Eyeview Sri Lanka

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் அரசு சாரா பல்கலைக்கழக பிரிவில் நாடளாவிய ரீதியில் 3வது இடத்தில் மகுடம் சூடிய SLIIT  

Share with your friend

கல்வியில் சிறப்பை வெளிப்படுத்தி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்தது இலங்கையின் முதல்தர அரசு சாரா பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றுள்ள SLIIT , நாடளாவிய ரீதியில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்கள் மத்தியில் 3வது இடத்தைப் பெற்றுள்ளது. பெருமைக்குரிய டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025இற்கு அமைய தொழில்துறைக்கு ஏற்ற பட்டப் பாடத்திட்டங்களைக் கொண்ட இலங்கையின் முதல்தர பல்கலைக்கழகமாக SLIIT  புதியதொரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. நிஜஉலக தொழில்துறையின் கேள்விக்கு ஏற்ற வகையில் கல்வித்துறையைக் கொண்டுவருவதில் SLIIT  காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழகத் தரப்படுத்தல் 25வது வருடமாகத் தனது தரப்படுத்தலை மேற்கொண்டிருப்பதுடன், உயர் கல்வித் துறையில் விரிவான மற்றும் சமநிலையான ஒப்பீட்டை மேற்கொள்வதால் பரந்தளவில் அங்கீகாரம் பெற்ற தரப்படுத்தலாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களைப் பட்டியல்படுத்துவதில் இதற்கு நற்பெயர் இருப்பதால், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் மத்தியில் ஈர்க்கக்கூடிய மூன்றாவது இடத்தை SLIIT  பெற்று மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது.

கற்பித்தல், ஆராய்ச்சி, சர்வதேசக் கண்ணோட்டம், திறன் பரிமாற்றம் மற்றும் தொழில்துறையுடனான இணைப்புப் போன்ற நம்பிக்கையான உள்ளக விடயங்களை வழங்கும் கவனமாகத் தெரிவுசெய்யப்பட்ட குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இறுதித் தரவரிசையைத் தீர்மானிப்பதில் இந்தக் குறிகாட்டிகள் சரியான முறையில் மதிப்பிடப்படுவதுடன், இது நிறுவனத்தின் செயல்திறன் குறித்த முழுமையானதொரு பார்வையை வழங்குகின்றது.

SLIIT  இன் உபவேந்தர்/பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் லலித் கமகே குறிப்பிடுகையில், “டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025ல் இலங்கையில் 3வது இடத்தில் SLIIT  தரப்படுத்தப்பட்டமையை பெருமையுடன் பகிர்ந்துகொள்கின்றேன். நீண்டகாலமாகக் கல்வியில் சிறந்து விளங்கும் இலங்கையின் முன்னணியான பல்கலைக்கழகங்களான மொரட்டுவை, ஜயவர்தனபுர மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களுடன் கல்விசார் சிரப்பில் சேர்ந்து நிற்பதற்கான பாக்கியம் எமக்குக் கிடைத்துள்ளது. பல்வேறு பெருமைக்குரிய பல்கலைக்கழகங்களை விஞ்சிச் சென்று SLIIT  அரச சார்பற்ற முதல் தர பல்கலைக்கழகமாகவும், தொழில்துறைக்கு ஏற்ற பட்டக் கல்வித்திட்டங்களை வழங்கும் நிறுவனமாகவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த மைல்கல் கல்வித் தரம், ஆய்வு மற்றும் புதுமையான வேலைகள் மூலம் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்வதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு உண்மையான தாக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. கல்வியின் வெற்றிக்கு அப்பால், மாணவர்களின் அனுபவத்தை விஸ்தரிப்பது, சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெறுவதை உறுதிப்படுத்துவது, முன்னோடியான சிந்தனை, எப்பொதும் உருவாகும் உலகத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்தும் தொழில்துறைக்கு ஏற்ற கல்வியை வழங்குவதில் நாம் சமமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளோம். எமது கல்விசார் பணியாளர்கள், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் எம்மைச் சுற்றியுள்ள சமூகம் ஆகியவற்றின் இணைந்த முயற்சியின் பலனாகவே இந்த வெற்றியை அடையமுடிந்துள்ளது. இது எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்கள் மற்றும் வெற்றிக்கு எம்மை இட்டுச்செல்லும்” என்றார்.

இந்தத் தரப்படுத்தலில் SLIIT  உள்ளடக்கப்பட்டிருப்பதானது அடுத்த தலைமுறை கல்வியியலாளர்களை வலுப்படுத்துவது மற்றும் சிறந்த கற்பித்தல், ஆராய்ச்சியை நடத்துவதில் எமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. தொழில்துறைக்கான பங்களிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு ஆய்வு மாணவர்களின் அதிக விகிதாசாரத்தை ஈர்ப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும் இந்தத் தரப்படுத்தல் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.

இந்தத் தரப்படுத்தல் தொடர்பில் மகிழ்;சியை வெளிப்படுத்திய SLIIT  இன் கல்வித்துறைக்கான பிரதித் துணைவேந்தர் பேராசிரியர் ராகுல அத்தலகே குறிப்பிடுகையில், “எங்களின் பட்டக் கல்வித் திட்டங்கள், ஆய்வு மற்றும் தொழில் உறவுகளின் பண்புகளை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையில் டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் மூன்றாவது இடத்தை SLIIT  பெற்றுக்கொண்டமை கல்வியின் சிறப்பில் எமது நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றது” என்றார்.

SLIIT  இன் சிரேஷ்ட பிரதித் துணைவேந்தரும், சிரேஷ்ட கல்வியியல் நிர்வாகியுமான பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ குறிப்பிடுகையில், “டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரப்படுத்தல் 2025 இல் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறித்து நாம் பெருமையடைகின்றோம். இந்த சாதனையானது கல்விசார் சிறப்பு, ஆய்வு, வலுவான தொழில் கூட்டாண்மை மற்றும் உலகளாவிய ஈடுபாடு ஆகியவற்றில் SLIIT  இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்;கின்றது. உலகளாவிய ரீதியில் எமது பிரசன்னம் மற்றும் பங்குடமைகளை விஸ்தரித்து தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வரும் நாம், அடுத்த தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதிலும், இலங்கை சமூகம் மற்றும் உலகக் கல்விசார் சமூகத்துக்கும் அர்த்தமுள்ள பங்களிப்பைச் செலுத்துவதில் நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்” என்றார்.

எதிர்காலத்தில், SLIIT  தனது கல்வி மற்றும் ஆய்வுக்கான திறன்களை மேலும் மேம்படுத்துவதற்கும், கல்விக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்குப் போட்டி நிறைந்த மாற்றுத் தெரிவாகத் தன்னை நிலைநாட்டுவதிலும் அர்ப்பணிப்புடன் உள்ளது. பல்கலைக்கழகம் அதன் தற்போதைய நிலையை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் அதன் நிறுவன சிறப்புத் தளத்தை உயர்த்துகிறது, வரும் ஆண்டுகளில் சமூகத்திற்கு இன்னும் பெரிய பங்களிப்பை எதிர்பார்க்கிறது. மற்றும் இதன் ஊடாக வழங்கப்படும் பட்டக் கல்வித் திட்டங்கள் குறித்து மேலதிக தகவல்களை www.sliit.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.


Share with your friend
Exit mobile version