பொது சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தொலைதொடர்பு தீர்வுகளை வழங்க GMOA உடன் இணைந்துக்கொள்கிறது Airtel

Share with your friend

இலங்கையிலுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிக்கும் எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) மற்றும் அங்குள்ள 23,000 உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான தொலைத்தொடர்பு தீர்வுகளை வழங்குவதற்காக அந்த சங்கத்துடன் அண்மையில் கைகோர்த்துக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வைக் குறிக்கும் விசேட வைபவத்தில் GMOA தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன, செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, உபதலைவர் டொக்டர் சந்திக எபிடகடுவ, உதவி செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாச மற்றும் Airtel Sri Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷிஷ் சந்திரா, அதுல திஸாநாயக்க, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, சாந்த பெர்னாண்டோ, பிரதம சேவை அலுவலக அதிகாரி, ஃபவாஸ் நிசாம்தீன் மற்றும் முகாமையாளர் பிற்கொடுப்பனவு விற்பனை, இந்துனில் சண்தருவன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டிணைவு மூலம், 126 தேசிய மருத்துவமனைகளில் உள்ள GMOA முழு உறுப்பினர்களும் 1 வருட காலத்திற்கு வரையறையற்ற அழைப்புத் திட்டங்களுக்குத் தகுதி பெறுவார்கள். எயார்டெல் நிறுவன தீர்வுகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மூலம் அலுவலக இணைப்புகள் மற்றும் பிற சேவைகளை GMOA க்கு எயார்டெல் வழங்கும். எயார்டெல்லின் புத்தாக்கமான நிறுவனச் சேவைகள், பலதரப்பட்ட தொழில்களில் உள்ள வணிகங்களை அதிக திறன் மற்றும் உற்பத்தித்திறனைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கிறது, இது சுகாதாரத் துறையில் ஒரு முக்கியத் தேவையாக இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

“எங்கள் சேவை மற்றும் வலைப்பின்னலில் எயார்டெல்லை விருப்பமான தொலைத்தொடர்பு வழங்குநராகத் தேர்ந்தெடுத்த GMOA க்கு அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். சுகாதாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான பொதுச் சேவைகளில் ஒன்றாகும், எனவே பொதுத்துறை மருத்துவ அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பதை நாங்கள் கௌரவமாக கருதுகிறோம். GMOA இன் தனித்துவமான தேவைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான தேசிய முன்னுரிமைகளுடன் இணங்குவதன் அடிப்படையில் இந்தக் கூட்டிணைவை உருவாக்குவதற்கான Airtel இன் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகிறோம்.” என எயார்டெல் ஶ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷீஷ் சந்திரா தெரிவித்தார்.

முன்னோக்கி நகரும் போது, அடிப்படை சுகாதார சேவைகளின் டிஜிட்டல் மயமாக்கலை ஆதரிக்க எயார்டெல்லின் உலகளாவிய தொழில்நுட்ப-நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, GMOA உடன் இணைந்து மேலும் ஒத்துழைப்பதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

GMOA உடனான Airtel இன் கூட்டிணைவானது, இறுதிப் பாவனையாளர்களுக்கு முழுமையான மதிப்பை வழங்கும் அதே வேளையில், மிகச் சமீபத்திய சிறந்த தொலைத்தொடர்பு அனுபவங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு தீவிரமான முன்னோடி முயற்சியாகும். 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply