ஆதன நிர்மாணத்தில் இலங்கையின் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் (John Keells Properties), அதன் சமீபத்தைய குடியிருப்பு நிர்மாணத் திட்டமான VIMAN Ja-Ela திட்டத்தின் கட்டம் 1 ன் கட்டமைப்பை இவ்வாரம் பூர்த்தி செய்து கட்டுமானத்தில் பிரம்மாண்டமான சாதனையை நிலைநாட்டியுள்ளது.

இது நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில், கிறிஷான் பாலேந்திரா (தலைவர் – ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி), வர்த்தகநாமத் தூதுவர் சமரி அத்தபத்து, ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள், இது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதற்கொண்டு, VIMAN Ja-Ela திட்டத்தின் நிர்மாணப் பணிகளை முன்னெடுத்து, அயராது உழைத்து வருகின்ற செயற்திட்ட அணியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
“VIMAN Ja-Ela திட்டத்தில் அங்கம் வகிப்பது, வெறுமனே ஒரு வர்த்தகநாமத் தூதுவர் என்று அன்றி, வலுவான சமூகங்கள் மற்றும் சிந்தனைபூர்வமான வடிவமைப்பு ஆகியவற்றை மதிக்கும் ஒருவர் என்ற வகையில், என்னைப் பொறுத்தவரையில் மிகவும் அர்த்தமுள்ள ஒன்றாக அமையப்பெற்றுள்ளது. இக்குடியிருப்புத் திட்டம் அமைக்கப்பட்டு வரும் இடத்திற்கு நேரடியாக வருகை தந்து பணிகளைக் காணவும், இந்த சாதனையில் பங்குபற்றவும் வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். மேலும், இலங்கை மக்களுக்கு விசேடமான குடியிருப்புத் திட்டம் ஒன்றைத் தோற்றுவித்து வருகின்ற இச்செயற்திட்டத்துடன் கைகோர்த்துள்ளதையிட்டு நான் பெருமை கொள்கின்றேன்.”
-— சமரி அத்தபத்து, வர்த்தகநாமத் தூதுவர் – VIMAN, தலைவி – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், ஜா-எல இடம்மாறல் மையத்திலிருந்து வெறும் 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ள VIMAN Ja-Ela, முக்கிய நகர மையங்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை வழங்குவதுடன், இக்குடியிருப்பானது அமைதியான, அழகிய சூழலில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டு வருகின்ற இத்திட்டமானது, மிகக் கவனமாகத் திட்டமிட்டப்பட்டு வடிவமைக்கப்படும் 418 அடுக்குமனைகளைக் கொண்டுள்ளதுடன், நிலப்பரப்பில் 60% பசுமை நிறைந்த இடங்களைப் பேணுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை, இயற்கை, தாராளமான இட வசதி, மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றுக்கு முன்னுரிமையளிக்கின்ற வாழ்வுக்கான சூழலைத் தோற்றுவிக்கின்றது.
“வெறுமனே ஒரு குடியிருப்பு நிர்மாணச் செயற்திட்டம் என்பதற்கும் அப்பால் திட்டமிடப்பட்ட ஒன்றாக VIMAN Ja-Ela அமைந்துள்ளது. தாராளமான இட வசதி, பச்சைப்பசேல் பின்னணி, மற்றும் போக்குவரத்து வசதி ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற புறநகர் வாழ்விடத்தின் புதிய வடிவமாக இது காணப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே, வெறுமனே வீடுகளை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால், ஒரு உண்மையான சமூக உணர்வை நாம் வளர்த்து வருகிறோம். தளவமைப்பு முதல் தளபாட வசதிகள் வரை எமது பெருந்திட்டத்திலேயே அனைத்தையும் செதுக்கியுள்ளோம். இன்றும், எதிர்காலத்திலும் மக்கள் வளம் காண்பதற்கு, அனைவரையும் அரவணைக்கின்ற, முற்போக்கான சிந்தனை கொண்ட வாழ்விடங்களை நிர்மாணிப்பதில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.”
— நயன மாவில்மட, தலைவர் – ஆதனம் மற்றும் பொழுதுபோக்குத் துறை, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்
“இந்த சாதனையானது நிர்மாணத் துறையின் சீரான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சிப் பயணத்தைக் குறித்து நிற்பதுடன், ஒவ்வொரு துறையிலும் எமது அணிகளின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. கட்டமைப்புப் பணிகளின் கட்டம் 1 தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், எமது வாடிக்கையாளர்களான வீட்டு உரிமையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும், சௌகரியமான, மற்றும் நீண்ட கால மதிப்பை வழங்கும் வீடுகளை வழங்குவதில் மற்றுமொரு படி நெருங்கியுள்ளோம்.”
— இனோக் பெரேரா, துறைத் தலைவர் – ஆதனத் துறை
வயது வேறுபாடின்றி, குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் அன்றாட வாழ்வை வளப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட குடியிருப்பு சமூக மையம் (கிளப்ஹவுஸ்), நீச்சல் தடாகம், வெளிப்புற சமூக நிகழ்வுகளுக்கான இட வசதிகள் உள்ளிட்ட, மிகக் கவனமாகத் திட்டமிட்டப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ள வாழ்க்கைமுறை வசதிகளை VIMAN Ja-Ela வழங்குகிறது.
இயற்கையோடு இணைந்த வாழ்விட வசதியை வழங்க வேண்டும் என்ற தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, தனது சுற்றுச்சூழல் அடிச்சுவட்டைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சூழல்நேய அம்சங்கள் பலவற்றை VIMAN Ja-Ela உள்ளிணைத்துள்ள அதேசமயம், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதனத்தின் நீண்ட கால மதிப்பையும் மேம்படுத்துகிறது. பொது ஏற்பாட்டு இட வசதிகளுக்கு மின்வலுவூட்டுவதற்காக கூரை மேல் பொருத்தும் சூரிய மின்னுற்பத்திக் கட்டமைப்புக்களும் இங்கு அடங்கியுள்ளது. இவ் ஏற்பாடானது மின்வலு நுகர்வைக் குறைத்து, தேசிய மின் விநியோகத்தில் நாம் தங்கியிருப்பதைக் குறைக்கின்றது. அத்துடன், சூழல் மீது அக்கறை கொண்ட குடியிருப்பாளர்களுக்கு, எதிர்காலத்திற்கு ஏற்ற இடமாக மாற்றியமைக்கும் வகையில், மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பாவனையை ஊக்குவிப்பதற்காக பொது EV சார்ஜ் மையங்களையும் VIMAN Ja-Ela வழங்குகின்றது.
இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை வசதிகளுடன், அடுக்குமனை ஒவ்வொன்றும் செயல்பாட்டு தளவமைப்புக்கள் மற்றும் நவீன வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதுடன், பச்சைப்பசேல் காட்சிகள் மற்றும் தாராளமான வெளிப்புற இட வசதிகளையும் கொண்டுள்ளன.
கட்டம் 1 ன் பணிகளை 2027 ல் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கை எங்கிலும், துடிதுடிப்பான, நிலைபேணத்தக்க, மற்றும் அன்னியோன்னியமான சமூகங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டிஸ் நிறுவனத்தின் நோக்கத்தின் அடுத்த அத்தியாயமாக VIMAN Ja-Ela அமைந்துள்ளது.