பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் (பீப்பள்ஸ் லீசிங்) திஸ்ஸமஹாராம கிளையானது வாடிக்கையாளர்களிடையே வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துவதற்காக கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR)திட்டத்தை ஆரம்பித்துள்ளது. பிராந்திய அலுவலகத்தால் வழிநடத்தப்பட்டு, கிளை முகாமையாளர்களால் வழிநடத்தப்பட்டு, 500 தக்காளி மற்றும் மிளகாய் கன்றுகளை வீட்டுத்தோட்டத்தில் ஆர்வமுள்ள அதேவேளை அடையாளம் காணப்பட்ட விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்தது.
பதினைந்து பணியாளர்கள் தங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை 109 மணிநேரம் தன்னார்வமாக வழங்கியதோடு மாத்திரமல்லாது, திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு நிதி ரீதியாகவும் பங்களித்தனர்.
“இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியில் காணப்படுவதுடன், எதிர்பார்க்கப்படும் உலகளாவிய உணவு நெருக்கடியும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களின் மிகவும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கு ஊக்குவிப்பதற்காக இந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். இந்த பயனாளிகள் (வாடிக்கையாளர்கள்) தமது வீட்டு உபயோகத்திற்கு தேவையான இயற்கை உணவுகளை தொடர்ந்து வழங்குவதற்கான ஒரு வழிமுறையாக வீட்டுத்தோட்டத்தை தீவிரமாக கருத்தில் கொள்வார்கள் என நாங்கள் நம்புகிறோம்.” என திஸ்ஸமஹாராம கிளையின் முகாமையாளர் மதுக நளின் தெரிவித்தார்.
பீப்பள்ஸ் லீசிங் என்பது இலங்கையில் நம்பகமான வங்கியல்லாத நிதி நிறுவனமாகும், மேலும் இது அரசுக்கு சொந்தமான மக்கள் வங்கியின் முதன்மை துணை நிறுவனமாகும், இது நாட்டின் மிகப்பெரிய அரசுக்கு சொந்தமான வங்கிகளில் ஒன்றாகும். பீப்பள்ஸ் லீசிங் 1996 இல் ஒரு விசேட குத்தகை நிறுவனமாக வணிக நடவடிக்கைகளைத் ஆரம்பித்தது. இந்நிறுவனம் 2011இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இன்று, பீப்பள்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.