Site icon Eyeview Sri Lanka

ரிட்ஸ்பரி ஜுனியர் தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் 2022 இல் நெவிந்து மற்றும் சனித்மா ஆகியோர் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தயிருந்தனர்

Share with your friend

சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் புகழ்பெற்ற சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி அனுசரணையில் இடம்பெற்ற 33 ஆவது ரிட்ஸ்பரி கனிஷ்ட தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் 2022 போட்டிகள் அண்மையில் வெற்றிகரமாக பூர்த்தியடைந்தன.

கொழும்பு SSC ஸ்கொஷ் அரங்கில் இறுதிப் போட்டி இடம்பெற்றதுடன், 9, 11, 13, 15, 17மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 300 க்கும் அதிகமான சிறுவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர்.

தேசிய ஸ்கொஷ் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி வழங்கும் பங்களிப்பு தொடர்பில் CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த காலங்களில், இலங்கையில் ஸ்கொஷ் விளையாட்டை தேசிய மட்டத்தில் மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டோம். உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் சர்வதேச மட்டத்தில் தெரிவாவதில் எமது முயற்சிகளும் பங்களிப்புச் செய்துள்ளன என்பதில் நாம் பெருமை கொள்வதுடன், இந்தச் சம்பியன்ஷிப் எதிர்காலத்திலும் தொடர்ந்து இடம்பெறும் என்பதையும் தெரிவிக்கின்றோம். இலங்கையில் விளையாட்டுக்களுக்கு ஆதரவளிப்பதில் 16 வருட கால வரலாற்றை ரிட்ஸ்பரி கொண்டுள்ளது. எமது மெய்வல்லுந வீரர்களை, தேசத்தின் பெருமையாக நாம் கருதுகின்றோம்.” என்றார்.

டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் நெவிந்து லக்மன் மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த சனித்மா சினலி ஆகியோர் 19 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிரிவுகளின் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும், ஆண்டின் சிறந்த கனிஷ்ட தேசிய ஆண் மற்றும் பெண் வீர, வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஆண்டின் நம்பிக்கைக்குரிய சிறந்த ஆண் வீரராக, மருதானை புனித சூசையப்பர் கல்லூரியின் மொஹமட் ரில்வா மற்றும் பெண் வீராங்கனையாக அனுலா வித்தியாலயத்தின் புன்சரா நிருஷி விக்ரமசிங்க ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

நாடு முழுவதிலும் ஸ்கொஷ் விளையாட்டை ஊக்குவிப்பதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ரிட்ஸ்பரி, தொடர்ச்சியாக இலங்கை ஸ்கொஷ் உடன் கைகோர்த்து, 14 ஆவது வருடமாகவும் தொடர்ச்சியாக இந்த சம்பியன்ஷிப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பங்காண்மை தொடர்பில் இலங்கை ஸ்கொஷ் தலைவர் சுரேன் கொஹோபன்கே கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த தசாப்த காலப்பகுதிக்கு மேலாக எமது வெற்றியின் பங்காளராக ரிட்ஸ்பரி இணைந்துள்ளமைக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம். இந்தப் பங்காண்மையினூடாக ஸ்கொஷ் விளையாட்டை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டிலும், இந்தப் பங்காண்மையினூடாக, நாட்டினுள் ஸ்கொஷ் விளையாட்டின் திறமையை மேம்படுத்த முடிவதாக நாம் நம்புகின்றோம்.” என்றார்.

நிகழ்வின் வருடாந்த நாட்காட்டியில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவதுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து திறமையான வீரர்கள் தற்போது உருவாகியுள்ளனர். விளையாட்டை மேம்படுத்துவது தொடர்பில் ரிட்ஸ்பரி கொண்டுள்ள அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. மாவட்ட ரீதியில் ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்வதுடன், அதிகளவு வீரர்கள் பங்கேற்பதையும் உறுதி செய்கின்றது.

Image 1 :  ஆண்டின் சிறந்த கனிஷ்ட தேசிய பெண்கள் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் சனித்மா சினலி மற்றும் ஆண்டின் சிறந்த கனிஷ்ட தேசிய ஆண்கள் வீரராக தெரிவு செய்யப்பட்டிருந்த டி. எஸ். சேனநாயக்க கல்லூரியின் நெவிந்து லக்மன் ஆகியோரைக் காணலாம்.

Image 2 : ஆண்டின் நம்பிக்கையூட்டும் பெண் வீராங்கனையாக அனுலா வித்தியாலயத்தின் புன்சரா நிருஷி விக்ரமசிங்க மற்றும் ஆண்டின் நம்பிக்கையூட்டும் ஆண் வீரராக, புனித. சூசையப்பர் கல்லூரியின் மொஹமட் ரில்வான் ஆகியோர் காணப்படுகின்றனர்.

Image 3: CBL ஃபுட்ஸ் மற்றும் இலங்கை ஸ்கொஷ் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் வெற்றியாளர்கள் காணப்படுகின்றனர்.


Share with your friend
Exit mobile version