நாட்டில் அதிகரித்துவரும் சுகாதாரசேவையின் தேவைக்கு உதவும் வகையில் திறமையான சுகாதாரத்துறை நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் பட்டதாரி தாதியர்களின் மருத்துவக் கற்றல் செயற்பாடுகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஹேமாஸ் வைத்தியசாலைச் சங்கிலியின் வத்தளை ஹேமாஸ் வைத்தியசாலையுடன் SLIIT புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டது.
இலங்கையின் முன்னணி தனியார் துறையைச் சார்ந்த பல் சங்கிலி மருத்துவமனையான ஹேமாஸ் வைத்தியசாலை 2008ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், இது அவுஸ்திரேலியாவின் சுகாதார தரநிலைகள் சர்வதேச கவுன்சிலினால் (ACSHI) தங்கத் தரத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் அணுகுமுறைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவது என்ற SLIIT இன் நோக்கத்துடன் இணங்கும் வகையில் ஹேமாஸ் வைத்தியசாலையுடன் கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழில்துறையுடன் கிடைக்கும் இணைப்பு மற்றும் தாதியர் பாடத் திட்டத்தில் முன்னணி சுகாதாரசேவை வழங்குனரால் கிடைக்கும் அங்கீகாரம் என்பன SLIIT இன் மாணவர்களுக்கான மதிப்பு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் அதிகரிக்கும்.
மனிதநேயம் மற்றும் விஞ்ஞானம் பீடத்தின் கீழ் ஒரு பகுதியான SLIIT தாதியர் பாடசாலை, தனியார் சுகாதார சேவை ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (PHSRC) மற்றும் இலங்கையில் உள்ள மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழு (TVEC) ஆகியவற்றில் பதிவுசெய்யப்பட்டிருப்பதுடன், தாதியர் துறையில் உயர்கல்வி டிப்ளோமா மற்றும் BSc. (Hons) தாதியர் (சர்வதேச) பட்டம் என்பவற்றை வழங்கி வருகிறது.
மூன்று வருடங்களைக் கொண்ட SLIIT தாதியர் உயர் கல்வி டிப்ளோமா பாடநெறியானது தொழில்ரீதியாக அங்கீகாரம் பெற்ற மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகுதி, அங்கு மாணவர்கள் மருத்துவமனை அமைப்புகளிலும் சமூகத்திலும் மேற்பார்வையிடப்பட்ட மருத்துவப் பயிற்சியை முடிப்பதற்கான B.Sc. (Hons) தாதியர் (சர்வதேச) பட்டத்தைப் படிப்பதற்கான வழியை ஏற்படுத்துகிறது.
ஐக்கிய இராச்சியத்தின் Liverpool John Moores பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் .Sc. (Hons) தாதியர் (சர்வதேச) பட்டம் 16 மாத காலத்தைக் கொண்டுள்ளதுடன், இது அரசாங்கத் துறையில் பணிபுரியும் தாதியர்களுக்கு தொழில் மேம்பாடுகள் மற்றும் ஏற்கனவே மூன்று வருட தாதியர் டிப்ளோமா பெற்று, இலங்கை மருத்துவ கவுன்சில் (SLMC) அல்லது இலங்கை தாதியியலில் பதிவுசெய்துள்ள நபர்களுக்கு உதவியாகவிருக்கும்.
சர்வதேச தொழிற் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் SLIIT இன் மனிதநேயம் மற்றும் விஞ்ஞானம் பீடம் தாதியர் பாடசாலையின் ஊடாக 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் NVQ L4 தரத்தில் பரமாரிப்புக் குறித்த ஒரு வருட பாடநெறியொன்றை ஆரம்பிக்கவுள்ளது.
பரமாரிப்புக் குறித்த பாடநெறி மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழு (TVEC) தரத்தில் காணப்படும் என்பதுடன், NVQ L4 அங்கீகாரத்திற்காக TVEC ஆல் மதிப்பாய்வு செய்யப்படும் செயல்பாட்டில் உள்ளது. மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தொழிலின் போதான பயிற்சி (OJT) வழங்கப்படும், என்பதுடன் அவர்கள் சுகாதாரப் பாதுகாப்புத் துறையில் அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறார்கள்.