Site icon Eyeview Sri Lanka

சிறந்த தொடர்பாடல்: வலுவான கட்டுமானத்தின் அத்திவாரம்

Young mixed race supervisor instructing workers using walkie-talkie at construction site. Contractor wearing yellow vest and blue helmet using walkie talkie to explain employees what to do. Young indian engineer working at construction site.

Share with your friend

கட்டுமானத் தொழில் சிக்கல் நிறைந்தது. நீங்கள் ஒரு கட்டுமானத் தளத்தை வெறுமனே கருத்தில் கொண்டால், அது சரியாகச் செயல்பட பல விடயங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவை சரியான நேரத்தில் இடம்பெற வேண்டும். இதை மேற்கொள்வதற்கு தொடர்பாடல் முக்கியமானது. எனினும், இத்தகைய வசதி போதுமான அளவில் இல்லாமையானது பெரும்பாலும் தொழில்துறைக்கு ஒரு பாரிய இடையூறாக உள்ளது. அடிக்கடி பல்வேறு அம்சங்களை பல்வேறு இடங்களுடன் ஒருங்கிணைக்க வேண்டும். மேலும், சில கட்டுமானத் தளங்கள் மிகவும் பாரியதாக இருக்கக்கூடும். திறன்மிக்க தகவல் தொடர்பாடல் இல்லாமல், செயல்திறன் இழக்கப்பட்டு பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுகிறது.

பாரம்பரியமாக, பட்டனை அழுத்திப் பேசுகின்ற push-to-talk (PTT)  2-வழி ரேடியோக்கள் பாரிய கட்டுமானத் தளங்களில் தகவல் தொடர்பாடல்களை எளிதாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவை குறிப்பிடத்தக்க சவால்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, உள்கட்டமைப்பு ரீதியாக இதற்கு அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுவது மற்றும் அரசாங்கம் விதிக்கின்ற பல்வேறு கட்டுப்பாடுகளால் இவை தடைப்படலாம். அதாவது, இந்த தொழில்நுட்பம் பெரும்பாலும் மிகப்பெரிய மற்றும் அதிக நிதி வசதி கொண்ட கட்டுமான தளங்களுக்கு மட்டுமே பயன்படும் வகையில் கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே, இந்த முக்கியமான தகவல் தொடர்பாடல் தேவையை பூர்த்தி செய்ய, பல கட்டுமானத் தளங்கள் மொபைல் போன்களை நம்பியுள்ளன. ஆனால் இந்த சாதனங்கள் இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்படவில்லை என்பதுடன் சிக்கலானவை. கட்டுமானத்தின் மேலதிகாரிகள் மற்றும் ஏனையோர் அடிக்கடி பல்வேறு நபர்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்தி வேண்டிய தேவையுள்ளது. இதனால் சிக்கலான நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளும் பணியை மிகவும் கடினமாக்குகிறது. மேலும், கட்டுமான தளத்தில் உள்ள பல பகுதிகள் மொபைல் போன்களுக்கு ஏற்றதாக இல்லை. இதை விட, கிட்டத்தட்ட எல்லா மொபைல் போன்களும் தளத்தின் கடுமையான நிலைமைகளுக்கு மத்தியில் உடையக்கூடியவை மற்றும் எளிதில் சேதமடையக்கூடியவை.  

இந்தக் காரணிகள் Hytera Push-to-talk over Cellular (PoC) தீர்வுகளின் மேம்பாட்டிற்கு உத்வேகம் அளித்தன. அவை கட்டுமானத் தளத்தில் திறன்மிக்க தகவல் தொடர்பாடல்களுக்கு மிகவும் பொருத்தமானவை. வழக்கமான 2G, 3G  மற்றும் LTE செலூலர் வலையமைப்புக்களைப் பயன்படுத்தி PoC செயல்படுவதால், உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்துடன், செலூலர் சேவையை மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், மொபைல் போனைப் போலல்லாமல், Hytera இன் PoC சாதனங்கள் அனைத்துத் தரப்பினருக்கும் உடனடி, தெளிவான தகவல் தொடர்பாடல்களுக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டுமானத் தளங்களில் பொதுவாக காணப்படும் கடுமையான சூழல்கள் மற்றும் கடினமான பயன்பாட்டைத் தாங்கும் வகையில் எதையும் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இது தவிர, அனைத்து சாதனங்களும் இரைச்சலான சூழலில் கூட, சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கக்கூடிய வகையில் உயர்தர ஸ்பீக்கர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் அறிந்து கொள்ள ஆர்வமுள்ள தரப்பினர் முழு விவரங்களையும் www.hytera.com மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

அவற்றின் நீடித்த உழைப்பு, நம்பகத்தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமைக்கு சான்றளிக்கும் வகையில், அபுதாபி காவல்துறை, JSC AK Altynalmas, South African Airways (Pty) Ltd, Vodafone, Expo 2020 Dubai மற்றும் பல உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் ஸ்தாபனங்களால் Hytera இன் PoC தீர்வுகள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.

Hytera Sri Lanka இன் பொது முகாமையாளரான கெவின் சன் அவர்கள், மத்தியமயமாக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பிற்காக, Hytera இன் PoC ரேடியோ சாதனங்கள் GPS கண்காணிப்பு வசதி, நீண்ட நேரத்திற்கு தாக்குப்பிடிக்கும் பேட்டரிகள் மற்றும் செலூலர் சமிக்ஞை குறைவாக உள்ள பகுதிகளுக்கு WLAN களைப் பயன்படுத்தும் திறன் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார். Hytera இன் சாதனங்கள் வரிசையில், கட்டுமானத் துறையைப் பொறுத்தவரையில் மூன்று சாதனங்கள் குறிப்பாக ஆர்வத்தை ஈர்த்துள்ளன. ஆவை முறையே PNC 370, 380 மற்றும் 550 ஆகும். இந்த சாதனங்கள் அனைத்தும் எதையும் தாங்கும் வண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளன மற்றும் கட்டுமான தளத்தின் கடினமான மற்றும் தரையில் வீழ்ந்து போகக்கூடிய இடங்களுக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், அவை அனைத்தும் நீண்ட நேரம் நீடித்து உழைப்பதற்காக பாரிய திறன் கொண்ட பேட்டரிகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் அணிகள் அல்லது தனிநபர்களுடன் உடனடியாகப் பேசவும் பயன்படுத்தப்படலாம். அனைத்தும் Bluetooth தொழில்நுட்பம் மற்றும் செவிகளில் பொருத்தும் ஒலிவாங்கி (hands-free) பயன்பாட்டிற்கு ஒத்திசையக்கூடியவை.

PNC 370 ஆனது MIL-STD-810G (இராணுவப் பாவனைத் தரம்) மற்றும் IP55 தரச்சான்று அங்கீகாரத்துடன் கடுமையான சூழல்களிலும் தாக்குப்பிடிக்கும் என்பதுடன், அதன் 3,100 mAh பேட்டரி 18 மணிநேரம் வரை செயல்படும் ஆற்றல் கொண்டது.

PNC 380 ஆனது MIL-STD-810G க்கு மேலாக IP67 பாதுகாப்பை வழங்குகிறது. இது தூசி, துணிக்கைகள் புகாததாகவும், 30 நிமிடங்களுக்கு 1 மீட்டர் ஆழமான தண்ணீரினுள் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது. இச்சாதனம் 1.5 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து விழும் போது சேதமடையாமல் தாங்கும் வல்லமை கொண்டது. மேலும் அதன் 4,000 mAh பேட்டரி 5-5-90 இயக்கச் சுழற்சியில் 24 மணி நேரத்திற்கு மேல் செயல்பட இடமளிக்கிறது. அத்துடன், இச்சாதனமானது இரைச்சலான சூழலில் ஒலியைக் குறைப்பதற்காக இரட்டை ஒலிவாங்கிகளைக் கொண்டுள்ளதால், அதிசிறந்த, தெள்ளத்தெளிவான ஒலிவாங்கி வசதியை வழங்குகின்றது. இந்தச் சாதனம் 4G நேரலை வீடியோவைக் கொண்டு, சூழ்நிலை விழிப்புணர்வை மேம்படுத்தவும், முடிவெடுப்பதை விரைவுபடுத்துவதை எளிதாக்கவும் முடியும்.

PNC 550 ஆனது IP68 தண்ணீர் உட்புகா எதிர்ப்பு மற்றும் தூசிபுகா எதிர்ப்பு, மற்றும் MIL-STD-810G சான்று அங்கீகாரம் ஆகியவற்றுக்கு மேலதிகமாக, Gorilla Glass ஆல் பாதுகாக்கப்படும் மற்றும் நேரடி சூரிய ஒளியிலும் படிக்கக்கூடிய பெரிய 5-அங்குல HD தொடுகைதிரையையும் வழங்குகிறது. மேலும் ஈரமான கைகளாலும், கையுறைகளை அணிந்தும் இயக்க முடியும். வேகமான சார்ஜிங் மற்றும் 4,000 mAh பேட்டரி கொண்ட, இச்சாதனம் ஒரு குறுகிய சார்ஜ் சுழற்சியுடன் நாள் முழுவதும் பயன்படுத்த முடியும். இந்த சாதனத்தில் உள்ள ஆடியோ உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. இது OIS உடன் 13MP பின்பக்க கேமரா மற்றும் தெளிவான மற்றும் துல்லியமான படங்களுக்கு 8MP முன்பக்க கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நன்மைகள் அனைத்திற்கும் மேலாக PNC 550  ஆனது மூன்றாம் தரப்பு பயன்பாட்டுத் தளங்களுக்கு இடமளிக்கும் வகையில் திறந்த தளமேடையில் இயங்குகிறது. திறந்த பயன்பாட்;டு நிரலாக்க இடைமுகங்கள் (API) மூலம், பொது விரைவுக் குறியீடு (QR) அங்கீகாரம், உரிமத் தகடு அங்கீகாரம் மற்றும் பிற பயன்பாடுகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை இந்த தளத்தில் உருவாக்கலாம்.

Hytera இன் PoC ரேடியோக்களின் சாதனங்கள் கட்டுமானத்துறைக்கு தளத்திற்கு உள்ளே மற்றும் வெளியே அல்லது நாடளவில், சர்வதேசரீதியாக கூட வலுவான தொடர்பாடல் வலையமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள, நம்பகமான, கட்டுபடியான, தங்குதடையற்ற மற்றும் சௌகரியமான வழியை வழங்குகின்றன. இலங்கையில் உள்ள Hytera PoC ரேடியோக்கள் பற்றிய மேலும் விபரங்களை அறிந்து கொள்ள jia.liu@hytera.com என்ற மின்னஞ்சல் மூலம் சின்டி லூ அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

Hytera தொடர்பான விபரங்கள்

Hytera அடுத்த தலைமுறை ரேடியோ தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் அதிநவீன உற்பத்தி ஆகியவற்றில் தொழில்துறையில் முன்னணியில் உள்ளது. உலகெங்கிலும் 10 சர்வதேச ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் 90 க்கும் மேற்பட்ட பிராந்திய ஸ்தாபனங்களுடன் உலகில் வேகமாக வளர்ந்து வரும் வானொலி தகவல் தொடர்பாடல் நிறுவனமாக Hytera திகழ்ந்து வருவதுடன், சீனா மற்றும் ஸ்பெயினில் மூன்று தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்களுடன் 5 மில்லியன் அலகுகளை வருடாந்தம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்மார்ட், தொழில்துறை 4.0 உற்பத்தி மையங்கள் துல்லியம் மற்றும் தரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முப்பரிமாண ஊடுகதிர் துல்லிய சோதனை மற்றும் ரோபோ செயல்பாட்டு சோதனையுடன் மிகவும் தன்னியக்க முறையில் இயங்குகின்றன. Hytera இன் தொழிற்சாலைகள் ISO 9001, ISO 14001 மற்றும் OHSA S1800 தரச்சான்று அங்கீகாரம் பெற்றவை. மேலும் கடுமையான Six Sigma முகாமைத்துவக் கட்டமைப்பைச் செயல்படுத்தியுள்ளன. இந்த தரம் நோக்கிய கலாச்சாரம், வெடிப்பு எதிர்ப்பு தயாரிப்பு சான்று அங்கீகாரங்களான ISO/IEC-80079-34, IP67 மற்றும் IP68 மற்றும் அமெரிக்க இராணுவத்தின் MIL-STD-810F  தரநிலைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை Hytera தயாரிக்க உதவுகிறது.


Share with your friend
Exit mobile version