Eyeview Sri Lanka

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியுடன் பின்னவல தனது 47ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

Share with your friend

பின்னவல யானைகள் சரணாலயம் இலங்கையின் சுற்றுலாத் தலமாகப் புகழ்பெற்றுள்ளதோடு, பெருமளவிலான வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மக்களையும் ஈர்த்துள்ளது. இது 2022 பெப்ரவரி 16ஆம் திகதி தனது 47ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான ஒரு அம்சமாக, யானைகள் பற்றிய விழிப்புணர்வு பலகையை பொது மக்களுக்காக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  ஷெர்மிலா ராஜபக்ச திறந்து வைத்தார். இந்த செயற்படானது பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது. 

பின்னவல யானைகள் சரணாலயத்தின் பிரதிப் பணிப்பாளர் (களம்) நவோத் அபேசிங்க, பிரதிப் பணிப்பாளர் (பின்னவல மிருகக்காட்சிசாலை) டிலானி அமரசிங்க, சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் நிலைத்தன்மை  – முகாமையாளர், ஹிஷான் வெல்மில மற்றும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் கேகாலை கிளை முகாமையாளர் ரொஷான் மடவல ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

யானைகள் சரணாலயத்தில் உள்ள யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டுப் பொறுப்பை உணர்ந்து பிரதிப் பணிப்பாளர் (அலுவலகம்) மிஹிரான் மெதவல, அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரிகா பிரியதர்ஷனி மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தின் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலின் கீழ் யானைகளை பாதுகாக்கும் நோக்குடன் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இந்தப் பணியை மேற்கொண்டது.

1975ஆம் ஆண்டு இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தினால் அனாதரவான யானைகளை பராமரித்து பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த சரணாலயம் நிறுவப்பட்டதோடு, பின்னவல யானைகள் சரணாலயம் 1978ஆம் ஆண்டு முதல் தேசிய விலங்கியல் பூங்காத் திணைக்களத்தின் மேற்பார்வையில் ஆசிய காட்டு யானைகளுக்கான ஒரு இல்லமாகவும்  சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் செயற்படுகின்றது. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி 2021ஆம் ஆண்டு தனது 25வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியதோடு, சுற்றுச்சூழலுக்கு உகந்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வனவளத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் 10 கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைந்து, இலங்கையின் பல்லுயிர் பெருக்கத்துடன் இணைந்ததான, கன்னெலியா வனப் பிரதேசத்தை அண்மித்த ஒரு ஹெக்டேர் பாழடைந்த நிலத்தை மீட்டெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி கடந்த 2018 முதல் மூன்று வருடங்களாக தொடர்கின்றது. 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டுச் செயற்பாடுகள் உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கியல்லாத நிதியியல் அதிகார மையமாக வளர்ந்துள்ளது. 


Share with your friend
Exit mobile version