்துக்கு சிறந்த ஒன்றிணைவாக அமைந்துள்ளது. கொழும்பின் மையப்பகுதியில் அமைந்திருப்பதுடன், HCL ஐ அடுத்த தலைமுறை சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமாக பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.” என்றார். 

2020 செப்டெம்பர் மாதம் இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் இணைந்து, இலங்கையில் HCL டெக்னொலஜிஸ் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர். அப்போது முதல், பரந்தளவு தொழிற்துறைகளைச் சேர்ந்த Fortune 500 வாடிக்கையாளர்களுக்கான சேவை வழங்கலுக்கான நிலையங்களில் ஒன்றாக உலக தேசப்படத்தில் இலங்கையை நிலைநிறுத்துவதற்கான பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

JKH இன் அதிகளவு எதிர்பார்ப்புகள் நிறைந்த கலப்பு அபிவிருத்தித் திட்டமான Cinnamon Life, நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததன் பின்னர், கொழும்பில் பிரம்மாண்டாக அமைந்திருக்கும். 800 அறைகளைக் கொண்ட ஐந்து நட்சத்திர சினமன் ஹோட்டல், விற்பனை மற்றும் களிப்பூட்டும் தொகுதி, ஒப்பற்ற மாநாட்டுப் பகுதிகள், சகல வசதிகளையும் கொண்ட அலுவலகத் தொகுதி மற்றும் இரு வேறான சொகுசு வதிவிட டவர்கள் (Cinnamon Life இல் ‘The Residence’மற்றும் ‘The Suites’) போன்றவற்றைக் கொண்டிருக்கும். 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தவிசாளர் கிரிஷான் பாலேந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL ஐ நாம் Cinnamon Life இல் கொண்டிருக்க எதிர்பார்க்கின்றோம். எதிர்வரும் ஆண்டுகளில் அந்நிறுவனத்துக்கு மேலும் வளர்ச்சிகளைப் பதிவு செய்வதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். Cinnamon Life இலுள்ள தனது அலுவலகங்களை வழிநடத்துவதில் HCL காண்பிக்கும் அர்ப்பணிப்பு என்பதனூடாக, இந்தத் திட்டத்தை நாம் ஆரம்பிக்கும் போது கொண்டிருந்த நீண்ட கால நோக்குக்கு சிறந்த ஆதாரமாகும். அடுத்த ஆண்டில் ஹோட்டல் மற்றும் ஷொப்பிங் மோல் ஆகியன திறக்கப்படவுள்ள நிலையில், தெற்காசிய பிராந்தியத்தில் கொழும்பை ஓய்வு, களிப்பூட்டல் மற்றும் விற்பனை நிலையங்களுக்கான மையமாக திகழச் செய்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.

‘city within a city’ என்பதற்கமைய, Cinnamon Life இனால் கொழும்பில் வாழ்வாதாரத்தின் தலைமையகமாக அமைந்திருப்பதுடன், விறுவிறுப்பான வாழ்க்கைமுறை அனுபவங்களை வழங்குவதற்கான உறுதிமொழியை வழங்குகின்றது. 

புகழ்பெற்ற இலங்கை-பிரித்தானிய வடிவமைப்பாளரும், கலைஞர் மற்றும் எழுத்தாளருமான சிசில் பல்மொன்ட் Cinnamon Life ஐ வடிவமைத்துள்ளதுடன், 4.5 மில்லியன் சதுர அடிப்பரப்பில் பரந்துள்ளதுடன், கொழும்பின் மாத்திரமன்றி, முழு உபகண்டத்தினதும் ஒப்பற்ற வாழ்க்கை முறை மற்றும் களிப்பூட்டும் மையமாகத் திகழும். 

மேலதிக தகவல்களுக்கு www.cinnamonlife.com எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Share with your friend
Exit mobile version