மாணவர்களின் கல்வியை விஸ்தரிப்பதை நோக்காகக் கொண்டு நிறுவனத்தில் காணப்படும் கல்வி வாய்ப்புக்கள், உள்ளக மாற்ற வாய்ப்புக்கள், வலையமைப்புக்கள், ஈடுபாடு நிறைந்த செயற்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கும் மெய்நிகர் நிகழ்வுகள் மற்றும் கம்பஸ் சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான அனுமதிப்பு வாரத்தை மார்ச் 13-19 நடத்துவதற்கு SLIIT அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்துள்ளது.
2022 மார்ச் 13 மெய்நிகர் அனுமதிப்பு தினம் மு.ப 09.00 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளதுடன், இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு மெய்நிகர் கம்பஸ் சுற்றுலா வாய்ப்பு வழங்கப்படும். இதன் போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுகூடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்ற SLIIT இல் காணப்படும் வசதிகளை அறிந்துகொள்ள முடிவதுடன், அவை குறித்த அனுபவத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதற்கு மேலதிகமாக தற்போது கல்விகற்கும் மாணவர்களிடமிருந்து ‘SLIIT இல் வாழ்க்கை’ குறித்த தகவல்கள் மற்றும் அனுபவங்களை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும். அனுபவம் மிக்க SLIIT இன் கல்விசார் ஊழியர்களுடனும் ஈடுபாடு நிறைந்த அமர்வுக்கான வாய்ப்பும் மெய்நிகர் அமர்வின்போது காணப்படும்.
அத்துடன், கம்பியூட்டிங், பொறியியல், மனிதநோயம் மற்றும் விஞ்ஞானம், வர்த்தகம் போன்ற துறைகளின் பீடாதிபதிகளிடமிருந்து நிறுவனத்தினால் வழங்கப்படும் கல்வி வாய்ப்புக்கள் குறித்த உள்ளகத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு பொதுவான அமர்வின் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்கும். இதனைத் தொடர்ந்து மிகவும் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் பங்குபற்றும் கேள்வி பதில் அமர்வும் இடம்பெறும்.
மெய்நிகர் அமர்வானது சூம் மற்றும் பேஸ்புக் ஆகிய தளங்களின் ஊடாக ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளைக் கொண்ட இரண்டு அமர்வுகளாக அமையும். இவற்றுக்கான அணுகலைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் முற்கூட்டிய பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரப்படுகின்றனர். மேலதிக தகவல்களைக் கோருபவர்களுக்காக கேள்வி பதில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படும்.
தனித்தனி நிபுணத்துவத்தை வழங்குதல், அனைத்து நிகழ்வுகளுக்கும் கேள்வி பதில் அமர்வுகள் என்பனவும் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தமக்கு விருப்பமான கேள்வி பதில் அமர்வைத் தெரிவுசெய்து அவர்கள் தேர்ந்தெடுத்த விடயத்தை ஆராய்வதற்குத் தேவையான அறையில் இணையுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
மெய்நிகர் நிகழ்வுகளைத் தொடர்ந்து 2022 மார்ச் 14ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை ‘கம்பஸில்’ ஒன்று கூடல் நிகழ்வு முற்பகல் 10.00 மணி முதல் ஆரம்பமாகும். பங்குபற்றுனர்கள் நேரடியாக கம்பஸ் வளாகத்துக்கு விஜயம் செய்து SLIIT இல் காணப்படும் ஸ்மார்ட் வகுப்பறைகள், புதிதாக அமைக்கப்பட்ட ஆய்வுகூடங்கள் மற்றும் ஏனைய வசதிகள் பற்றிப் பார்வையிடமுடியும்.
அதேநேரம், தற்போதைய மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி ‘SLIIT இல் வாழ்க்கை’ குறித்த அவர்களின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். SLIIT இனால் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் அதில் எதிர்காலத்துக்கான வாய்ப்புக்கள் குறித்து அனுபவம் மிக்க கல்விசார் ஊழியர்களுடன் கலந்துரையாடுவதற்கான அமர்வும் காணப்படும்.
அனுமதி தினம் குறித்த நிகழ்வுகள் பற்றிய மேலதிக தகவல்களை +94 11 7544801 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது info@sliit.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக அறிந்துகொள்ளலாம். இல்லாவிட்டால் புதிய கண்டி வீதி, மாலபே என்ற முகவரியில் உள்ள SLIIT நிறுவனத்துக்கு விஜயம் செய்து அல்லது QR குறியீட்டை ஸ்கான் செய்து இந்நிகழ்வுக்கு முற்பதிவை மேற்கொள்ளலாம்.