Eyeview Sri Lanka

பயனாளிகளின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த இரண்டடுக்குப் பாதுகாப்பை வெளிப்படுத்தும் Viber

Share with your friend

புதிய இரண்டடுக்குப் பாதுகாப்பு அம்சமானது பயனாளிகள் தமது கணக்குகளை அங்கீகரிக்க அனுமதிப்பதுடன், கணக்குகள் ஊடுருவப்படும் ஆபத்தைத் தடுப்பதுடன், தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது

குறியீட்டு இலக்கம் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தமது கணக்குகளை பயனாளிகள் அங்கீகரிக்கக் கூடிய மேலதிக பாகாப்பை வழங்கும் இரண்டடுக்கு பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக குறுஞ்செய்தி பரிமாற்ற தளம் மற்றும் குரலை அடிப்படையான தொடர்பாடல்களில் உலகின் முன்னணியாளராக விளங்கும் Rakuten Viber அறிவித்துள்ளது.

பாதுகாப்பான, தனியுரிமைக்கு முன்னுரிமையளிக்கும் தகவல் தொடர்பாடல் தளத்தை வழங்குவதற்கான Viber இன் அர்ப்பணிப்பு, இது போன்ற புதிய அம்சங்களில் தொடர்ச்சியான பணிகளின் மூலம் பறைசாற்றப்படுகிறது. Viber இல் குறுஞ்செய்திகளை ஏற்கனவே இறுதிக் குறியாக்கம் செய்யப்பட்டிருப்பதுடன், இதனால் மூன்றாம் தரப்பினர் அதிலுள்ள தரவுகளை அணுகுவது தடுக்கப்படுகிறது. அதேநேரம், குறுஞ்செய்தி மறையும் அசம்னமானது தங்கள் செய்திகளை யார் பார்க்கின்றனர் என்பதை பயனாளிகள் கட்டுப்படுத்துவதை உறுதிசெய்கிறது. இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டடுக்குப் பாதுகாப்பு அம்சமானது Viber இல் தொடர்பு கொள்ளும்போது பயனாளிக்கு கூடுதல் உறுதியளிக்கும் பாதுகாப்பு நடைமுறையை அசைக்காமல் கடைப்பிடிக்கிறது என்பதற்கு மற்றுமொரு சிறந்த உதாரணமாக அமைகிறது.

இரண்டடுக்கு பாதுகாப்பு அம்சத்தை செயற்படுத்தம் தெரிவுசெய்யும்போது பயனாளிகளுக:கு ஆறு இலக்கங்களைக் கொண்ட குறியீட்டு எண் உருவாக்கப்பட்டு அது அவர்களின் மின்னஞ்சல் முகவரியை சரிபார்க்கப்படும். பிறிதொரு கையடக்கக் கருவியில் அல்லது டெஸ்க்டொப்பில் ஏiடிநச கணக்கிற்கு நுழையும்போது தமக்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணை வழங்கி தமக்கான கணக்கை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குறியீட்டு எண் மறக்கப்பட்டால் அல்லது காணாமல்போனால் உறுதிப்படுத்தப்பட்ட மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி கணக்கிற்கான அணுகலைப் பெற முடியும். 

மேலதிகமாக குறியீட்டு இலக்கத்தை உருவாக்குவது டெஸ்க்டொப்பில் Viber ஐப் பயன்படுத்தி கணக்கைச் செயலிழக்கச் செய்யும் திறனை முடக்குகிறது. யாராவது டெஸ்க்டொப்பைப் பயன்படுத்தி இந்தக் குறியீட்டின் ஊடாக கணக்கை முடக்க முயற்சிக்க முடியாது.

தமது கணக்கின் இரகசியத் தன்மையைப் பேணக்கூடிய வகையில் மேலதிக பாதுகாப்பை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே Viber இன் இந்தப் புதிய அம்சம் அமைந்துள்ளது. இரண்டடுக்கு பாதுகாப்பானது தனிப்பட்ட தகவலை அணுகுவதற்கும், ஸ்பாம்களை அனுக்கும் ஹக்கர்களிடமிருந்தும் பாதுகாப்பு வழங்குகிறது. அத்துடன், இந்தத் தளத்தில் உறுதிப்படுத்தப்படாத கணக்குகளை இது குறைப்பதுடன், ஸ்பாம் தகவல்களைக் குறைப்பது மாத்திரமன்றி பயனாளிகள் தமது அன்புக்குரியவர்களுடன் வினைத்திறனான முறையில், ஸ்திரமான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். எதிர்காலத்தில் உயிரியல் அடையாளப்படுத்தல்களை உள்ளடக்கும் திட்டத்தையும் Viber கொண்டுள்ளது. 

“நாம் மேற்கொள்ளும் அனைத்திலும் பயனாளிகளின் இரகசியத் தன்மையைப் பாதுகாப்பது முன்னுரிமையில் உள்ளது. பாதுகாப்பான, இறுதிக் குறியீட்டைக் கொண்ட குறுஞ்செய்தி செயலியை வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும் இந்த புதிய அம்சம் இதை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது” என Rakuten Viber இன் பிரதம தகவல் அதிகாரி அமிர் இஷ்-ஷலோம் தெரிவித்தார். இரண்டடுக்கு பாதுகாப்பு, எங்கள் பயனாளிகளின் பாதுகாப்புக் கவலைகளைத் தணிப்பதுடன், மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல, வணிகங்களுக்கும் உறுதியளிக்கும். மேலும் தளம் பாதுகாப்பாக இருக்க Viber சமீபத்திய தொழில்நுட்பத்தை வழங்குகிறது” என்றார்.

புதிய அம்சம் விரைவில் அனைத்து Viber பயனாளிகளுக்கும் உலகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


Share with your friend
Exit mobile version