உள்நாட்டு ஆரம்பநிலை வியாபாரங்களின் ஸ்தாபகர்களுக்கு தமது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தில், பொருளாதார ஊக்குவிப்புக்கு பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக Founders Hub ஐ மைக்குரோசொப்ட் அண்மையில் இலங்கையில் நிறுவியது.
நிறுவனமொன்றை கட்டியெழுப்புகையில் பாரம்பரிய ரீதியில் காணப்படும் முட்டுக்கட்டைகளை அகற்றும் வகையிலும், பின்புலம், அமைவிடம், முன்னேற்றம் அல்லது ஈடுபாடு என எவ்வித பாகுபாடுமின்றி, ஸ்தாபகர்களுக்கு புத்தாக்கமாகவும், வளர்ச்சியை எய்தவும் உதவும் வகையில் மைக்குரோசொப்ட் Founders Hub வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம், நிபுணத்துவம் மற்றும் மென்பொருள் அனுகூலங்கள் போன்றவற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு தற்போது அணுகும் வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இவற்றில், மைக்குரோசொப்ட் காப்புரிமை பெற்ற அம்சங்களான Azure credits, Microsoft 365, GitHub Enterprise, Visual Studio Enterprise, Power BI Pro, Power Platform Power Automate மற்றும் பல அடங்கியுள்ளன.
மூன்று பிரதான அம்சங்களை உள்ளடக்கியதாக மைக்குரோசொப்ட் Founders Hub அமைந்துள்ளது:
அனைவருக்குமான புத்தாக்கத்தை வெளிப்படுத்தல்: ஸ்தாபகர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கையில் பாரம்பரியமாக எதிர்நோக்கும் தடைகளை இல்லாமல் செய்யும் வகையில் இந்தக் கட்டமைப்பு அமைந்துள்ளது. இதில் எந்தவொரு ஸ்தாபகரும் தமது பின்புலம், அமைவிடம் அல்லது அணுகல் எதுவாக இருப்பினும் வெற்றிகரமாக இயங்குவதற்கான வென்ச்சர் கெப்பிட்டல் தேவைப்பாடுகள் அல்லது மூன்றாம் தரப்பு உறுதிப்படுத்தல்கள் போன்றன அடங்கியுள்ளன.
வளர்ச்சியடையும் தொழில்நுட்ப அனுகூலங்கள்: ஆரம்பநிலை ஆயுள்நிலைக்கமைய, இந்த கட்டமைப்புகளின் ஸ்தாபகர்கள் வேகமான அபிவிருத்தியினூடாக, GitHub Enterprise மற்றும் Microsoft Azure ஆகியவற்றினூடாக இலவச அணுகலைப் பெறுவதாக அமைந்துள்ளதுடன், காலப் போக்கில் மேலதிக அனுகூலங்களைப் பெறக்கூடிய ஆற்றலையும் பெறும். ஆரம்பநிலை நிறுவனங்களின் பிரத்தியேகத் தேவைகளை மைக்குரோசொப்ட் இனங்காண்பதற்காக, புத்தாக்கமான நிறுவனங்களான சர்வதேச ரீதியில் AI ஆய்வு மற்றும் பிரயோகம் OpenAI போன்றவற்றுடன் கைகோர்த்துள்ளன. இதனால் GPT-3 மற்றும் Codex போன்ற AI கட்டமைப்புகள் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதுடன், பிரத்தியேகமான அனுகூலங்கள் மற்றும் விலைக்கழிவுகள் போன்றனவும் வழங்கப்படும்.
ஆலோசனை வழங்கல் மற்றும் வழிகாட்டலுக்கான அணுகல்: ஸ்தாபகராக திகழ்வது என்பதற்கு, இனி “நீங்கள் யாரை அறிந்துள்ளீர்கள்” என்பது அவசியமற்றது. இந்த கட்டமைப்பினூடாக, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு துறைசார் நிபுணர்களுடன் இணைப்பை ஏற்படுத்த முடியும் என்பதுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஆரம்பநிலை-மைய பயிற்சிகளை அணுகி மற்றும் துரிதமாக புத்தாக்கமடைந்து, நிபுணத்துவ தொழில்நுட்ப வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
சூக் ஹுன் செயா – பொது முகாமையாளர், மைக்குரோசொப்ட் தெற்காசிய புதிய சந்தைகள், அறிமுக நிகழ்வில் பிரதான உரையை ஆற்றியிருந்தார். இந்நிகழ்வு, கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் 2022 ஒக்டோபர் 27 ஆம் திகதி “‘Made in Asia’ to ‘Born in Asia’” எனும் தலைப்பில் இடம்பெற்றது. இதில் இலங்கையின் எதிர்பார்ப்புகள் நிறைந்த ஆரம்பநிலை நிறுவனங்கள் மைக்குரோசொப்ட் தொழில்நுட்பத்தின் வலுவூட்டலுடன் சர்வதேச மட்டத்துக்கு செல்வதற்கான வாய்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
தமது உரையின் போது அவர் தெரிவிக்கையில், “2050 ஆம் ஆண்டளவில், உலகின் மொத்த தேசிய உற்பத்தியில் அரைப் பங்கிற்கும் அதிகமான பங்களிப்பை ஆசியா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2030 ஆம் ஆண்டளவில் அரைப் பங்கிற்கும் அதிகமான ஆய்வு மற்றும் விருத்திக்கான முதலீடுகளை கொண்டிருக்கும். “ஆசிய தயாரிப்பு’ ஏற்றுமதிகள், “ஆசியாவில் பிறந்தவை” எனும் ஆக்கத்திறன், பிரயோகம் மற்றும் புத்தாக்கம் ஆகிய உயர் பெறுமதிகளால் விஞ்சப்பட்டு, 21ஆம் நூற்றாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தும். Azure இன் வலுவினால், ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு தமது ஆயுள் வட்டத்துடன் ஒப்பிடுகையில், அதிகளவு பங்களிப்பைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இலங்கையில் பெருமளவு வாய்ப்புகள் திறக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதை நாம் இனங்கண்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டமைப்பதில் அவற்றினால் ஆற்றக்கூடிய பங்களிப்பையும் கண்டுள்ளோம்.” என்றார்.
இந்த நிகழ்வில் குழுநிலை கலந்துரையாடலும் இடம்பெற்றது. இதில், ஆரம்பநிலை நிறுவனங்களின் ஸ்தாபகர்கள், காப்பாளர்கள், துரிதப்படுத்துநர்கள் மற்றும் அரச அமைப்பான ICTA இன் கொள்கை வடிவமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இலங்கையில் ஆரம்பநிலை நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் பொதுவில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்திப்பதற்கான தீர்வுகள் பற்றிய விடயங்களை இவர்கள் பகிர்ந்திருந்தனர். மைக்குரோசொப்ட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான SMB தலைமை அதிகாரியான சிந்தக துனுவில்ல வளவாளராக செயலாற்றியிருந்ததுடன், இந்த கலந்துரையாடலில், ICTA இன் இணை பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்திர சாமரட்ன, Hatch ஸ்ரீ லங்காவின் இணை ஸ்தாபகர் ஜீவன் ஞானம், PickMe ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜிஃப்ரி சுல்பர் (டிஜிட்டல் மொபிலிட்டி சொலூஷன்ஸ் லங்கா பிரைவட் லிமிடெட்) மற்றும் EIMSKY பிஸ்னஸ் சொலூஷன்ஸ் பிரைவட் லிமிடெட் ஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விரங்க கெகுலாவல ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
APAC இன் சர்வதேச பங்காளர் தீர்வுகளின் பிரதம தொழில்நுட்ப அதிகாரி மெத்தியு ஹார்ட்மன் மற்றும் மைக்குரோசொப்ட் க்ளவுட் தீர்வுகள் கட்டமைப்பாளர் சுவனி செனானி ஆகியோர் இணைந்து, பார்வையாளர்களுக்கு “Build with Azure” பற்றிய தொழில்நுட்ப விளக்கங்களை வழங்கியிருந்தனர். இதன் போது, Azure cloud ஊடாக ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு கட்டியமைத்துக் கொள்ளக்கூடிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் உள்ளம்சங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.
மைக்குரோசொப்ட் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் முகாமையாளர் ஹர்ஷ ரந்தெனி கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழல் காணப்பட்ட போதிலும், இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவனங்கள் மீதான முதலீடுகள் 2021 ஆம் ஆண்டில் 13% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. இலங்கையில் மைக்குரோசொப்ட் Founders Hub ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு அவசியமான ஆரம்பநிலை வழிகாட்டல்களை வழங்கி, பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யச் செய்து, இலங்கையிலிருந்து புத்தாக்கத்தை உலக மட்டத்துக்கு கொண்டு செல்ல வாய்ப்பளிக்கின்றோம்.” என்றார்.
நாட்டில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் மத்தியில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான நிறுவனத்தின் முயற்சிகளில் ஒன்றாக இலங்கையில் மைக்குரோசொப்ட் Founders Hub நிறுவப்பட்டுள்ளமை அமைந்துள்ளது. ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு காணப்படும் மைக்குரோசொப்ட் தொழில்நுட்பங்களின் பரந்தளவு அனுகூலங்களைப் பயன்படுத்தி, தமது வியாபாரத்தை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடியதாக நிலைநிறுத்த முடியும் என்பதுடன், முழுத் தேசத்துக்கும் பெறுமதிகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.
2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மைக்குரோசொப்ட் பிரசன்னத்தைக் கொண்டுள்ளது.
மைக்குரோசொப்ட் பற்றி
மதிநுட்பமான cloud யுகத்துக்கு டிஜிட்டல் மாற்றியமைப்பை மைக்குரோசொப்ட் செயற்படுத்துவதுடன், உலகிலுள்ள ஒவ்வொரு நபரையும், நிறுவனத்தையும் அதிகளவு எய்தச் செய்யக்கூடிய வகையில் வலுவூட்டுவது அதன் நோக்காகும்.
மேலதிக தகவல்களுக்கு, ஊடகங்கள் மாத்திரம்:
Microsoft SEA New Markets
Thilanka Abeywardena
Thilanka.Abeywardena@microsoft.com
Ogilvy Public Relations Sri Lanka
Pasini Withanage