Site icon Eyeview Sri Lanka

மாற்றத்தைக் கொண்டுவருவதில் வினையூக்கிகளாகவும், பலமான எளிதாக்குனர்களாகவும் முக்கிய பங்கு வகிக்கும் அபிவிருத்தி நிறுவனங்கள்

Share with your friend

அபிவிருத்தி முயற்சிக்கான நீண்டகால உறுதிப்பாடு, நடைமுறையான தலையீடுகளை மேற்கொள்ளக் கூடிய திறன், சமூகத்தின் பங்களிப்பை ஊக்குவித்தல், அடிமட்டத்தில் நிறுவனங்களை உருவாக்குதல் மற்றும் அவற்றின் உடாக நீடித்திருக்கக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தல் போன்றவற்றுக்காக சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.

 அபிவிருத்திச் செயற்பாட்டில் இலாபநோக்கற்ற நிறுவனங்கள் வழங்கும் திறமையான மற்றும் புத்தாக்கமான திட்டக்கள் குறித்த தனித்துவத்தை விவாதிக்கும் வகையில்  வெவ்வேறு திறன்களைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகின்ற அரச, தனியார் மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களை ஒன்றிணைக்கும் நோக்கில்,  ‘அபிவிருத்திப் பணிகளில் பொதுமக்களின் ஈடுபாட்டின் மூலம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புதல்’ என்ற தலைப்பில் நுண்ணறிவு மிக்க கருத்துக்களமொன்றை ChildFund Sri Lanka நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. 

Gamma Pizzakraft Lanka (Pvt) நிறுவனத்தின் மனித வள பணிப்பாளர் கௌஷல் மென்டிஸ், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் ஆரம்பக் கல்வி, தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்  திருமதி.ஆ.எம்.கே.டி.சில்வா, கொழும்பு கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் அரங்கம் மற்றும் நாடகத்துறைப் பேராசிரியர் சௌம்ய லியனகே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வை ChildFund Sri Lanka  நிறுவனத்தின் வள அபிவிருத்திப் பணிப்பாளர் டினந்த தம்பவிட்ட நெறியாழ்கை செய்தார். 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட குழுவினரின் நோக்கம் தொடர்பில் விளக்கமளித்த ChildFund Sri Lanka  நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் நீலம் மக்கஜானி குறிப்பிடுகையில், எந்தவொரு துறையினராலும் தனித்து அடைய முடியாத சிக்கலான முயற்சியே அபிவிருத்தியாகும் என்றார். ”இருந்தபோதும், பல்வேறுபட்டவர்களையும் நாம் ஒரே மேசைக்கு கொண்டுவர வேண்டும். திறன்கள் மற்றும் அவற்றை மேசைக்கு எவ்வாறு கொண்டுவருவது என்ற அறிவுக்காக அபிவிருத்தித்துறை அங்கீகரிக்கப்பட வேண்டும். இதற்கான செயல் வல்லமை எம்மிடம் உள்ளது. நமது பலங்கள் மற்றும் சரியான பதையில் பாரிய அடியை எடுத்து வைக்க அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்யக்கூடிவற்றை அடையாளம் காண்பது மிகவும் முக்கியமானது. பிரதானமான பங்குதார்களுடன் நடத்தும் பாரிய உரையாடல்களில் ஒரு பகுதியாக இந்தத்துறை பார்க்கப்படுவதுடன், அதற்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.

கையேடுகள் அல்லது தனிநபர்கள் அல்லது குறிப்பிட்ட ஒரு துறை என்பவற்றுடன் மட்டுப்படுத்தப்படாது தொடர்ச்சியாக கூட்டாண்மையுடன்கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை மேலும் விபரித்த அவர், ”தொண்டு சேவையிலிருந்து சமூகங்களைப் பலப்படுத்துவதை நோக்கி நாம் செல்ல வேண்டும், உண்மையில் நாம் தொண்டு சேவையிலிருந்து விலகி பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு வழங்கப்படும் உள்ளீடுகள் மற்றும் அனுகூலமற்றவை நீடித்து நிலைக்காதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

இது குறித்து Gamma Pizzakraft Lanka (Pvt) Ltd (Pizza Hut) நிறுவனத்தின் மனித வள பணிப்பாளர் கௌஷல் மென்டிஸ் உரையாற்றுகையில், “இயலாமையுடன் கூடிய இளைஞர்களுக்கு அர்த்தபுஷ்டியான வேலைவாய்ப்பு பற்றி விபரிக்கப்பட்டது, ”அது இயலமை அல்ல, கணக்கிடுவதற்கான அவர்களின் திறமை. எனவே, அந்தத் திறனைக் கண்டறிந்து, அவர்களும் தங்கள் கனவுகளை அடையும் வகையில்  பிரகாசிக்கச் செய்வதே இலக்காகும். இயலாமையைக் கொண்ட இளைஞர்களும் மனிதர்கள்தான், அவர்கள் உள்ளார்ந்த கண்ணியத்துடன் குற்றஞ்சாட்டப் படுகின்றனர். நிறுவனமொன்றின் நாளாந்த பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதானது, மரபுவழியான கண்ணியம் மற்றும் அவர்கள் வாழும் உலகத்துக்கு பங்களிப்புச் செய்ய அவர்களுக்கு அனுமதிப்பதாக அமையும்” என்றார்.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி மற்றும் ஆரம்பக் கல்வி, இலங்கை தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்  திருமதி.ஆ.எம்.கே.டி.சில்வா விளக்கமளிக்கையில், “டிஜிட்டல் வழிமுறையின் ஊடான எண்ணியல் மற்றும் எழுத்தறிவுத் திறன்கள், இளம் குழந்தைகளின் அறிவாற்றல் திறன்கள் மற்றும் அவர்களின் வளர்ச்சியின் போது தேவைப்படும் உணர்திறன்களை விவரிக்கின்றன என்றார். 

கொழும்பு கட்புல, அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் அரங்கம் மற்றும் நாடகத்துறைப் பேராசிரியர் சௌம்ய லியனகே தனது கலந்துரையாடலில், ‘ஆய்வு, பிரிவான புரிதல் மற்றும் பரந்துபட்ட கணிப்பீட்டை மேற்கொள்ளக் கூடிய திறன் போன்றவை தொடர்பில் தனியார் துறையினர் அல்லது இலாப நோக்கற்ற துறையினர் கொண்டிராத திறன்களுக்குப் பங்களிப்புச் செலுத்த சிவில் சமூகங்களுக்கும், கல்விசார் துறையினருக்கும் இடையிலான கல்வி ரீதியான கூட்டாண்மை முக்கியமானது’ என்றார். குழந்தைகள் வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக் கொள்வதற்கும் தம்மை மேலும் வினைத்திறனாக வெளிப்படுத்துவதற்கும் உதவ கலை மற்றும் விளையாட்டுகளின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

தற்பொழுது மேற்கொள்ளப்படுகின்றன ஈடுபாடு, பல்வேறு மட்டங்களில் பயன்படுத்தப்படும் நிபுணத்துவம் மற்றும் மூன்று பங்குதாரர்களால் பயன்படுத்தப்படும் வளங்கள் குறித்து குழுவினர் கோடிட்டுக்காட்டியிருந்தனர். மக்கஜானி குறிப்பிடுகையில், “இந்த மூன்று தரப்பினரிடமிருந்தும் நாம் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. அவர்கள் தங்கள் பகுதிகளில் நிபுணத்துவத்தின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டு வருகிறார்கள், மேலும் எமது வேலையைச் சிறப்பாகச் செய்ய எங்களுக்கு உதவ முடியும். இருந்தபோதும் வசதிகளைச் செய்பவர்களாகவும், வினையூக்கியாகவும் செயற்படும் இலாப நோக்கற்ற நிறுவனங்களே எப்பொழும் மையமாக இருக்கும் என நான் கருதுகிறேன்” என்றார்.

தாம் ஏற்படுத்தும் தாக்கத்தை முற்கூட்டியே வெளிப்படுத்தல், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துவதும் இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு சம அளவில் முக்கியமானவையாகும். இதன் பலனாகவே பல்வேறு பங்குதாரர்களை இணைப்பதற்கும், காட்சிப்படுத்துவதற்குமாக அர்ப்பணிக்கப்பட்ட இணையத்தளமொன்றை ChildFund Sri Lanka நிறுவனம் அங்குரார்ப்பணம் செய்திருப்பதுடன், குழுக் கலந்துரையாடலின் பின்னர் இதே நிகழ்வில் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. நிறுவனத்தைப் பற்றி மேலும் பலர் அறியவும், எதிர்காலத் திட்டங்களுக்கான நுழைவாயிலாகச் செயற்படவும், அதிக பார்வையாளர்கள் இணைந்து கொள்வதற்கும் இணையத்தளம் சிறந்ததொரு கருவியாகும் என மக்கஜானி குறிப்பிட்டார். “சமூக அபிவிருத்தியில் உள்ள நிறுவுனங்கள் வழிகளை தேடுவது மற்றும் சிறந்த தொடர்பாடல்களைப் பேணுவதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இணையத்தளமானது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை, நாம் ஏற்படுத்தும் தாக்கத்தை நிரூபிக்கும் ஒரு கருவியாகவும் பார்க்கப்பட வேண்டும். நிறுவனத்துக்கு மக்கள் நுழையும் வாயிலாக இது அமையும்” என்றார் அவர்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த 40 வருடங்களாக நாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் முன்னணி சர்வதேச சிறுவர் அபிவிருத்தி அமைப்பே ChildFund Sri Lanka நிறுவனமாகும். சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, கல்வி, இளைஞர் தொழில்வாய்ப்பு மற்றும் தொழில்முனைவு, இயலாமை உடைய நபர்களை உள்வாங்குதல், காலநிலை மாற்றம், பேரழிவு அபாயத்தைக் குறைத்தல், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலில் வளர்வதை உறுதிசெய்தல் போன்ற விடயப்பரப்புக்களில் 10 மாவட்டங்களில் ChildFund நிறுவனம் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்கள் மற்றும் அவர்களின் பணிகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ள www.childfundsrilanka.org என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்யவும்.


Share with your friend
Exit mobile version