Eyeview Sri Lanka

நாவலயில் உள்ள Exel Holdings, Jaquarஇன் சொகுசு குளியலறை தீர்வுகளுடன் ஆரோக்கிய நாளைக் கொண்டாடுகிறது

Share with your friend

இலங்கையின் கட்டுமானத் துறையில் 30 வருடங்களுக்கும் மேலாக நம்பகமான பெயரான Exel Holdings (Pvt) Ltd, அண்மையில் நாவலயில்  அமைந்துள்ள அதன் நவீன காட்சியறையில் பிரத்தியேக ஆரோக்கிய தினத்தை நடாத்தியது. இந் நிகழ்வு, குளியல் சாதனதங்களில் உலகளாவிய ரீதியில் முன்னணி வகிக்கும் Jaquarஇன் saunas, ஸ்பாக்கள் (spas), whirlpools, oxypools, மற்றும் நீராவித் தீர்வுகள் போன்றவற்றை காட்சிப்படுத்தியிருந்தது. இவை வீடுகள் மற்றும் விருந்தோம்பல் இடங்களுக்கு உச்சக்கட்ட ஓய்வு, புத்துணர்ச்சி மற்றும் நவீன நல்வாழ்வைக் கொண்டுவரும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 

Jaquar இந்தியாவில் உலகளாவிய வணிகத்தின் வணிக மேம்பாடு மற்றும் விற்பனை உருவாக்கத்திற்கு பொறுப்பான துணைப் பொது முகாமையாளர் திரு. ரஜீவ் ரஞ்சன், Jaquarஇன் ஆரோக்கிய தயாரிப்புகளுக்குப் பின்னால் உள்ள பணிச்சூழலியல் வடிவமைப்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு அறிவார்ந்த கண்ணோட்டத்தை வழங்கினார். அமாலி ஜெயவர்த்தன (DNM) ஆரோக்கிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிர்வகிப்பதை நோக்காகக் கொண்ட தொலைநோக்குப் பார்வையுடனான உயிரியல் பின்னூட்டப் பொறிமுறையை அறிமுகப்படுத்தி, நல்வாழ்விற்குரிய கண்ணோட்டத்தை சேர்த்தார்.

Exel நிறுவனத்தின் பிரீமியம் sanitaryware, குழாய்கள், நீர் வெப்பமாக்கிகள் (water heaters), பளிங்கு, கிரனைட் மற்றும் Emil இத்தாலியன் டைல்கள், Artize சொகுசு பொருத்திகள் மற்றும் Jaquar குளியல்சாதனங்கள் என உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைல்கள் மற்றும் mosaicsகளின் பரந்த அளவிலான தயாரிப்புகளை இந் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னணி கட்டிடக் கலைஞர்கள் மற்றும் உட்புற வடிவமைப்பாளர்கள் பார்வையிட்டனர். 

வலுவான விநியோகஸ்தர் மற்றும் வாடிக்கையாளர் உறவுகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட பாரம்பரியத்துடன் Exel Holdings, தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கென நற்பெயரை உருவாக்கியுள்ளதுடன் இலங்கை மற்றும் மாலைதீவுகளில் மதிப்புமிக்க சொகுசு விலாக்கள் (villas), ஹோட்டல்கள், அடுக்குமாடித் தொகுதிகள் (condominiums), பெரிய அளவிலான வணிக மேம்பாடுகள் மற்றும் தனிநபர் விற்பனைத் துறையின் விருப்பத்திற்குரிய விநியோகஸ்தராக மாறியுள்ளது.

“எமது நல்வாழ்வுக்கான தயாரிப்புக்கள் தொழில்நுட்பம், தரம் மற்றும் வடிவமைப்பில் ஒப்பிடமுடியாதவை.” என முகாமைத்துவப் பணிப்பாளரும் தலைவருமான திரு. ரத்வென் டி லிவேரா தெரிவித்தார். அவர் மேலும், “Jaquar உடனான எங்கள் மதிப்புமிக்க இணைவு மற்றும் Alliance பைனான்ஸுடனான எங்கள் மூலோபாய நிதி கூட்டாண்மை ஊடாக உள்ளூர் நம்பிக்கை மற்றும் ஒப்பிடமுடியாத சேவையுடன் உலகளாவிய ஆடம்பரத்தை நாங்கள் வழங்குகிறோம்.”  என்றார்.


Share with your friend
Exit mobile version