இலங்கையின் முன்னணி சீன உணவக வலையமைப்பான Chinese Dragon Café உணவகத்தின் புதிய கிளை யாழ் நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வளாகத்திலிருந்து 900 மீற்றர் தூரத்தில் இல 229, பருத்தித்துறை வீதி. யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்த உணவகமானது அந் நிநுவனத்தின் 9 ஆவது கிளையாகும். சீனத் தம்பதியினால் 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Chinese Dragon Café கடந்த பல தசாப்தங்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. அதன் கிளை உணவகங்கள் கல்கிஸ்ஸ, ராஜகிரிய, பெலவத்த, பம்பலபிடிய, கடுவளை, வத்தளை, கந்தானை மற்றும் நுகேகொடை ஆகிய பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. இந் நிறுவனம் அதன் முதலாவது வெளிநாட்டு கிளையை 2021 ஆம் ஆண்டில் டுபாயில் திறந்தமை குறிப்பிடத்தக்கது.

மேல் மாகாணத்துக்கு வெளியே வசிக்கும் நுகர்வோர்களுக்கும் தமது உற்பத்திகளை பெறுவதற்கான வாய்ப்பினை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே Chinese Dragon Café யாழ் கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்துக்கே உரித்தான பல்வேறு உணவு வகைகள் காணப்படுவதோடு அவற்றில் ஹொட் பட்டர் கட்ல்பீஸ், சில்லி சிக்கன் மற்றும் சீ புட் ரைஸ் வகைகளை குறிப்பிட்டுக் கூறலாம். மாறாத சுவையையும் உயர் தர நுகர்வோர் சேவையினையும் வழங்கி வரும் அந் நிறுவனம் நுகர்வோர்களின் தேவை அறிந்து இலவச விநியோகச் சேவை, கேட்டரிங், இணைய வழி முறையில் ஆடர் கொடுக்கும் வசதிகள் என பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. “வட மாகாண மக்களில் பலரும் நீண்ட காலமாக எமது நுகர்வோர்களாக எம்முடன் இணைந்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் கிளை உணவகமொன்றை திறக்க வேண்டியது அத்தியாவசிய தேவையாக நாம் அடையாளங் கண்டோம். அப் பகுதி மக்களுக்கு சேவையாற்ற கிடைத்தமையிட்டு நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.” என Chinese Dragon Café உணவகத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு கயான் பெர்னாண்டோ தெரிவித்தார். Chinese Dragon Café உறுதித்தன்மையையும் உள்நாட்டு விவசாயத்தையும் மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுடன் இணைந்து பாஸ்மதி அரிசி உற்பத்தி மற்றும் கேகாலை பிரதேசத்தில் காலாண் வளர்ப்பை மீள கட்டியெழுப்பும் பணி அவற்றின் சிலவாகும். இந்த உணவகத்தின் மேலும் பல கிளைகளை நாடெங்கிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக திரு கயான் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.