Site icon Eyeview Sri Lanka

ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தில் புரட்சிகரமான வீட்டு உரிமையைப் பெற்றுக்கொடுக்க கவர்ச்சிகரமான அடமான வசதிப் பொதியை வழங்க HNB உடன் ஒன்றிணையும் John Keells Properties

Share with your friend

ஜா-எல Viman குடியிருப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமாகவுள்ளவர்களுக்கு கவர்ச்சிகரமான அடமான வசதித் திட்டமொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு John Keells Properties நிறுவனம் HNB நிறுவனத்துடன் மூலோபாய கூட்டொப்பந்தமொன்றில் இணைந்துள்ளது. இந்தக் கூட்டாண்மையின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு HNB இன் நிதியளிப்பு வாய்ப்புக்களின் நன்மையைப் பெற்றுக் கொள்வதற்கும், Viman இல் தமது வீட்டுக் கனவை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கும் வாய்ப்புக் கிட்டும்.

வட்டி வீதங்கள் மற்றும் நிலைபேறான வருமான வாய்ப்புக்கள் குறைந்திருக்கும் சந்தர்ப்பத்தில் தமது கனவு இல்லத்தில் வாழ்வதற்கு விரும்புபவர்களுக்கும், தமது முதலீடுகளை பல்வகைப்படுத்த விரும்புவர்களுக்கும் ஆதனத்துறையில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமான தெரிவாக இருக்கும். 

நிதி ரீதியாகக் காணப்படும் சிரமங்களைக் குறைத்து வீடொன்றுக்கு உரிமையாளர்களாக வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களைப் பலப்படுத்த வேண்டும் என்பதில் John Keells Properties நம்பிக்கை கொண்டுள்ளது. நிம்மதியான மற்றும் நிதி ரீதியிலான நெகிழ்வுத் தன்மையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே அவர்களின் நோக்கமாகும்.

John Keells Properties நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் நதீன் ஷம்ஸ் குறிப்பிடுகையில்,  “எமது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மதிப்பை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். எமது புதிய குடியிருப்புத் திட்டமான ஜா-எல Viman  திட்டத்துக்கு புத்தாக்கமான அடமானப் பொதியொன்றைப் பெற்றுக் கொடுக்க உடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.  கொழும்புடன் கொண்டுள்ள அதன் விதிவிலக்கான இணைப்பு, பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் சூரிய சக்தி மூலம் நிலைபேறான வாழ்க்கைக்கு நாம் அர்ப்பணிப்புடன் இருப்பதுடன், எங்கள் குடியிருப்பாளர்களுக்கு தனித்துவமான மற்றும் துடிப்பான வாழ்க்கை அனுபவத்தை வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளோம். நவீன வாழ்க்கையை மறுவரையறை செய்வதற்கும் அமைதியான சூழலில் உண்மையான சமூக உணர்வை உருவாக்குவதற்கும் ஏதுவாக ஜா-எல Viman  அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பல்வேறு நிதித் தேவைகளை உள்ளடக்கும் வகையிலும், வாழ்க்கைத் தரத்தில் எவ்வித சமரசமும் செய்யாது கொள்வனவு செய்பவர்களைப் பலப்படுத்துவதற்காக இந்த அடமான வசதிப் பொதி HNB இனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட இந்த அணுகுமுறையானது ஆதனத்துறையை மறுவரையறை செய்வதற்கும், வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு John Keells Properties கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கும் இதுவொரு சான்றாகும்.

6 ஏக்கர் நிலப்பரப்பு விஸ்தீரணத்தில், சௌகரியமான நவீன 418 தொடர்மாடி வீடுகளைக் கொண்டிருக்கும்  Viman குடியிருப்புத் திட்டமானது, சிறிய நகரின் கட்டமைப்பின் அழகைத் தக்கவைக்கும் அதேநேரம், கொழும்பு நகரை இலகுவில் அணுகக் கூடியதாகவும், பாதுகாப்பு, குடும்பங்களுக்கு நட்பான சூழலை வழங்கும் வகையிலும்வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜா-எல நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தக் குடியிருப்புக்கள், சுப்பர்மார்க்கட்டுக்கள், வங்கிகள், உணவகங்கள் மற்றும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இலகுவான அணுகலைக் கொண்டுள்ளன. மேலும், Viman குடியிருப்புத் திட்டமானது கொழும்புத் துறைமுக நெடுஞ்சாலைக்கு அருகாமையில் அமைந்திருப்பதுடன், ஜா-எல மற்றும் கொழும்புக்கு இடையே விதிவிலக்கான இணைப்பை எளிதாக்குகிறது.  பசுமை மிக்க மத்திய தோட்டப்பகுதியில் பல்வேறு வசதிகள் காணப்படுகின்றன. நீச்சல் தடாகம், உடற்பயிற்சிக் கூடம், தியான கூடம், கிளப்ஹவுஸ், சிறுவர்கள் விளையாட்டு இடம், சைக்கிள் ஓட்டம் மற்றும் நடைபாதைக்கான இடம், பல்வேறு தேவைகளுக்கான வெளியக விளையாட்டரங்கம், மின்னியல் வாகனங்களுக்கான மின்னேற்ற வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் அடங்குகின்றன. 

“John Keells Properties நிறுவுனத்துடனான எங்களின் கூட்டாண்மையானது, தொழில்துறைக்கான அவர்களின் தொடர்ச்சியான சிறப்பிற்கும் பங்களிப்புகளுக்கும் ஒரு சான்றாகக் காணப்படுகிறது. அது மாத்திரமன்றி வீட்டு உரிமையாளர்களுக்கு உயர்தர நிதியளிப்பு விருப்பங்களை வழங்குவதில் எங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறது. குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு நிதியளிப்புத் வாய்ப்புக்கள் குறைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்தத் திட்டமானது ஆர்வமுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஒரே மாதிரியான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த மூலோபாய கூட்டாண்மை தனிநபர்களை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புடன் முழுமையாக ஒருங்கிசையும் வகையிலும், நிதி நெகிழ்வுத்தன்மை மற்றும் மன அமைதியை உறுதி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது. அதேவேளை வீட்டுக்கான உரிமை தொடர்பில் அவர்களுக்குத் தெளிவான பாதையொன்றையும் காண்பிக்கிறது” என HNB இன் உதவிப் பொது முகாமையாளர் (தனிப்பட்ட நிதிச் சேவை) கஞ்சன கருணாகம தெரிவித்தார்.

‘Viman’ குடியிருப்புத் திட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களுக்கு John Keells Properties நிறுவனத்தை +94 706 062 062  என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளவும். 


Share with your friend
Exit mobile version