Eyeview Sri Lanka

பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இலங்கையில் IELTS பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில் அன்பளிப்பு

Share with your friend

நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை வழங்கியுள்ளது. நவம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற IELTS பரிசில் வழங்கும் நிகழ்வின் போது இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் கற்கைகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களில் தமது கற்கைகளை தொடர்வதற்கான கட்டணங்களில் 5000 ஸ்ரேளிங் பவுண்களை தமது உயர் கற்கைகளை தொடர்வதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் வாய்ப்பளித்திருந்தது. இதனூடாக, இளம் மாணவர்களுக்கு தமது கல்விசார் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான உதவிகளை வழங்கியிருந்தது.

2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையில் தமது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொடர்வதற்காக IELTS பரீட்சையினூடாக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இந்த வருடாந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இலங்கை, சீனா, ஜப்பான், ஹொங் கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வதியும் IELTS பரீட்சைக்கு தோற்றுவோருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.

கடுமையான விண்ணப்பத் தெரிவு அடிப்படையில், இலங்கையிலிருந்து தெரிவாகிய ஆறு வெற்றியாளர்களுக்கு உயர் பணப் பரிசு வழங்கப்பட்டிருந்தது:   

1ஆம் பரிசு – சுஹாஷி தல்கஸ்பிட்டிய

2ஆம் பரிசு – திலீப கமகே

2ஆம் பரிசு – ரவீஷ விக்ரமசிங்க

3ஆம் பரிசு – குஷாதினி மல்லவாரச்சி

3ஆம் பரிசு – மொஹமட் ரஸ்லான்

3ஆம் பரிசு – பென்ஜமின் தர்மரட்னம்

பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் பணிப்பாளர் ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் இந்த பரிசளிப்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு உதவும் வகையில், புதிய நாடுகளுக்கு பயணம் செய்து, புதிய கலாசாரத்தில் தம்மை ஆழத்தி, சர்வதேச IELTS சமூகத்தில் தம்மையும் அங்கத்துவம் வகிப்பதற்கான வாய்ப்பை IELTS பரிசு வழங்குகின்றது.” என்றார். 

எதிர்கால விண்ணப்பதாரிகளுக்கு பரிசு தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளவும், விண்ணப்ப செயன்முறை மற்றும் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் பற்றி அறிந்து கொள்ள https://bit.ly/47qVnFQ எனும் இணையத்தளத்தைப் பார்வையிடவும்.

IELTSபற்றி

சர்வதேச ஆங்கில் மொழி பரிசோதனை கட்டமைப்பு (IELTS) என்பது உயர் கல்வி மற்றும் சர்வதேச புலம்பெயர்வு ஆகியவற்றுக்காக, உலகின் புகழ்பெற்ற ஆங்கில மொழி ஆற்றல் பரிசோதனையாக அமைந்துள்ளது. உலகளாவிய ரீதியில் 11,500 நிறுவனங்கள் IELTS இல் நம்பிக்கை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களில் கல்வி நிலையங்கள், தொழில் வழங்குநர்கள், அரசாங்கங்கள் மற்றும் நிபுணத்துவ அமைப்புகள் போன்றன அடங்குகின்றன.

IELTS அவுஸ்திரேலியா மற்றும் கேம்பிரிட்ஜ் ஆங்கில மதிப்பீடு ஆகியன பிரிட்டிஷ் கவுன்சில், IDP ஆகியவற்றின் இணை உரிமையாண்மையின் கீழ் IELTS அமைந்துள்ளது: IELTS பற்றி மேலும் அறிந்து கொள்ள: www.ielts.org  

பிரிட்டிஷ் கவுன்சில் பற்றி

கலாசார உறவுகள் மற்றும் கல்வி சாய்ப்புகள் ஆகியவற்றுக்கான ஐக்கிய இராஜ்ஜியத்தின் சர்வதேச நிறுவனமாக பிரிட்டிஷ் கவுன்சில் திகழ்கின்றது. ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் உலகளாவிய நாடுகளின் மக்களிடையே புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கை, சமாதானம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு, இணைப்புகளை கட்டியெழுப்புவதனூடாக நாம் ஆதரவளிக்கின்றோம். கலை மற்றும் கலாசாரம், கல்வி மற்றும் ஆங்கில மொழி ஆகியவற்றில் எமது பணிகளினூடாக இந்தச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம். 200 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் நாம் பணியாற்றுவதுடன், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர்களின் பிரசன்னம் காணப்படுகின்றது. 2021 – 22 காலப்பகுதியில் நாம் 650 மில்லியன் மக்களை சென்றடைந்துள்ளோம்.

இலங்கையில் எமது பணி தொடர்பான மேலதிக தகவல்களுக்கு britishcouncil.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.


Share with your friend
Exit mobile version