Eyeview Sri Lanka

சூழல் பற்றி இளைஞர்கள் தலைமையிலான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் Hemas Consumer Brands

Share with your friend

உலக சுற்றாடல் மாதத்தை முன்னிட்டு, Hemas Consumer Brands (HCB) தனது நிலைபேறான சுற்றாடலுக்கான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி, தமது நிறுவன இலட்சியத்தை அர்த்தமுள்ள செயற்பாடுகளின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றது. எடுத்துக்காட்டான நடவடிக்கை மூலம் தமது தலைமைத்துவத்தை நிரூபிக்கும் விதமாக, HCB தமது மிக முக்கியமான வர்த்தகநாமமான ‘Dandex’ (டாண்டெக்ஸ்) மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு அமைப்பான ‘Clean Ocean Force’ ஆகியவற்றுடன் இணைந்து, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து, இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்கும் ஒருங்கிணைந்த நோக்குடன், காக்கைதீவு கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வு தூய்மையான, பசுமையான இலங்கையை உருவாக்குவதில் கொண்டுள்ள ஒரு உறுதியான படியைக் குறிக்கும் வகையில் அமைந்தது. இந்நிகழ்வில், 500 கிலோகிராம் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. இதில் 124 கி.கி. பொலித்தீன், 80 கி.கி. பிளாஸ்டிக், 45 கி.கி. PET போத்தல்கள், 68 கி.கி. கண்ணாடி, 67 கி.கி. பாதணிகள், 60 கி.கி. கலந்த கழிவுகள், 41 கி.கி. யோகட் கோப்பைகள், 22 கி.கி. ரெஜிபோம் ஆகியன உள்ளடங்குகின்றன. இது பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்து, நிலைபேறான வகையில் கழிவுகளை அகற்றும் பழக்கங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்தியது. காக்கைதீவில் இடம்பெற்ற இந்த கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வானது, நிறுவன பொறுப்புத் தன்மையானது வெறுமனே பேச்சு மட்டத்தில் இருக்காமல், சமூக ஈடுபாடு மற்றும் அன்றாட செயற்பாடுகளில் அமைய வேண்டும் எனும் ஹேமாஸ் நிறுவனத்தின் நிலையான நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது.

இந்நிகழ்வானது ஒத்துழைப்பு மற்றும் கற்றல் ஆகியன உயிரோட்டமாக கலப்பதை பிரதிபலித்தது. பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த கற்றல் அனுபவத்தை பெறும் வகையில் இந்நிகழ்வை HCB ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள், நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, உயிரியல் சூழல் தொகுதிகளைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்த நோக்குடன் செயற்பட்டனர். அடுத்த தலைமுறையினரை சூழலைப் பாதுகாப்பது தொடர்பான முயற்சிகளில் ஈடுபடுத்துவதன் மூலம், இயற்கை பாதுகாப்பை வாழ்நாள் முழுவதுமான பணி என உணரச் செய்து, இளம் தலைவர்களை எமது பூமியின் எதிர்காலத்தை பொறுப்புடன் கையாண்டு செல்ல ஊக்குவிப்பதே HCB இன் நோக்கமாகும். இந்த முயற்சியானது, கழிவுகளைக் குறைத்தல், பிளாஸ்டிக் மீள்சுழற்சி மற்றும் சமூகம் சார்ந்த சூழல் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய Hemas Consumer Brands நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் பரந்துபட்ட நிலைபேறான தன்மை நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாகும்.

இதுபோன்ற அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மற்றும் இளைஞர்களை மையமாகக் கொண்ட திட்டங்களை ஊக்குவித்து, தாம் கொண்டுள்ள மதிப்புகளை ஏனையோருக்கும் கற்றுக் கொடுத்து HCB முன்மாதிரியாக திகழ்கிறது. எதிர்காலத் தலைவர்களுக்கு இது போன்ற நிகழ்வில் கலந்து கொண்டு கற்றுக் கொண்டு வழிகாட்டும் வாய்ப்பை உருவாக்குவதன் மூலம், வார்த்தைகள் செயற்பாடுகளுடன் இணையும் போது தான் உண்மையான மாற்றம் நிகழும் என்பதை நிறுவனம் வலியுறுத்துகிறது.  இலங்கை அதிகமான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதை எதிர்கொள்ள புதிய தலைமுறையை ஊக்குவித்து வழிகாட்டும் முன்னோடியாக Hemas Consumer Brands செயற்படுகிறது.


Share with your friend
Exit mobile version