இலங்கையின் முதன்மையான பாதணி வர்த்தக நாமமான DSI, தங்களது வலையமைப்பை மேலும் வலுப்படுத்த பிபில மற்றும் தெஹிவளையை மையப்படுத்தி புதிய கிளைகள் இரண்டினை திறந்துள்ளது. அதனை அண்மித்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கேற்ப DSI பாதணிகளை இலகுவாக கொள்வனவு செய்ய முடியும். பிரதான வீதி, பிபிலை மற்றும் இல. 105 காலி வீதி, தெஹிவளையில் அமைந்துள்ள சமீபத்திய காட்சியறைகள், அனுபவமிக்க ஊழியர் குழாம் உடன் அர்ப்பணிப்புமிக்க சேவையினை வழங்கி DSI வாடிக்கையாளர் சேவையினை மக்களுக்கு அருகில் கொண்டு வரவுள்ளது.
D. Samson & Sons (Pvt.) Ltd தலைவர் திரு. நந்ததாச ராஜபக்ஷ, பணிப்பாளர் திரு. அசங்க ராஜபக்ஷ மற்றும் தேசிய விற்பனை முகாமையாளர் – சில்லறை திரு. நளீன் வீரவர்தன மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட நிர்வாகம் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் முன்னிலையில் இக் காட்சியறைகள் திறக்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக விரிவடைந்து வரும் வலையமைப்பைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட D. Samson & Sons (Pvt.) Ltd இன் தலைவர் திரு. நந்ததாச ராஜபக்ஷ அவர்கள், “DSI கிளை வலையமைப்பு விரிவாக்கமானது, நாட்டின் பல கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களின் விரிவாக்க செயற்திட்த்தின் கீழ் பிபில மற்றும் தெஹிவளையிலும் னுளுஐயின் புதிய காட்சியறைகள் திறக்கப்பட்டதை எண்ணி நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம். அத்தோடு வாடிக்கையாளர்கள் பல ஆண்டுகளாக எங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களுக்காக மென்மேலும் சேவை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளோம்.” எனக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பாதணிகள் உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையில் முன்னணியில் இருக்கும் D. Samson & Sons (Pvt.) Ltd, U Softo, Ranpa, Samsons, DSI Supersport, Beat, Beach, Petalz, Fun Souls, Tamik, Waves, Jessica, Melissa, மற்றும் AVI உட்பட பல உள்;ர் பாதணி வியாபாரக் குறிகளின்; ஒரே விநியோகஸ்தராகவும் அத்துடன் பிரபல சர்வதேச வியாபாரக்குறிகளான Clarks, Redtape, Reebok, Puma, Fila, U.S. Polo, Adidas, Arrow, W, Modare, Inc.5, Aurelia, Asics, and Von Wellx ஆகியவற்றின் விநியோகஸ்தராகவும் செயற்படுகின்றது.