Eyeview Sri Lanka

ஜப்பானின் முன்னணி EV புத்தாக்கவியலாளர் Terra Motors இலங்கையில் பிரவேசம், உள்நாட்டு விநியோகத்தர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது

Share with your friend

முன்னணி ஜப்பானிய மின்சார வாகன போக்குவரத்து தீர்வுகளை வழங்கும் Terra Motors, இலங்கையில் தனது பிரவேசத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் அங்கமாக, தனது முன்னணி மின்சாரத்தில் இயங்கும் முச்சக்கர வண்டியான Kyoro ஐ அறிமுகம் செய்துள்ளது. Terra Motors இன் அடுத்த தலைமுறை மின்சார முச்சக்கர வண்டியாக அமைந்திருப்பதுடன், பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Terra Motors Corporation இன் முகாமைத்துவ பணிப்பாளர் கோ சுசூகி 

உச்ச வேகமான 55 km/h ஐ கொண்டுள்ளதுடன், ஒரு தடவை சார்ஜ் செய்து 200 கிலோமீற்றர்கள் வரை பயணம் செய்யக்கூடிய 11.7 kWh கொள்ளளவுடைய பற்றரியை கொண்டுள்ளது. 22pct வரை மலை ஏறும் திறனை கொண்டுள்ளதுடன், 2-வேக கியர் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. பல்வேறு நிலைகளைச் சேர்ந்த வீதி நிலைமைகளுகு்கு பொருத்தமான வினைத்திறனை Kyoro வழங்கும். 4 மணித்தியாலங்கள் எனும் அதன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்னுட்பம் மற்றும் குறைந்தளவு செயற்பாட்டு செலவு போன்றன சாரதிகளுக்கு பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், பயணிகளுக்கும் நவீன, சௌகரியமான பயணத்தை வழங்கும். Kyoro என்பது சிறியளவிலான முச்சக்கர வண்டியாக அமைந்திருப்பதுடன், கவர்ச்சிகரமான உள்ளம்சங்களையும், சக்தி வாய்ந்த வினைத்திறனையும் கொண்டுள்ளது.

இந்த நகர்வு Terra இன் நோக்கான நிலைபேறான, சிக்கனமான மற்றும் உயர் தரம் வாய்ந்த போக்குவரத்து தீர்வுகளை ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் ஏற்படுத்திக் கொடுக்கும் பிரதான மைல்கல்லை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதன் வளர்ச்சி மூலோபாயத்தின் அங்கமாக, இலங்கையில் ஏக விநியோக பங்காளர்களை எதிர்பார்த்துள்ளது. அதனூடாக தூய மற்றும் நவீன போக்குவரத்து தீர்வுகளை பின்பற்றுவதை துரிதப்படுத்த எதிர்பார்க்கிறது.

முன்னணி தயாரிப்பான Kyoro முச்சக்கர வண்டி

இலங்கையில் இளைஞர் தொழில் வாய்ப்பின்மை சுமார் 20 சதவீதமாக அமைந்திருக்கும் சூழலில், இளம் சாரதிகள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு Kyoro ஊடாக வருமானமீட்டக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க Terra Motors எதிர்பார்க்கிறது. இந்தியாவின் பாரிய முச்சக்கர வண்டி சந்தையில் இந்த வழிமுறை ஏற்கனவே வெற்றியளித்துள்ளது. நிலைபேறான போக்குவரத்துத் தீர்வுகள், ஆயிரக் கணக்கான வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்துள்ளது.

சிக்கனம், வினைத்திறன் மற்றும் பன்முகத்தன்மை போன்ற அம்சங்களுடனான Kyoro, இலங்கையின் பரந்தளவு போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும். சூழலுக்கு நட்பான சுற்றுலாப் பயணிகளுக்கான முச்சக்கர வண்டிகள் முதல் சரக்கு போக்குவரத்துக்கான தெரிவுகள் வரையில் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் தன்மையை கொண்டுள்ளது. நகர போக்குவரத்து மற்றும் வணிக போக்குவரத்து தீர்வுகளுக்கு வலுவூட்டக்கூடிய வகையில் Kyoro வடிவமைக்கப்பட்டுள்ளது.

Terra Motors Corporation இன் முகாமைத்துவ பணிப்பாளர் கோ சுசூகி கருத்துத் தெரிவிக்கையில், “ஜப்பானிய நிறுவனம் எனும் வகையில், எமது உயர்ந்த தொழில்னுட்பம் மற்றும் நம்பிக்கையை வென்ற பொறியியல் நுட்பங்களை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாம் பெருமை கொள்கிறோம். ஆசியாவில் நிலைபேறான போக்குவரத்துக் கட்டமைப்பை மாற்றியமைக்கக்கூடிய பிரதான சந்தைகளில் இலங்கையும் ஒன்றாக அமைந்துள்ளதாக நாம் காண்கிறோம். Kyoro ஐ அறிமுகம் செய்வது மற்றும் உள்நாட்டு பங்காளர்களுடன் கைகோர்ப்பதனூடாக, தொழில் வாய்ப்புகளை உருவாக்க நாம் எதிர்பார்ப்பதுடன், எரிபொருளில் தங்கியிருப்பதை குறைப்பது மற்றும் தூய மற்றும் வினைத்திறனான போக்குவரத்து சூழல்கட்டமைப்பை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இலங்கைக்கு Terra Motors விஸ்தரிப்பினூடாக, அதன் பரந்த சர்வதேச வளர்ச்சி மூலோபாயம் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. ஏக விநியோகத்தர்களுடன் கைகோர்ப்பதனூடாக, நாட்டினுள் நம்பிக்கையை வென்ற அதிவேக மின்சார முச்சக்கர வண்டி நாமமாக Kyoro ஐ திகழச் செய்ய எதிர்பார்க்கின்றது. ஜப்பானிய தரம், நிலைபேறாண்மை மற்றும் நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளின் அடிப்படையில் சர்வதேச EV நகர்வுடன் இலங்கையை இணைப்பதற்கும் எதிர்பார்க்கின்றது.இந்த நடவடிக்கையினூடாக ஜப்பான் மற்றும் இலங்கையிடையே அதிகரித்துச் செல்லும் பொருளாதார மற்றும் வியாபார கைகோர்ப்புகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளது. Terra Motors இன் பிரவேசத்தினூடாக தொழில்னுட்பம், முதலீடு மற்றும் நிலைபேறான விருத்தி போன்றவற்றில் பரஸ்பர அனுகூலம் எற்படும் என்பதில் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையே கைகோர்ப்புக்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுமுள்ளது. வியாபார கோரிக்கைகள் அல்லது விநியோக வாய்ப்புகளுக்கு, எம்மை ev.auto@terramotors.co.jp ஊடாக அல்லது WhatsApp ஊடாக +91 91477 52921 தொடர்பு கொள்ளவும்.


Share with your friend
Exit mobile version