இலங்கையில் முன்னணி ஆதன நிர்மாண நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties – JKP), தனது VIMAN Ja-Ela செயற்திட்டத்தின் கட்டம் 2 க்கான கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அதன் முன்னணி புறநகர குடியிருப்பு செயற்திட்டத்தை உருவாக்குவதில் மற்றுமொரு அடியை அது வெற்றிகரமாக முன்னெடுத்து வைத்துள்ளதை இது குறித்து நிற்கின்றது.

கட்டம் 1 ன் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் தற்போது இந்த இலக்கு நிலைநாட்டப்பட்டுள்ளதுடன், இச்செயற்திட்டத்தை நிர்மாணிப்பதில் அனைத்து கட்டங்கள் மத்தியிலும் சீரான வளர்ச்சியைப் பேணி வருவதில் JKP ன் அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. கட்டங்கள் 1, 2 மற்றும் 3 ன் 80% க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளதுடன், VIMAN Ja-Ela மீதான வலுவான கேள்வி மற்றும் நம்பிக்கையை இது பிரதிபலிப்பதுடன், இந்த உந்துக்தியுடன், கட்டம் 4 ற்கான ஆரம்பத்தையும் இந்நிறுவனம் வெகு விரைவில் தொடர ஆவலாக உள்ளது.
இதனைக் குறிக்கும் வகையில் நிர்மாணத் தளத்தில் விசேட நிகழ்வொன்றும் இடம்பெற்றதுடன், ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் அணி இதில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், போற்றத்தக்க வகையில் VIMAN Ja-Ela கட்டுமானப் பணிகளின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த அணிகளின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு முயற்சி ஆகியனவே மூலகாரணம்.
ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவத்தின் ஆதனத் துறைக்கான தலைமை அதிகாரி இனோக் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: “கட்டம் 1 ன் கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, வெறும் ஒரு மாதத்தில் கட்டம் 2 ன் கட்டுமானப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை வெறுமனே ஒரு இலக்கு என்பதற்கும் அப்பாற்பட்டது. இது VIMAN Ja-Ela செயற்திட்டத்திற்குப் பின்னாலுள்ள மிகக் கவனமான திட்டமிடல், இணைப்புப் பணிகள், மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது. ஒவ்வொரு கட்டத்தின் பூர்த்தியும், அனைத்து வசதிகளையும் கொண்ட, வளம் கொழிக்கும் சமூகத்தை நோக்கிய எமது குறிக்கோளை நனவாக்கும் இலக்கினை நோக்கி எம்மை மேலும் நெருங்கச் செய்வதுடன், எமது அணிகள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்ற விடா முயற்சி மற்றும் உத்வேகத்தையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.”
கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஜா-எல இடம்மாறல் மையத்திலிருந்து வெறும் 4 கிமீ தூரத்தில் அமைந்துள்ள VIMAN Ja-Ela செயற்திட்டமானது, அதிநவீன வசதிகளையும், தாராளமான பசுமை பின்னணிகளையும் கலந்த ஒன்றாகக் காணப்படுகின்றது. ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் வியாபித்துள்ள இச்செயற்திட்டம், இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட 418 அடுக்குமனைகளைக் கொண்டுள்ளதுடன், வளமான சமூக வாழ்வை மேம்படுத்துவதற்காக பூந்தோட்டங்கள், மரங்கள் மற்றும் வெளிப்புற இட வசதிகளுக்கு இந்நிலப்பரப்பில் 60% க்கும் அதிகமான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து வெகு வேகமாக கட்டுமானத்தின் இரண்டு கட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த கட்டங்களுக்கு நிர்மாணப் பணிகள் முன்னேற்றம் காண்பதில் VIMAN Ja-Ela தொடர்ந்தும் அதே உந்துசக்தியுடன் பயணித்து வருகின்றது. கிளப்ஹவுஸ், நீச்சல் தடாகம், நடைபாதை வழித்தடங்கள், விளையாட்டுகளுக்கான இடங்கள், மற்றும் சைக்கிளோட்ட வழித்தடங்கள் உள்ளிட்ட பல வசதிகளுடன், பொதுவான இடங்களில் சூரிய மின்னுற்பத்தி ஏற்பாடுகள், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதிகள் போன்ற நிலைபேற்றியல் சார்ந்த ஏற்பாடுகளும் இலங்கையில் புறநகர வாழ்வில் புதிய தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டியுள்ளன. VIMAN Ja-Ela குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் பிந்திய செய்திகளுக்கு Ja Ela Apartments | Viman Ja Ela Official Site என்ற இணையப்பக்கத்திற்குச் செல்லுங்கள் அல்லது 0706 068 068 என்ற இலக்கத்தின் மூலமாக ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.