Eyeview Sri Lanka

மேம்பட்ட AI அம்சங்களுடன் Bespoke AI Double Doorகுளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்யும் Samsung

Share with your friend

இலங்கையின் முன்னணி மின்சாதன வர்த்தக நாமமான Samsung, Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டியை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. Bespoke வடிவமைப்பு மற்றும் Wi-Fi இணைப்பு, Smart Things AI Energy Mode, SmartThings Home Care, Smart Forward உடன் onvertible 5-in1, Twin Cooling Plus™ மற்றும் Active Fresh Filter+ போன்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன், இப் புதிய குளிர்சாதனப் பெட்டி இலங்கை வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உயர் தரமான Elegant Inox மற்றும் Refined Inox என்ற இரண்டு நிறங்களில் கிடைக்கும் Samsung Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டி, அதிக சேமிப்பு கொள்ளளவை வழங்குவதோடு, உபயோகத்தில் எளிமையும், மாற்றுக்கருத்தில் நெகிழ்வுத்தன்மையையும் தருகிறது. இந்த குளிர்சாதனப் பெட்டி இலங்கையில் ரூபாய் 304,999 ரூபா ஆரம்பவிலையில், 396 மில்லி லீட்டர் கொள்ளளவில் கிடைக்கிறது.

இதுபற்றி கருத்து தெரிவித்த Samsung Sri Lanka முகாமைத்துவ பணிப்பாளர் SangHwa Song, “குளிர்சாதனப் பெட்டிகளின் முன்னணி நிறுவனமாக, குளிரூட்டும் செயல்முறைக்கு அப்பாற்பட்ட அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் எனக் கூறினார். எமது உபகரணங்கள் அணுகும் தன்மை, தகவமைப்பு மற்றும் அழகிய வடிவமைப்பு ஆகிய அனைத்தையும் கொண்டதாக அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். மேலும், இந்த சாதனங்கள் AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவதாகவும், Bespoke இன் வடிவமைப்பு மற்றும் அதன் பெரிய கொள்ளளவு மூலம் பாவனையாளர்கள் செயல்திறன் மற்றும் மின்சக்தி திறன் ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.” என்றும் அவர் கூறினார்.

SmartThings AI மின்சக்தி முறை

AI மின்சக்தி முறை குளிர்சாதனப் பெட்டியின் பயன்பாட்டு முறையை ஆராய்ந்து மின்சாரப் பயன்பாட்டை உகந்த வகையில் மாற்றுகிறது. இதன் விளைவாக மின் நுகர்வு 10% வரை குறைக்கப்படுகிறது. இந்த அம்சம் மின்சக்தி திறனை அதிகரிப்பதால், இது சூழல் நட்பு குடும்பங்களுக்கு சிறந்த தேர்வாகும். AI எரிசக்தி முறை வீட்டு உபகரணங்களின் மின் நுகர்வை திறம்பட நிர்வகிக்க அனுமதிப்பதால் கணிசமான குறைப்பதற்கு வழிவகுக்கிறது. இந்த அம்சம் மின் பயன்பாட்டைக் கண்காணித்து கட்டுப்படுத்தி, குளிர்சாதனப் பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள் அதிகபட்ச திறனுடன் செயல்படுவதை உறுதி செய்கிறது.

SmartThings Home Care

Home Care ஆனது குளிர்சாதனப் பெட்டியின் கடந்த காலம் மற்றும் தற்போது தொடர்ந்து வரும் பிரச்சினையை கண்டறிந்து ஒப்பிட்டுப் பார்க்கும். அது குளிர்சாதனப் பெட்டியை உகந்த நிலையில், உச்ச ஆற்றல் திறனை உறுதி செய்து, ஆயுளை நீடிப்பதற்கான நடைமுறை ஆலோசனைகளை வழங்கும்.

Smart Lighting (Gentle Lighting)

மங்களான ஒளி படிப்படியாக பிரகாசமானதாக மாற்றப்படும் அதேநேரம், SmartThings செயலி மூலம் “மென்மையான ஒளி” பிரகாசமான ஒளியாக சீராக்கப்படும். பாவனையாளர்களின் வசதியை மேம்படுத்துவதாக, ஒரு நாளின் நேரத்தின் அடிப்படையில் இரவு நேர ஒளி வடிவம் தானியக்க முறையில் ஒளிர்வு சரி செய்யப்படும்.

Convertible 5-in1

Convertible 5-in1 அம்சமானது நவீன இலங்கை வீடுகளின் அனைத்து குளிர்சாதன சேமிப்பு தேவைகளுக்கும் ஏற்ப ஐந்து மாற்று முறைகளுடன் மேலதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது சிறந்த குளிர்சாதனப் பெட்டி பயன்பாட்டை உறுதி செய்து, மளிகைப் பொருட்கள் மற்றும் மீதமுள்ள பொருட்களுக்கு போதுமான இடத்தை வழங்குகிறது.

Twin Cooling Plus™

இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் காலநிலையின் புத்துணர்ச்சியை அனுபவிக்கலாம். Bespoke AI Double Door குளிர்சாதனப் பெட்டி இரண்டு ஆவியாக்கிகள் மற்றும் விசிறிகளைப் பயன்படுத்தி குளிர்சாதனம் மற்றும் உறைவிப்பு பகுதிகளை தனித்தனியாக நிர்வகிக்கிறது. இது 70% வரை ஈரப்பதத்தை தக்கவைப்பதை உறுதி செய்கிறது. அத்துடன், வாசனை கலப்பதைத் தடுத்து, நீண்ட காலத்திற்கு புதுமையான உகந்த நிலையைத் தக்கவைக்கிறது.

Active Fresh Filter+

குளிர்சாதனப் பெட்டிக்குள் காற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுடன், 99.99% பக்டீரியாக்களை அகற்றுவதன் மூலம் உணவு மாசுபடும் அபாயத்தைக் குறைக்கிறது. அது துர்நாற்றங்களை நீக்குவதோடு, செயலில் உள்ள கார்பன் வடிகட்டி மூலம் காற்றை தொடர்ந்து கிருமி நீக்கம் செய்து துர்நாற்றத்தை அகற்றுகிறது.

Power Cool and Power Freeze

Power Cool and Power Freeze செயல்பாடுகள் விரைவான குளிர்விப்பு மற்றும் உறைவிப்பை வழங்குகின்றன. விரைவாக பானங்களை குளிர விடுவது அல்லது குறுகிய காலத்தில் உணவுகளை உறைய வைப்பதை இது செயல்படுத்துகிறது. விரைவான குளிரூட்டல் அல்லது ஐஸ் உருவாக்க தேவைப்படும் சந்தர்ப்பங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பொருத்தமானது.

Digital Inverter Compressor

Digital Inverter Compressor நிலையான குளிர்விப்பு, குறைந்த மின் விரயம் மற்றும் குறைந்த உடைவு மற்றும் தேய்மானத்தை உறுதி செய்கிறது. 20 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் நம்பகமான நீண்ட காலப் பயன்பாட்டை உறுதி செய்கிறது.

புதிய Bespoke AI Double Door குளிர்சாதனப்பெட்டியை ரூ. 304,999 ஆரம்ப விலையில் Singhagiri, Singer, Softlogic மற்றும் Damro ஆகிய நிறுவனங்களில் இருந்து வாங்கலாம்.


Share with your friend
Exit mobile version