ஆம் திகதி உலக பெருங்கடல் தினம் கொண்டாடப்படுகிறது, இது பிரான்ஸில் ஜூன் 9 முதல் 13 வரை நடைபெறவுள்ள ஐக்கிய பெருங்கடல் மாநாட்டிற்கு முன்னதாக உள்ளது, அங்கு உலகத் தலைவர்கள் உலகளாவிய பெருங்கடலைப் பாதுகாப்பதற்கான தங்கள் உறுதிமொழிகளை கலந்துரையாட உள்ளனர். இதற்கிடையில், மே 25 ஆம் திகதி கேரள கடற்கரையில் நிகழ்ந்த MSC ELSA 3 கப்பல் விபத்தின் கடுமையான தாக்கங்கள் தொடர்ந்து வெளிப்படுகின்றன, எரிபொருள் மற்றும் ஆபத்தான சரக்குகளின் அச்சுறுத்தல் கடலில் தொடர்ந்து காணப்படுகிறது. அதேவேளை உடைந்த கன்டெய்னர்களில் உள்ள அறியப்படாத சரக்கு மற்றும் பிளாஸ்டிக் துகள்களின் பெரும் அளவு இந்தியாவில் கேரளா மற்றும் தமிழ்நாடு கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன. மழைக்கால வானிலை நிலவும் சூழலில் முதல் சுற்றுச்சூழல் மதிப்பீடு மற்றும் சுத்தப்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கிறது. இலங்கையில் நிகழ்ந்த X-Press Pearl பேரழிவுக்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பகுதியின் கடல் உயிரினங்கள், தனித்துவமான கடற்கரை சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் மீனவர் சமூகங்கள் மற்றொரு கப்பல் பேரழிவை எதிர்கொள்கின்றன, இதன் முழு அளவு இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

கன்டெய்னர்களில் என்ன இருந்தது, மற்றும் கடற்கரை வாழ்வாதார இழப்பு, உள்ளூர் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்? – கிரீன்பீஸ் இந்தியாவின் பிரச்சாரகர் அம்ருதா எஸ். நாயர் வினவினார்.
“நாங்கள் உள்நாட்டு அதிகாரிகள் மற்றும் MSC நிறுவனத்தை MSC ELSA 3 கப்பலின் முழுமையான சரக்குப்பட்டியலினை வெளியிட வலியுறுத்துகிறோம். தெற்கு இந்தியாவில் உள்ள மக்களுக்கு இதை அறிய உரிமை உள்ளது, மேலும் விபத்து நிகழ்ந்து இரண்டு வாரங்களாகியும் விபத்து நிகழ்ந்த சூழ்நிலைகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் MSC ClaremontMSC நிறுவனத்திடமிருந்து விரிவான சுத்தப்படுத்துதல் மற்றும் இழப்பீட்டுத் திட்டம் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பெருங்கடல் மாநாட்டில் கப்பல் தொழிலின் கார்பன் குறைப்பு மற்றும் உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாடு குறித்து விவாதிக்கப்படும்போது, MSC போன்ற பாரிய அளவில் இலாபம் ஈட்டும் கப்பல் நிறுவனங்கள் இத்தகைய பேரழிவுகளில் தங்கள் பொறுப்பை இனி தவிர்க்க முடியாது, ஏனெனில் கடல் உயிரினங்கள் பிளாஸ்டிக் துகள்களால் பல சிரமங்களுக்கு உள்ளாகின்றன, மற்றும் மீனவர் சமூகங்கள் பட்டினியால் துன்பப்படுகின்றனர்.”
ஒற்றுமையுடன், பேரழிவு நிகழ்ந்த உடனேயே கிரீன்பீஸ் கேரளாவிகு ஒரு ஆவணப்படுத்தல் குழுவை அனுப்பியது. மேலும் கடந்த வாரத்தில், இந்த அமைப்பு பங்களாதேஷின் குல்னா, இலங்கையின் காலி மற்றும் கொழும்பு, இந்தியாவின் ஒடிசா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பெருங்கடல் பங்குதாரர்கள், இளைஞர் குழுக்கள் மற்றும் மீனவர்களுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் இப்பகுதி முழுவதும் ஒரே செய்தியைப் பரப்ப: “ஒரு பெருங்கடல், பல உயிர்கள்” செய்ற்பட்டது.
“உலக பெருங்கடல் தினத்தைக் கொண்டாடும் இந்த நிகழ்வுகளின் மூலம், எங்கள் பிராந்திய பங்குதாரர்களுடன் இணைந்து நம்பிக்கையின் ஒரு கூட்டு செய்தியை வழங்கவும் விரும்புகிறோம். எங்கள் தலைவர்கள் உலகளாவிய உயர் கடல் ஒப்பந்தத்தை விரைவாக அங்கீகரித்து, நமது பெருங்கடல்களில் 30% பாதுகாக்க வேண்டும் [1], மேலும் சிறு அளவிலான மீனவர்களின் குரலையும், கடற்கரை சமூகங்களின் ஞானத்தையும் கேட்டு, கடலோர வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் உள்ளூர் பொருளாதாரங்களுக்கு அடிப்படை மட்டத்தில் இருந்து லாபம் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என கிரீன்பீஸ் தெற்கு ஆசியாவின் பிரச்சாரகர் அனிதா பெரேரா கருத்து தெரிவித்தார்வ்
Media Contacts:
Amruta s Nair, Campaigner at Greenpeace India
Phone: +918304010458
Email: avinash.chanchal@greenpeace.org
Anita Perera, Campaigner at Greenpeace South Asia – Sri Lanka
Phone: +94773925597
Email: aperera@greenpeace.org