Site icon Eyeview Sri Lanka

சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் பிஎல்சி நிறுவனம், BestWeb.lk 2022  விருதுகள் நிகழ்வில் சிறப்பு விருதை (வங்கிச்சேவை மற்றும் நிதி) வென்றுள்ளது  

Share with your friend

இலங்கையின் முதல் அபிவிருத்தி நிதி நிறுவனமான சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் (SDF) நிறுவனம், LK Domain பதிவகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட BestWeb.lk 2022  விருதுகள் நிகழ்வில் வங்கிச்சேவை மற்றும் நிதித் துறை பிரிவில் சிறப்பு விருதை வென்றுள்ளது. 12 ஆவது முறையாக இடம்பெற்ற BestWeb.lk விருது வழங்கும் நிகழ்வில் புத்தாக்கமான இணையத்தளங்களைக் கொண்ட இலங்கையின் முன்னணி வர்த்தகநாமங்கள் மற்றும் நிறுவனங்கள் இடம்பெற்றன. குறிப்பிடத்தக்க வகையில், சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம், நாட்டின் பல முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிராக போட்டியிட வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டாலும் கூட, இந்நிறுவனத்தால் இப்பிரிவில் இந்த அங்கீகாரத்தைச் சம்பாதிக்க முடிந்துள்ளது.  

சர்வோதய டெவலப்மென்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செய்தித் தொடர்பாளர் இவ்விருதை வென்றமை குறித்து கருத்துத் தெரிவிக்கையில், “இன்று உலகில் நிகழும் மாற்றங்களை நாங்கள் வியத்தகு அளவிற்கு அறிந்துள்ளோம். இவற்றில் முக்கியமான ஒன்று டிஜிட்டல் நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் வருகையாகும். இந்த நவீன சூழலில், எங்கள் இணையத்தளம் இணையவெளியில் முதன்மையான ஸ்தானத்தைக் கொண்டுள்ளதுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் டிஜிட்டல் மார்க்கங்கள் மூலம் அணுகுவதற்கான அதிக நாட்டம் காணப்படுவதை எங்கள் ஆய்வுகள் புலப்படுத்தியுள்ளன. இதன் விளைவாக, எங்கள் இணையத்தளம் இலகுவான பயன்பாடு கொண்டதாக இருப்பதையும், சுவாரசியமான, ஈர்க்கக்கூடிய மற்றும் உற்சாகமான பயனர் அனுபவத்தை வழங்குவதையும் உறுதி செய்வதில் அதிக முதலீடு செய்துள்ளோம். எனவே, BestWeb.lk Awards 2022 நிகழ்வில் வங்கிச்சேவை மற்றும் நிதிப் பிரிவில் சிறப்பு விருதைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எமக்கு மிகவும் பெருமையும், பாக்கியமும், கௌரவமும் ஆகும். இந்த அங்கீகாரத்தை அடைய எங்களுக்கு உதவிய வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்,” என்று குறிப்பிட்டார். 

கவர்ச்சிகரமான மற்றும் இலகுவான பயன்பாடு கொண்ட இடைமுகம், சௌகரியமான மொழியில் மொழிபெயர்ப்பு, அணுகல்தன்மையை மேம்படுத்துவதற்காக எங்கிருந்தும் பெருப்பிக்க அல்லது சிறுப்பிக்கக்கூடிய எழுத்துருக்கள் மற்றும் விரைவான, இலகுவான குறிப்பு மற்றும் ஆதரவுக்கான அணுகலுக்கு கடன் கணிப்பொறி, அழைப்பு மூலமான தொடர்பு ஆகியவற்றை  உள்ளடக்கிய UI/UX நிபுணர்களின் துணையுடன், மிகவும் திறமையான படைப்பாற்றல் மிக்க அணியால் SDF இன் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. SDF இன் நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வரிசை, முதலீட்டாளர் தகவல் மற்றும் ஏனைய விபரங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உள்ளுணர்வு மிக்க மற்றும் எளிமையாக உட்செல்ல தள வழிசெலுத்தல் மீதும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சமூகங்களுக்கு தனியார் துறை முதலீடுகளை வழங்கும் முதன்முதலான, முறைசார் நிதி நிறுவனமாக SDF ஆனது கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்ட முதல் நற்பயனைத் தோற்றுவிக்கும் முதலீட்டு நிதி நிறுவனமாகும். SDF ஆனது பலவிதமான நிதிச் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், முகாமைத்துவம், டிஜிட்டல் வழிமுறை சந்தைப்படுத்தல், நிதி மற்றும் தொடர்புடைய பிற விடயங்களில் விசேட நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலம் வெற்றிகரமான தொழில்முயற்சியாளர்களை உருவாக்க அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துவதன் மூலம் நிலைபேறான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அதன் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை இலக்கு வைத்து இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. 

வருங்கால வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்குமாக இணையத்தளத்தின் மூலோபாய முக்கியத்துவத்தை SDF புரிந்துகொள்கிறது. BestWeb.lk 2022 விருதுகள் நிகழ்வில் SDF இன் பிரதிநிதிகள் சிறப்பு விருதை (வங்கிச்சேவை மற்றும் நிதி) ஏற்றுக்கொள்வதை படத்தில் காணலாம். இடமிருந்து வலமாக சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப முகாமையாளரான நிபுன் பெர்னாண்டோ மற்றும் தகவல் தொழில்நுட்ப முகாமையாளரான மனோஜ் பண்டார.

Share with your friend
Exit mobile version