Eyeview Sri Lanka

சார்ஜ் அச்சத்தை ஒழிக்க கார்மார்ட் (Carmart) நிறுவனம் Leapmotor C10 ஐ அறிமுகப்படுத்துகிறது

Share with your friend

மின்சார வாகனத்தை தேர்ந்தெடுக்கும் போது நுகர்வோருக்கு உண்டாகும் மிகப் பெரிய அச்சங்களில் ஒன்று, குறிப்பாக வெறிச்சோடிய இடங்களில், சார்ஜ் முடிந்து விடுமோ என்ற அச்சமாகும். இந்த அச்சத்திற்கு தீர்வாக கார்மார்ட் (Carmart) நிறுவனம் LeapMotor C10 REEV (Range Extender EV) எனும் மின்சார SUV இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாகனத்தை தனியே மின்சாரத்தில் இணைத்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

C10 SUV நகர்ப்புற பயணங்களில் ஒரு சாதாரண மின்சார வாகனம் போல் பயன்படுத்த முடியுமாக இருப்பதுடன், பயணிக்கும் போதே மீளச் சார்ஜ் செய்யும் ஜெனரேட்டரின் உதவியுடன் 50 லீட்டர் பெட்ரோல் தொட்டியை கொண்டு 1150 கிலோமீற்றர் வரை பயணிக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது.

இலங்கையில் LeapMotor இன் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக, 75 ஆண்டுகளாக புகழ்பெற்ற ப்யூஜோ (Peugeot) வாகனங்களின் உத்தியோகபூர்வ இறக்குமதியாளரும், அங்கீகரிக்கப்பட்ட பழுது பார்ப்பாளருமான கார்மார்ட் நிறுவனம் இயங்குகிறது. உலகளவில் இது ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) குழுமத்தின் ஆதரவை பெற்றுள்ளது. ப்யூஜோ (Peugeot), மசராட்டி (Maserati) உள்ளிட்ட 15 பிரபல வாகன கம்பெனிகளின் தாயகமாக விளங்கும் ஸ்டெல்லாண்டிஸ் பொறியியலாளர்கள் C10 இன் வாகன அதிர்வாங்கியினை (Suspension) சிறப்பாக மேம்படுத்தி, உயர்தர ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகின்றனர்.

நுகர்வோர்கள் புதிதாக மேம்படுத்தப்பட்ட ஸ்டெல்லாண்டிஸ் காட்சியத்தில் (யூனியன் இடம், கொழும்பு 2) ப்யூஜோ மாதிலிகளுடன், Leapmotor வாகனங்களையும் பார்வையிடலாம். தென் ஆசியாவின் இர்ரகத்திலான முதல் காட்சியகம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

C10 மாதிலி வாகனம் அழகிய வடிவமைப்பையும், அன்றாட உபயோகத்திற்கான நடைமுறைகளையும் இணைக்கிறது. பரந்த இடவசதிகளுடன் கூடிய உற்பகுதி குடும்பத்துக்கேற்ற சௌகரியத்தையும், நவீன பொழுதுபோக்கு அமைப்புக்களையும், மேம்படுத்தப்பட்ட அலங்கரிப்புக்களையும் உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள இத்தயாரிப்பில் 5 நட்சத்திர Euro NCAP பாதுகாப்பு தரச்சான்றை பெற்றுள்ளது. இது பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் பாதசாரிகள் அனைவரையும் உள்ளடக்குகின்றது. மேலும், உயர் தரத்திலான ஓட்டுநர் உதவி அமைப்புக்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. வாகன உரிமையாளர்களுக்கு மன நிம்மதியை வழங்கும் வகையில் 8 ஆண்டுகள் பேட்டரி உத்தரவாதம் மற்றும் 4 ஆண்டு அல்லது 120,000 கிலோமீற்றர் வரையிலான வாகன உத்தரவாதமும் (Extended Warranty வசதியுடன்) வழங்கப்படுகிறது.

“இலங்கையில் மின்சார வாகனங்களுக்கு இது ஒரு முக்கிய திருப்புமுனை காலம்” என்று கார்மார்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யசேந்திர அமரசிங்க தெரிவித்தார். “வர்த்தக சின்னம் மீதான நம்பிக்கையும், உள்நாட்டு விநியோகஸ்தர் மீதான மீதான நம்பிக்கையும் தான் மிக முக்கியமானவை. ஸ்டெலாண்டிஸ் மற்றும் கார்மார்ட் இணைந்து ஆதரவு வழங்குவதால், நுகர்வோர்கள் Leapmotor இனை நம்பிக்கையுடன் தேர்வு செய்யலாம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

Leapmotor C10 தற்போது கார்மார்ட் காட்சியகத்தில் (யூனியன் இடம், கொழும்பு 2) பார்வையிடவும், சோதனை ஓட்டங்களும் மேற்கொள்ளலாம். முழு மின்சார EV மாதிலி ஆரம்ப விலை ரூபா 17.4 மில்லியன் எனவும், REEV மாதிலி ஆரம்ப விலை ரூபா 20.95 மில்லியன் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் முதல் முன்பதிவு செய்த அதிர்ஷ்டசாலிகளுக்கு வாகனங்கள் விநியோகிக்கப்படும்.

தரம், பாதுகாப்பு, சிறந்த விலை, நெகிழ்வுத்தன்மை மற்றும் உலகளாவிய உள்நாட்டு கூட்டாண்மையின் நம்பிக்கையுடனான ஆதரவு ஆகியவற்றை எதிர்பார்க்கும் வாகன ஓட்டுனர்களுக்கு Leapmotor C10 மாதிலி எதிர்காலத்திற்கு உகந்த உயர்தர மின்சார வாகன அனுபவத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


Share with your friend
Exit mobile version