ஜோன் கீல்ஸ் குழுமத்தின் நெருக்கடி நிலைக்கான பதில் நடவடிக்கை எடுக்கும் முன்முயற்சியானது பல சமூகங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Share with your friend

2022 இன் முற்பகுதியில் இலங்கையின் எதிர்பார்திராத சமூக-பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஜோன் கீல்ஸ் குழுமம் அதன் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் மூலம் பல்முனை கொண்ட நெருக்கடி நிலைக்கான பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. தீவு முழுவதிலும் உள்ள குழுமத்தின் வணிகங்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்த முயற்சியானது, “நாளைக்கான தேசத்தை மேம்படுத்துதல்” என்ற குழுவின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு பார்வைக்கு இணங்க, சமூகங்களை ஆதரிப்பதிலும், வலுவூட்டுதன் மூலமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. 

இந்த முன்முயற்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்துகின்றன. ஆறு முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட இந்தத் திட்டங்களின் நோக்கம், சமூகங்கள் முகங் கொடுக்கும் உடனடி சவால்களை எதிர்கொள்ளும் அதே வேளையில், நீண்ட கால தன்னம்பிக்கையை வளர்ப்பதற்குத் தேவையான திறன்களையும் வளங்களையும் அவர்களுக்கு வழங்குவதாகும். வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழ்நிலை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு காலத்திற்குப் பிறகு, முன்முயற்சிகளுக்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்கள் மற்றும் சமூகங்களிடமே இருக்கும்.

வீட்டுத்தோட்ட திட்டம் – முன்முயற்சியின் கீழ் தொடங்கப்பட்ட முதல் திட்டங்களில் ஒன்றாகும் – குழுமத்தின் வணிகங்களைச் சுற்றியுள்ள இடங்களில் அமைந்துள்ள 1,284 குடும்பங்களுக்கு, வீட்டுத் தோட்டத்தை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் உள்ளீடுகள் மற்றும் அதைப் பற்றிய நடைமுறை புரிதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியானது, ஊட்டச்சத்து அணுகல் மற்றும் மலிவு விலையை மேம்படுத்த குடும்பங்களைத் தங்கள் சொந்த உணவை வளர்க்க ஊக்குவிக்கிறது. பல பங்கேற்பு குடும்பங்கள் தங்கள் வீட்டுத் தேவைகளை திறம்பட சந்திக்க ஏதுவான அறுவடையை பதிவு செய்தன.

மற்றொரு முக்கியமான முன்முயற்சியானது நிலையான விவசாயத் திட்டமாகும், இது சினமன் ரிசார்ட்டைச்; சுற்றியுள்ள மொத்தம் 19 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 28 விளைநிலங்களை ஆதரிப்பதில் ஒரு முக்கிய பங்கை வகித்தது. இந்த முயற்சி உள்ளூர் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், இந்தப் பகுதிகளில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பையும் மேம்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம், சொட்டு நீர் பாசனம், பூச்சித் தடுப்பு வலைகள், நானாவித பத்திர கலவை (பாலித்தீன் மூடு படை) தொழில்நுட்பம், தூவல் நீர் பாசன முறை போன்ற நவீன விவசாய முறைகள் தொடர்பான உள்ளீடுகள், உபகரணங்கள், தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை விவசாயிகள் பெற்றனர். 

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் துணை முயற்சியாக, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியால் ரணாலயிலும் கீல்ஸ் ஃபுட் புராடக்ட்ஸால் பன்னலை யிலும் மாதிரி பண்ணைகள் அமைக்கப்பட்டன. அதே நேரத்தில் சினமன் பெந்தோட்ட பீச் மற்றும் சினமன் லொட்ஜ் ஹபரன ஆகிய இடங்களில் பச்சை வீடு  நிறுவப்பட்டன. இந்த முன்முயற்சிகள் ஊழியர்கள் மற்றும் சமூகங்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பது மட்டுமில்லாமல், ஊழியர்கள், சமூக உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த விவசாய நடைமுறைகள் பற்றிய அறிவைப் பரிமாறிக்கொள்ள விலைமதிப்பற்ற கற்றலுக்கான  வசதியையும்  வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு தேசிய சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சு மற்றும் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ், சினமன் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் பிராப்பர்டீஸ் ஆகிய குழுமத்தின் வணிகங்களுடன் இணைந்து ‘பாசல் திரியா’ எனும் பாடசாலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட பதினொரு பாடசாலைகளிலிருந்து இருந்து 2,951 மாணவர்கள் மேல், கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் வடமத்திய மாகாணத்தில் உள்ள மூன்று முன்பள்ளிகளுக்கு தினசரி பாடசாலை உணவு வழங்கப்பட்டது. மார்ச் 31, 2023 நிலவரப்படி, பத்து பாடசாலைகளில் சமையலறைகள் பொருத்தப்பட்டுள்ளன மற்றும் மொத்தம் 125,977 வேளை  உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளுக்கான சத்தான உணவை கூடுதலாக வழங்குவதற்காக பாடசாலைகளுக்கு ஒரு நிலையான சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்கும் நோக்கில், ஒரு பாடசாலையில் ஒரு முன்னோடி வீட்டுத்தோட்ட திட்டம் தொடங்கப்பட்டது. பாடசாலைத் தோட்டத்தைத் தயாரிப்பதில் குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது, அதன் முதல் அறுவடையில் பெற்ற காய்கறிகள்   126 மாணவர்களுக்கு உணவாகப் பயன்படுத்தப்பட்டன.

கல்வியை மையப்படுத்தி, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை அதன் ஆங்கில மொழி புலமைப்பரிசில் திட்டத்தை விரிவுபடுத்தியது (சாதாரண தரத்தில் கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது), உயர் கல்வி புலமைப்பரிசில் திட்டம் (உயர் தரம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகைகளை வழங்குதல்) மற்றும் டிஜிட்டல் கற்றல் முன்முயற்சி (அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உயர் தரம் மற்றும் சாதரண தர மாணவர்களுக்கு டேப் சாதனங்கள் மற்றும் டேட்டா பேக்கேஜ்களை வழங்குதல்) இது பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் முயற்சியாகும். 2022/23 நிதியாண்டில், இந்த முயற்சிகள் மொத்தம் 1,140 மாணவர்களுக்கு ஆதரவளித்துள்ளன. மேலும், நீண்டகால பாடசாலை மூடல்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை நிவர்த்தி செய்ய கூடுதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (ஜேகேஎச்),  கொழும்பு பங்குபரிமாற்றத்தில் இலங்கையின் பெரியளவிலான நிறுவனமாக பட்டியலிடப்பட்ட கூட்டு நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (JKH) இன் துணை நிறுவனமாகும். 7 வகையான  பரந்துபட்ட தொழில் துறைகளில் 70 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடாத்தும் ஜோன் கீல்ஸ் குழு, 2020 ஆம் ஆண்டில் வணிகத்தில் காலடி வைத்து மற்றும்  இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு பங்களித்த 150 ஆண்டுகளைக் கொண்டாடுகிறது. 14,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிப்பதோடு  ஜோன் கீல்ஸ் குழுமம் எல்.எம்.டி இதழால் கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையின் ‘மிகவும் மதிப்பிற்குரிய நிறுவனம்’ என்று பெயர் பெற்றுள்ளது. உலக பொருளாதார மன்றத்தின் முழு அங்கத்தவராக இருக்கும் அதே வேளை ஐ.நா குளோபல் கொம்பக்டின் அங்கத்துவத்தையூம் கொண்ட ஜே.கே.எச் ஆனது ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் ஊடாக  “எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்” நோக்கினை நோக்கி பயணிக்கின்றதுடன் இலங்கையில் பிளாஸ்டிக் மாசினை குறைக்க ஒரு வினையூக்கியாக ‘பிளாஸ்டிசைக்கிள்’ ஊடாக செயற்படுகின்றது.


Share with your friend