Eyeview Sri Lanka

நகைச்சுவையில் இருந்து சினிமா வரை;Aadil Osman இன் வெற்றிப் பயணம்

Share with your friend

வெற்றி என்பது பெரும்பாலும் சாதாரணத்தை தாண்டி பார்க்கும் மக்களுக்கே கிடைக்கிறது. நம்மில் பலருக்கு TikTok என்பது ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு தளமாகும். ஆனால் சிலருக்கு, TikTok என்பது வெறும் வேடிக்கை மற்றும் Trend களுக்கு அப்பாற்பட்டது. அது அவர்களின் கனவுகளை அடைய ஒரு சக்திவாய்ந்த ஆரம்பமாக அதைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஆதில் உஸ்மானை எடுத்துக் கொள்ளுங்கள். அவரது நகைச்சுவை வீடியோக்கள் மற்றும் வைரலான சமூக ஊடக வலைத்தளமான “Cheese Kottu” மூலமாகவும் நீங்கள் அவரை அறிந்திருக்கலாம். ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் அந்த மனிதருக்கு இன்னும் பெரிய கனவுகள் உள்ளன. ஒருநாள் கோலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பதே அவரது கனவு.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அவருக்கு ஏற்பட்ட உற்சாகத்தை கற்பனை செய்து பாருங்கள். இந்த மகத்தான திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் மாறியது மட்டுமல்லாமல், அவரது நடிப்புக்காக முத்தையா முரளிதரனிடமிருந்து பாராட்டையும் பெற்றார். இருப்பினும், அவரது பயணம் திரைப்பட தளத்தில் ஆரம்பமாகவில்லை. கொரோனா ஊரடங்கின் போது எடுத்த ஒரு TikTok வீடியோவில் இருந்துதான் அவரது பயணம் ஆரம்பமானது.

ஆதிலின் வெற்றிப் பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல. பாடசாலை காலத்தில் நாடகங்களுக்கு திரைக்கதை எழுதி நடிப்பதன் மூலம் வளர்ந்த நடிப்பின் மீதான இயல்பான ஈடுபாட்டில் இருந்துதான் இது ஆரம்பமாகியது. ஆனால், digital content உருவாக்குவதன் சாத்தியக்கூறுகளை அவர் கண்டுபிடித்தது கொரோனா ஊரடங்கின் போதுதான். ‘ஊரடங்கின் போது நான் மிகவும் சலிப்படைந்திருந்தேன்,’ என்று ஆதில் நினைவுகூர்கிறார். ‘கடினமான காலகட்டத்தைக் கடந்து செல்லும் மக்களை மகிழ்விக்க இந்த நேரத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தேன்?’ என அவர் தெரிவித்தார். 

தனது படைப்பாற்றலுக்கான வெளிப்பாடாக ஆரம்பித்தது விரைவில் மிகப் பெரிய ஒன்றாக மாறியது. ஒரு மாதத்தில் தினமும் ஒரு வீடியோவை வெளியிட ஆரம்பித்த ஆதில், குறுகிய காலத்திலேயே இணைய சமூகத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்தார். அவரது நகைச்சுவை நாடகங்கள், இலகுவான உள்ளடக்கம் மற்றும் ரசிக்கக் கூடிய lip-sync வீடியோக்கள் இத்தகைய கடினமான நேரத்தில் மக்களின் மனநிலையை உயர்த்த தேவைப்பட்டன. சிறிது நேரத்திற்குள், அவர் பெரும் கவனம் பெற்றார். அதைவிட முக்கியமாக, அவரை பின்தொடர்பவர்கள் ‘உங்கள் வீடியோக்கள் எங்களுக்காக உயிர்தந்தவை!’ எனக் கூற ஆரம்பித்தனர். உலகமே சற்றுக் கருமையாக இருந்தபோது, மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவரும் ஒரு”lifesaver” என்று அவரை அழைத்தனர்.

ஆதிலின் இயல்பான திறமையும், நகைச்சுவை மீதான ஆர்வமும் அவரது வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தபோதிலும், அவரை இன்று இருக்கும் நிலைக்கு கொண்டு சென்றதில் TikTok முக்கிய பங்கு வகித்துள்ளது. ‘இலங்கையை தாண்டி பல மக்களை சென்றடைய TikTok எனக்கு ஒரு தளத்தை கொடுத்தது,’ என்று ஆதில் தெரிவித்தார். TikTok இன் வைரல் தன்மையால் அவரது வீடியோக்கள் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அணுகக்கூடியதாக மாறியது. இதன் மூலம் புதிய வாய்ப்புகள் மற்றும் கூட்டணிகளும் உருவாகின.

இந்த செயலியின் தானியங்கி கட்டுப்பாடு (machine moderation) தரமான உள்ளடக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் படைப்பாற்றல் மிக்க மற்றும் நம்பகமான வீடியோக்களை உருவாக்கியதில் அவருக்கு பலன் கிடைத்தது. ‘TikTok எனது காணொளிகளை தென்னிந்தியாவுக்கே கொண்டு சென்றது. நான் கனவிலும் நினைக்காத வாய்ப்புகளின் கதவுகளை திறந்து வைத்தது என அவர் கூறினார்.

இன்று, TikTok என்பது வெறும் வேடிக்கையான வீடியோக்களைப் பதிவேற்றும் ஒரு தளமாக இல்லாமல், படைப்பாளிகளுக்காக அவர்களின் ஆர்வங்களை தொழிலாக மாற்றுகின்ற தளமாக விளங்குகிறது. இதுவே பலருக்கு கனவுகளை நனவாக்கும் ஒரு மேடையாக மாறியுள்ளது. ஆதிலுக்கு, TikTok அவருக்கு ஒரு குரலைக் கொடுத்தது, அந்த குரலின் மூலம் திரைப்படத் துறையில் உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்பட சரியான மக்களை அவர் சென்றடைந்தார்.

ஆதிலின் நகைச்சுவை வெறும் சிரிப்புக்காக மட்டுமல்ல. அவருக்கு, இது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதற்கான ஒரு கருவயாகவும் பயன்படுத்துகிறார். ‘சமூக ஊடகங்கள் பெரும்பாலும் எதிர்மறையான விடயங்களால் நிரம்பியுள்ளன. மக்களுக்கு சிரிக்க ஏதாவது காரணம் அதேபோல, நகைச்சுவை என்பது நிம்மதியை வழங்கவும், ஒரே மாதிரியான வாழ்க்கையை உடைக்கவும், வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வையை மக்களுக்கு வழங்கவும் ஒரு வழியாகும்’ என்று அவர் தெரிவித்தார்.

ஆதிலுக்கு, நகைச்சுவை என்பது வேடிக்கையான குறும்புகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. இது விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வணிகங்களை ஊக்குவிப்பது மற்றும் பிரச்சினைகளை எதிர்கொள்வது பற்றியும் ஆகும். டிஜிட்டல் உலகில் இவ்வளவு எதிர்மறையான விடயங்கள் இருக்கும்போது, ஆதிலின் நகைச்சுவை பயன்பாடு புத்துணர்ச்சியூட்டும் மருந்தாக செயல்படுகிறது. வெறுப்பும், விமர்சனமும் அவர் மீது வீசப்பட்டபோது, அவற்றிலிருந்து மேலெழ சிரிப்பை பயன்படுத்தினார். ‘நான் விரும்புவதை தொடர்ந்து செய்கிறேன். என் பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு இதை அனைத்தையும் மதிப்புமிக்கதாக்குகிறது,’ என்று அவர் கூறினார்.

ஆதிலின் உள்ளடக்கத்தை இவ்வளவு சிறப்பாக்குவது எது? அவரைப் பொறுத்தவரை, இது அவரது தனித்துவமான மொழியும், பாணியும் ஆகும். ‘நான் எனது சொந்த வழியில் தொடர்பு கொள்கிறேன், கொழும்பு முஸ்லிம்களின் பேச்சு வழக்கு மொழிநடையை பயன்படுத்துகிறேன். இது என் பார்வையாளர்களிடம் எதிரொலிக்கிறது,’ என்று அவர் தெரிவித்தார். இந்த நம்பகத்தன்மைதான் படைப்பாளர்களின் கடலில் அவரை தனித்து நிற்க வைத்தது. அவரது பார்வையாளர்கள் வெறும் நகைச்சுவைக்காக மட்டுமல்ல, அவர் தனது ஆளுமையை தனது வேலையில் கொண்டு வரும் விதத்திற்காகவும் அவருடன் இணைகிறார்கள். அவரது பாணியை அனைவரும் பாராட்டாவிட்டாலும், ஆதில் தனது ஆதரவாளர்கள் மீது கவனம் செலுத்துகிறார். ‘என் ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பும் ஆதரவும் தொடர்ந்து முன்னேறிச் செல்ல என்னை ஊக்குவிக்கிறது,’ என்று அவர் தெரிவித்தார்.

ஆதில் தான் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அவரது கனவுகள் எப்போதையும் விட பெரியதாக உள்ளன. ‘இந்திய சினிமாவிலும், இறுதியில் கோலிவுட்டிலும் நடிப்பதுதான் எனது இறுதி கனவு,’ என்று அவர் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கின்ற திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம் அவர் ஏற்கனவே தனது முத்திரையைப் பதித்திருந்தாலும், இதை வெறும் தொடக்கமாகவே அவர் பார்க்கிறார். தனது இலட்சியம் மற்றும் உந்துதலுடன், தடைகளை உடைத்து தனது கனவுகளைத் தொடர ஆதில் உறுதியாக உள்ளார்.

தனது எதிர்காலத்தைப் பற்றிப் பேசுகையில், ஆதில் நம்பிக்கையுடன் இருக்கிறார். ‘TikTok எனது வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது, மேலும் இது என்னை இன்னும் உயரங்களுக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன்,’ என்று அவர் கூறுகிறார். இந்த தளம் தொடர்ந்து அவருக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்ற நம்பிக்கையுடன். ‘TikTok படைப்பாளர்களுக்கு வெறும் தெரிவுநிலையை மட்டும் வழங்குவதில்லை, அவர்களின் ஆர்வத்தை தொழிலாக மாற்ற ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது.’ ஆர்வமுள்ள content creators களுக்கு அவரது ஆலோசனை என்ன? ‘உயர்தர content களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் யார் என்பதில் உண்மையாக இருங்கள். மீதமுள்ளவற்றை TikTok செய்யட்டும்’.

ஆதில் உஸ்மான் ஒரு சாதாரண நபரிலிருந்து, கொரோனா கொரோனா ஊரடங்கு காலத்தில் TikTok மூலம் தன் திறமைகளை வெளிப்படுத்தி, இன்று பொழுதுபோக்குத் துறையில் ஒரு பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இது சமூக ஊடகங்களை சரியான முறையில் பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.

ஆதிலின் கனவுகளுக்கு எல்லையே இல்லை. அவரது அயராத உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் உறுதியுடன், TikTok என்ற எல்லையை கடந்து, உலக அளவில் திரைப்படத் துறையில் தனது தனித்துவமான அடையாளத்தை பதிக்க உறுதியாக இருக்கிறார்.


Share with your friend
Exit mobile version