டோக்கியோ சீமெந்து குழுமத்தின் சிறந்த நிலைபேறாண்மை செயற்பாடுகளுக்காக, அண்மையில் நடைபெற்ற இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 நிகழ்வில் இரு பெருமைக்குரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குழுமத்தின் புத்தாக்க பெறுமதி சேர் தயாரிப்பான TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு, நிலைபேறான புத்தாக்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. குறைந்த காபன் வெளிப்பாடு மற்றும் ஆரோக்கியமான வசிப்பிட சூழலை ஏற்படுத்துவதற்கான பங்களிப்பு ஆகியவற்றுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. உள்ளக வாயு தரத்தை மேம்படுத்தும் அதன் low Volatile Organic Compound (VOC) உள்ளடக்கத்திறக்காக இந்த விசேட விருது வழங்கப்பட்டிருந்தது. திருகோணமலையில், டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையத்துக்காக இரண்டாவது விருது வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையத்தின் பிளாட்டினம் சான்றளிக்கப்பட்ட GREEN கட்டட அலங்கார அம்சங்களுக்காக பிரத்தியேகமான சூழலுக்கு நட்பான பொறியியலுக்கான கௌரவிப்பாக அமைந்திருந்தது. டோக்கியோ சீமெந்து குழுமத்தின் நிலைபேறாண்மைக்கான ஆழமான மற்றும் தொழிற்துறை முன்னோடியான அர்ப்பணிப்பை இந்த இரு விருதுகள் மேலும் உறுதி செய்துள்ளன. இவை, அவற்றின் கூட்டாண்மை DNA இல் உள்ளடங்கியுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றிலும் ஆழமான ஊடுருவியுள்ளன.

13ஆவது World Construction Symposium (WCS) மற்றும் இலங்கை நிலைபேறாண்மை விருதுகள் 2025 ஆகியன, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலகவின் பங்கேற்புடனும், பேராசிரியர். சித்ரா வெடிக்கார, பேராசிரியர். யசங்கிகா சந்தநாயக்க, கலாநிதி. ரொஹான் கருணாரட்ன, பொறியியலாளர். சாகர குணவர்தன, கலன அல்விஸ் மற்றும் பொறியியலாளர் சாலிய களுஆராச்சி ஆகியோரின் பங்கேற்புடனும் நடைபெற்றது. இந்த ஆண்டின் நிகழ்வை Ceylon Institute of Builders (CIOB), மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டட வணிகவியல் மற்றும் முகாமைத்துவ ஆய்வு அலகு மற்றும் கட்டட பொறியியல் திணைக்களம் ஆகியவற்றின் பங்காண்மையுடன் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வை நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அங்கீகரித்திருந்தது. வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, இலங்கையின் நிர்மாணத் துறையில் சிறந்த நிலைபேறாண்மை முயற்சிகளை உள்வாங்கி, சூழலுக்கு பொருத்தமான வியாபார செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.
நிலைபேறான நிர்மாண செயற்திட்ட விருதைப் பெற்ற திருகோணமலை, டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையம், டோக்கியோ சீமெந்து உற்பத்தி ஆலையின் நிர்வாக மையப்பகுதியில் இயங்குகிறது. குழுமத்தின் ISO 17025 சான்றளிக்கப்பட்ட R&D மற்றும் தர உறுதிப்படுத்தல் ஆய்வுகூடங்களை தன்னகத்தே கொண்டுள்ளதுடன், நான்கு தன்னியக்கமயப்படுத்தப்பட்ட சீமெந்து ஆலைகளையும், இரு பயோமாஸ் வலுப் பிறப்பாக்கல் ஆலைகளையும் ஒன்றிணைத்துள்ளது. அவற்றினூடாக முழு உற்பத்தி செயன்முறையிலும் நிலைபேறான வலு பயன்படுத்தப்படுகின்றதுடன், ஒப்பற்ற வினைத்திறன் மற்றும் சூழல் வினைத்திறன் போன்றன பேணப்படுகின்றன. இந்த நிலையத்தில் 200 இருக்கைகளைக் கொண்ட நவீன வசதிகள் படைத்த கேட்போர்கூடம் அமைந்துள்ளதுடன், மாநாடுகள், கல்விசார் நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சென்றடைவுச் செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்கப் பயன்படுகின்றன.
இலங்கை பசுமை கட்டட சம்மேளனத்தினால் 2019 ஆம் ஆண்டில் Platinum GREEN® Building சான்றைப் பெற்றுள்ள, இந்த தொழினுட்ப நிலையம், சூழலுக்கு நட்பான அலங்கார அம்சங்களைக் கொண்டுள்ளதுடன், வலு மற்றும் வள வினைத்திறனை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. 75kW சூரிய வலுவினால் இயங்கும் இந்த நிலையம், மின் வழங்கல் கட்டமைப்பில் தங்கியிருக்கும் தன்மையை குறைத்துள்ளது. வடகிழக்கு நோக்கிய அமைவினால், இயற்கை சூரிய ஒளி கிடைப்பதுடன், வெப்ப ஊடுகடத்தலை தவிர்ப்பதற்காக low-E glass பொருத்தப்பட்டுள்ளது. LED ஒளியூட்டல் மற்றும் தனித்தனியாக கட்டுப்பாடுகளுடனான zoned HVAC கட்டமைப்புகள் போன்றவற்றினால் வலுப்பாவனை குறைக்கப்படுகிறது. நீர் பாதுகாப்பு ஏற்பாடுகளில், கழிவுநீர் மீள்சுழற்சிக் கட்டமைப்பு, மற்றும் வாயு குளிரூட்டியினூடாக பெறும் நீரை விவசாய செயற்பாடுகளுக்கு பயன்படுத்தல் போன்றவற்றினூடாக, சூழலுக்கு ஏற்படும் பாதகமான தாக்கம் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
BS EN 12004 நியமத்தின் கீழ் C2ETS1 வகுப்புப் பிரிவை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட பிளென்டட் ஹைட்ரோலிக் சீமெந்து, வகைப்படுத்தப்பட்ட மணல், பொலிமர்கள் மற்றும் சேதன சேர்மானங்கள் போன்றவற்றின் உயர்மட்ட ஒன்றிணைவுக்காக நிலைபேறான புத்தாக்க விருதை TOKYO SUPERBOND Premium Tile Adhesive வெற்றியீட்டியிருந்தது. செம்மையாக்கப்பட்ட சேர்மானம், குறைந்தளவு சீமெந்தை பயன்படுத்துவதுடன், உயர் வினைத்திறனை வழங்கி, அதன் காபன் வெளிப்பாட்டை பெருமளவு குறைக்கிறது. பொலிமர் – மாற்றியமைக்கப்பட்ட இந்த adhesive இனால், மேம்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித் தன்மை மற்றும் உயர் ஒட்டும் வலிமை போன்றன வழங்கப்படுவதுடன், வெப்ப காலநிலைகளில், பெருமளவு மாறுபடும் வெப்பநிலைகளுக்கு பொருந்தக்கூடியதாக அமைந்திருக்கச் செய்துள்ளது. அத்துடன், வெடிப்பு அல்லது பொப்பிங் ஏற்படுவதை தவிர்த்து, பெரியளவிலான டைல்கள் பதிப்பிற்கு உகந்ததாக அமைந்திருக்கச் செய்துள்ளது. குறைந்த VOC பொருளடக்கமான, 0.36 w/w% (5.2 g/L, ITI இனால் பரிசோதிக்கப்பட்டது), செரமிக் டைல் அதெசிவ்களுக்கான U.S. Green Building Council’இன் 65 g/L எல்லைப் பெறுமதியை விட மிகவும் குறைந்ததாகவும் அமைந்திருப்பதுடன், உள்ளகப் பகுதிகளுக்கு மிகவும் பாதுகாப்பான, ஆரோக்கியமான தெரிவாகவும் அமைந்துள்ளது.
தொழிற்துறையின் முன்னோடி எனும் வகையில், சூழலில் ஏற்படும் தாக்கத்தை தணிப்பதற்கு, புத்தாக்கத்தை ஒன்றிணைப்பதற்கு, வடிவமைப்பு மற்றும் தனது செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றில் நிலைபேறாண்மை போன்றவற்றுக்காக மூலோபாய முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க வலு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் முக்கியத்துவம் பெறுவதுடன், 24MW திறன் கொள்ளளவைக் கொண்டுள்ளது. நிலைபேறாண்மை செயற்பாடுகளை பின்பற்றுகின்றமையை ஊக்குவிக்கும் வகையில், டோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நிலைபேறாண்மை தொடர்பில் குழுமத்தின் வாக்குறுதிக்கமைய பல்வேறு பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், டோக்கியோ சீமெந்து, இலங்கையின் நன்மதிப்பைப் பெற்ற உயர் உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் விநியோகத்தர் எனும் அந்தஸ்த்தை எய்தியுள்ளது. சமூக நலன்பேணல் மற்றும் சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளை நாட்டுக்கு வளமூட்டும் செயற்பாடுகளிலும், மக்கள் மற்றும் சூழல் போன்ற நடவடிக்கைகளை வெற்றிகரமாக ஒன்றிணைப்பதனூடாக டோக்கியோ சீமெந்து குழுமம், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னணி பங்காளர் எனும் தனது நிலையை மீள உறுதி செய்துள்ளது.
படங்கள்:
Sri Lankan Sustainability Awards 2025 நிகழ்வில் TOKYO SUPERBOND Premium Tile Adhesive இற்கு நிலைபேறான புத்தாக்க விருது வழங்கப்பட்டிருந்தது | Sri Lankan Sustainability Awards 2025இல், திருகோணமலை டோக்கியோ சீமெந்து தொழினுட்ப புத்தாக்க நிலையத்துக்கு, நிலைபேறான நிர்மாண செயற்திட்ட விருது வழங்கப்பட்டிருந்தது |
திருகோணமலையிலுள்ள டோக்கியோ சீமெந்து தொழினுட்ப சிறப்பு நிலையத்தினால், தொழினுட்ப மற்றும் நிர்வாக செயற்பாடுகள் மற்றும் R&D வசதிகள் முன்னெடுக்கப்படுகின்றன | டோக்கியோ ஈஸ்டர்ன் சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்யும் விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்தும்வகையில், தொழினுட்ப சிறப்பு நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவூட்டும் பகுதிகள் |