Eyeview Sri Lanka

யூனியன் அஷ்யூரன்ஸின் முன்னணி முன்னெடுப்புகளுக்கு சர்வதேச கௌரவிப்பு

Share with your friend

இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் முன்னோடியாகத் திகழும் யூனியன் அஷ்யூரன்ஸ் நான்கு சர்வதேச விருதுகளை சுவீகரித்துள்ளது. குளோபல் பிஸ்னஸ் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட இந்த கௌரவிப்புகளினூடாக, தொழிற்துறையின் முன்னோடியான புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியன கௌரவிக்கப்பட்டிருந்தன. வியாபார புத்தாக்க செயற்பாட்டாளர்கள், சந்தை புரட்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னோடிகளுக்கு வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.             

யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியீட்டிய விருதுகளில், 2022ஆம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் மயமான ஆயுள் காப்புறுதி, 2022ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த புதிய காப்புறுதித் தீர்வு, 2022ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் புத்தாக்கமான கல்விக் காப்புறுதித் திட்டம் மற்றும் 2022 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகள் காப்புறுதி நிறுவனம் ஆகியன அடங்கியிருந்தன. 

இந்த கௌரவிப்புகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்தததைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஒப்பற்ற வகையில் கவனம் செலுத்தும் நாம், புத்தாக்கம் மற்றும் சேவைச் சிறப்பு ஆகியவற்றினூடாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் செயலாற்றியிருந்தோம்.” என்றார்.

கோம்ஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில், “குளோபல் பிஸ்னஸ் சஞ்சிகை போன்ற பெருமைக்குரிய சஞ்சிகையிடமிருந்து கௌரவிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு உண்மையில் தூர நோக்குடைய தோற்றப்பாடு அவசியமாகின்றது. “புத்தாக்கமான தீர்வுகளினூடாக இலங்கையின் ஆயுள் காப்புறுதித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக எமது ஆற்றல்களை டிஜிட்டல் மயப்படுத்தியுள்ளோம்.” என்றார்.

நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான தந்திரோபாயத்தினூடாக 2022 ஆம் ஆண்டின் சிறந்த டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநர் எனும் விருதை பெற்றுக் கொள்ள முடிந்தது. பாவனையாளர் நட்புறவுத்தன்மை, சௌகரியம் மற்றும் புதிய நிலைகளை எய்தும் தன்மை போன்றவற்றை ஒப்பற்ற வகையில் ஈட்டக்கூடிய டிஜிட்டல் அனுபவங்களை இது வழங்கியிருந்தது. Clicklife digital app ஐ மையமாகக் கொண்டு இது பெருமளவில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் ஆயுள் காப்புறுதி சேவைகளை வழங்குவதை Clicklife புரட்சிகரமானதாக்கியிருந்ததுடன், மொபைல் சாதனங்களினூடாக தமது காப்புறுதிகளை இலகுவாக நிர்வகிப்பதற்கு வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டியிருந்தது.

சிசுமக+ திட்டத்துக்கு 2022ஆம் ஆண்டின் இலங்கையின் மிகவும் புத்தாக்கமான கல்வி காப்புறுதித் திட்டத்துக்கான விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் மாணவர்களுக்கு தடங்கலில்லாத கல்வியை உறுதி செய்யும் வகையில் இந்தத் திட்டம் விசேடமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிசுமக+ திட்டத்தினூடாக மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய கல்வி நிதியம் வழங்கப்படுவதுடன், நிறுவனத்தினால் வழங்கப்படும் வருடாந்த வட்டியினூடாக தொடர்ச்சியாக இந்தத் திட்டம் வளர்ச்சியடையும். இந்தத் தொகை மாதாந்த பங்கிலாபமாக நிதியத்தில் சேர்க்கப்படுவதுடன், முதிர்வின் போது லோயல்டி போனஸ் கொடுப்பனவாக 15 சதவீதம் வழங்கப்படும்.

2022ஆம் ஆண்டின் சிறந்த சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட காப்புறுதி நிறுவனத்துக்கான விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் தன்வசப்படுத்தியிருந்தது. தொற்றுப் பரவல் காணப்பட்ட பகுதியில் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு தூர நோக்குடைய திட்டங்களுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. தேசிய அபிவிருத்திக்கு ஆதரவளிப்பது எனும் நிறுவனத்தின் உறுதி மொழிக்கமைய, சமூக பொறுப்புணர்வு திட்டங்கள், சுகாதாரம், கல்வி மற்றும் சூழல் ஆகிய பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருந்தன. சுகாதார அமைச்சுடன் இணைந்து இணைந்த வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது. வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெருமளவு வெற்றிகரமாக அமைந்திருந்தது. ஒட்சிசன் இயந்திரங்கள், அவசர ட்ரொலிகள், வீடியோ லரின்கோஸ்கோப்கள் மற்றும் வென்டிலேற்றர்கள் போன்றவற்றை வழங்கியிருந்ததனூடாக இதற்கு பங்களிப்புகள் வழங்கப்பட்டிருந்தன.

கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 17.3 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 49.8 பில்லியனையும், 2021 டிசம்பர் மாதமளவில் மூலதன போதுமை விகிதமாக (CAR) 228% ஐக் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 3000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளதுடன், மாற்றமடைந்து வரும் ஆயுள் காப்புறுதித் துறையில் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend
Exit mobile version