பாரிய நெருக்கடி நிலைகளின் போது, வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பும் ஏற்படுகின்றது என்பதற்கு கடந்த இரு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தன. ஜுலை மாதத்தில் நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய எரிபொருள் சவாலிலிருந்து மீள்வதற்காக, தேசிய எரிபொருள் அனுமதி QR குறியீடு முறை அறிமுகம் செய்யப்பட்டு, இந்த நிலை ஓரளவுக்கு கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடிந்திருந்தது.
அதிகரித்த டிஜிட்டல் முதிர்ச்சித் தன்மையின் பயனாக, மின்சக்தி மற்றும் எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தலைமைத்துவத்தின் கீழ், 2022 ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் இலங்கையில் வாகன உரிமையாளர்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு QR குறியீட்டு முறையை பயன்படுத்துவது உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதனூடாக இந்தப் பிரச்சனையை தீர்க்கும் வகையில் முன்னர் பயன்படுத்தப்பட்டிருந்த வினைத்திறனற்ற செயன்முறைகளும் இல்லாமல் செய்யப்பட்டன. செப்டெம்பர் 19 ஆம் திகதி வரையில், நாட்டின் மொத்தமாக 6,272,385 நுகர்வோர் இந்த முறையில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக தம்மை பதிவு செய்துள்ளனர். இந்த முறை அறிமுகம் செய்யப்பட்ட 7 வார காலப்பகுதியில், 34,444,886 கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்று எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்தது. இதனூடாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இது அமைந்திருக்காமல், தொழில்நுட்பத்தினூடாக எய்தக்கூடிய பிரயோக ரீதியான, வினைத்திறனான, சௌகரியமான தீர்வுகளுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் சேவைகள் அமைப்பான FITIS அங்கத்துவ நிறுவனமான MillenniumIT ESP இனால் இந்த தேசிய எரிபொருள் அனுமதி முறைமை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதற்காக டயலொக் நிறுவனத்துடன் கைகோர்த்திருந்தது. இந்த நிறுவனமும் FITIS இன் தொடர்பாடல் பிரிவின் அங்கத்தவராக அமைந்துள்ளது.
இலங்கையிலுள்ள 9 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன் பாவனையாளர்களில், 7.9 மில்லியன் பேர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் 6 மில்லியன் பேர் இதுவரையில் QR குறியீட்டு எரிபொருள் அனுமதிக் கட்டமைப்புக்கு தம்மைப் பதிவு செய்துள்ளனர். இந்தக் கட்டமைப்பின் வெற்றிகரமான செயற்பாட்டை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகாமையில் காணப்பட்ட நெரிசல் குறைவடைந்துள்ளதனூடாக காணக்கூடியதாக உள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பொறுப்புக்கூறலும் அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச ரீதியில் வேகமாக வளர்ந்து செல்லும் டிஜிட்டல் மயமாக்கலுக்கமைய, தேசிய தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கச் செய்வதற்கான கேள்வியையும் அதிகரித்துள்ளது. முன்னர் QR குறியீடுகள் பயன்படுத்துவதற்காக முனைந்திருந்த போதிலும், (கொவிட்-19 தொற்றுப் பரவல் உச்சமாக காணப்பட்ட போது, அவற்றை கண்டறிய பயன்படுத்தியிருந்த தேசிய முயற்சிகள் மற்றும் LankaQR முறைமை போன்றன) நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து மிகவும் வெற்றிகரமாக அமைந்த திட்டமாக இது அமைந்துள்ளது.
இதர ஆசிய பசுபிக் வளர்ந்து வரும் சந்தைகளுடன் ஒப்பிடுகையில், இணைப்புத்திறன், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், டிஜிட்டல் செயற்பாடுகளில் முதலீடுகள் போன்றவற்றில் வலிமையை வெளிப்படுத்தும் திறனை இலங்கை கொண்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் காணப்படும் டிஜிட்டல் மாற்றீடு மொத்த சனத்தொகையில் முறையே 29% மற்றும் 28% ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் நாட்டின் 36% ஆக அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டின் “Unlocking Sri Lanka’s Digital Capacity,”எனும் தலைப்பிடப்பட்ட மெக்கின்சி அறிக்கையின் பிரகாரம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 இலங்கை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், நாட்டின் ஒட்டு மொத்த டிஜிட்டல் உள்ளீடு புள்ளி 35 ஆக காணப்படுவதுடன், இது சர்வதேச புள்ளியான 33 உடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் இலங்கையை தனிப்பட்ட ரீதியில் ஒப்பிடும் போது, இலங்கை பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற போதிலும், சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு நிகரானதாக வளர்ச்சியடைக்கூடியதாக அமைந்துள்ளது.
பணமில்லாக் கொடுப்பனவு முறைகள், ஒன்லைன் கொடுப்பனவு கட்டமைப்புகள் போன்றவற்றுக்கு நாடு கடந்த சில வருடங்களில் துரிதமாக பின்பற்ற பழகியிருந்தமை மற்றுமொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. உதாரணமாக, JustPay என்பதனூடாக மாத்திரம் (FITIS – டிஜிட்டல் சேவைகள் பிரிவின் அங்கத்துவ அமைப்பான LankaPay இனால் முன்னெடுக்கப்படுவது) கடந்த 12 மாதங்களில், சுமார் 13 மில்லியன் கொடுக்கல் வாங்கல்கள் பதிவாகியுள்ளன. இவற்றினூடாக 55 பில்லியன் ரூபாய் எனும் உயர்ந்த தொகை கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதர உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவு கட்டமைப்புகளான WEBXPAY, Orel Pay, PayHere, HelaPay, FriMi, IPay மற்றும் PayMaster போன்ற FITIS இன் டிஜிட்டல் சேவைகள் பிரிவின் அங்கத்துவ அமைப்புகளால், குறிப்பிடத்தக்களவு கொடுக்கல் வாங்கல்கள் முன்னெடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நாட்டு மக்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்வது மற்றும் பெறுவது போன்றவற்றை துரிதப்படுத்தியுள்ளது. மேலும், Pickme போன்ற போக்குவரத்து வாடகை வாகன அழைப்பு, பொருட்கள் கொள்வனவு appகளினூடாக, நாட்டின் டிஜிட்டல் தயார்நிலைக்கு சிறந்த எடுத்துக்காட்டல் வழங்கப்பட்டுள்ளது.
FITIS இன் டிஜிட்டல் சேவைகள் பிரிவின் உப தலைவர் ஒமார் சாஹிப் கருத்துத் தெரிவிக்கையில், “உள்நாட்டில் இதர பல தொழில்நுட்ப கட்டமைப்புகள் தயாரிக்கப்பட்டு, எமக்கு பெருமளவு வினைத்திறனாகவும், நேரத்தை மீதப்படுத்தி, அதிகளவு உற்பத்தித்திறனுடன் செயலாற்றவும் பங்களிப்பு வழங்கப்படுவதுடன், எதிர்காலத் தலைமுறைக்காக சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதிலும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக அமைந்துள்ளன.” என்றார்.
பெருளவு டிஜிட்டல் முன்னுரிமைகளுக்காக அடிப்படையில் டிஜிட்டல் முறையில் இலங்கையர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பை வழங்குவது என்பது இலங்கை மக்களின் திறனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும், டிஜிட்டல் குடியுரிமையை ஊக்குவிக்கும் கட்டமைப்புகளை உருவாக்கினால் மாத்திரம் இது போதுமானதாக அமைந்திருக்காது. தனியார் மற்றும் அரச துறைகளில் டிஜிட்டல் முன்னுரிமைத் தன்மையை ஊக்குவிக்கக்கூடிய புதிய வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் போன்றன தேசிய மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறைக்கு அவசியமாக காணப்பட்ட கவனிப்பைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், இலங்கை தகவல் தொழில்நுட்பத் துறையின் சம்மேளனம் (FITIS) 1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்டிருந்தது. இன்று, நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையின் பிரதான அமைப்பாக FITIS திகழ்வதுடன், வன்பொருள் பிரிவு, மென்பொருள் பிரிவு, கல்விப் பயிற்சிப் பிரிவு, தொடர்பாடல் பிரிவு, டிஜிட்டல் சேவைகள் பிரிவு, நிபுணத்துவ பிரிவு, அலுவலக தன்னியக்க செயற்பாடுகள் பிரிவு மற்றும் நிபுணத்துவ ஆலோசனைப் பிரிவு ஆகிய பிரதான தொழிற்துறை பிரிவுகளை உள்வாங்கி அமைந்துள்ளது.