Eyeview Sri Lanka

சிங்கப்பூரில் நடைபெற்ற உலகளாவிய உச்சி மாநாட்டில் கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ், Asia-Pacific Wellness Clinic of the Year என்று மகுடம் சூட்டப்பட்டது.

Share with your friend

இலங்கையின் முன்னணி மருத்துவ அழகியல் சிகிச்சை மற்றும் சுகாதாரநல மருத்துவ நிலையமான கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் [Christell Luxury Wellness] GlobalHealth Aesthetics & Wellness Summit, Conference & Awards 2025 நிகழ்வில் முழு ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்தும் ஆண்டின் Wellness Clinic of the Year விருதை வென்ற இலங்கையின் முதலாவது அழகியல் சிகிச்சை நிலையமாக வரலாறு படைத்துள்ளது.

இந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற வருடாந்த உச்சிமாநாடானது, ஆசியாவின் முன்னணி அழகியல் மற்றும் சுகாதார நல நிபுணர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்று சேர்த்தது. நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் முன்னணியில் உள்ள பிராந்தியத்தின் தொழில்துறை அறிவுசார் தலைவர்கள் இந்நிகழ்வினில் கலந்து கொண்டனர்.

.அக்டோபர் 12 ஆம் திகதி நடைபெற்ற முழு நாள் மாநாட்டில் உயர்மட்ட அமர்வுகள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெற்றன, இந்த இந்நிகழ்வானது தனிநபர் மற்றும் நிறுவனங்களின் சிறந்த சாதனைகளை கௌரவிப்பதற்கும் தொழில்துறை வெற்றியைக் கொண்டாடுவதற்குமான வாய்ப்பினை வழங்கியது.

இந்த உயர் கௌரவத்திற்கு மேலதிகமாக, கிறிஸ்டெல் லக்சரி வெல்னஸ் மொத்தமாக ஐந்து பிரிவுகளில் விருதுகளை பெற்றது:

மேலும் கிறிஸ்டெல் மருத்துவநிலைய பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் மருத்துவப் பணிப்பாளரான டொக்டர் ஷானிகா அரசகுலரத்ன, இலங்கை Icon of Aesthetics & Wellness ஆக அங்கீகரிக்கப்பட்டார்.

உலக அரங்கில் இலங்கையின் மருத்துவ சுகாதாரநல வர்த்தகநாமம் ஒன்று இவ்வாறு பெரிய அளவில் அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது இலங்கையை மருத்துவ நலவாழ்வு சுற்றுலா துறையில் ஒரு எழுச்சியடைந்த இடமாக நிறுவுகிறது.

டொக்டர் ஷானிகா இவ்விருது தொடர்பாக தெரிவிக்கையில் “இந்த விருது கிறிஸ்டலுக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக அல்லாது இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று கூறினார். “இரக்கம், அறிவியல் மற்றும் பாரம்பரியத்தை இணைப்பதன் மூலம் மருத்துவ சுகாதார நல சுற்றுலாவில் நமது நாடு முன்னணியில் இருக்க முடியும் என்பதை நாம் உலகிற்கு நிரூபித்து வருகிறோம். அழகு, குணப்படுத்துதல் மற்றும் நீண்ட ஆயுளுக்கான நம்பகமான இடமாக இலங்கையை உலகளாவிய ஆரோக்கிய வரைபடத்தில் நிலைநிறுத்துவதே எமது நோக்கமாகும்”

கிறிஸ்டெல்லின் ஸ்தாபகரும் மற்றும் இணைத் தலைவருமான பேராசிரியர் ரமணி அரசகுலரத்ன தெரிவிக்கையில், “பல தசாப்தங்களாக, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் ஆயுர்வேதத்திற்கு பெயர் பெற்று திகழ்கிறது. கிறிஸ்டெல்லுடன், உலகத் தரம் வாய்ந்த சான்றுகள் சார்ந்த மருத்துவ அழகியல் நிபுணத்துவம் மற்றும் நீண்ட கால வாழ்க்கைக்கான சிகிச்சைகளைச் சேர்ப்பதன் மூலம் இந்த பாரம்பரியத்தை நாம் உயர்த்துகிறோம். இந்த அங்கீகாரமானது இலங்கை ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறந்தவற்றுடன் போட்டியிட முடியும் என்பதை நிரூபிக்கிறது.”


Share with your friend
Exit mobile version