Site icon Eyeview Sri Lanka

ரொபோட்டிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புக்கள் மற்றும் எதிர்காலத்தை காட்சிப்படுத்தும் பல்திறமையாளர்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்த SLIIT ROBOFEST 2021

Share with your friend

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள ஆர்வம் மிக்க இளம் பொறியியலாளர்களுக்கு வருடாந்தம் நடத்தப்படும் SLIIT இன் ROBOFEST 2021 போட்டி, ரொபோட்டிக்ஸ் தொடர்பான கண்டுபிடிப்புக்கள் மற்றும் எதிர்காலத்தை காட்சிப்படுத்தும் பல்திறமையாளர்களின் பங்குபற்றலுடன் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்தது.

SLIIT  இன் பொறியியல் பீடத்தினால் 11வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில் பல்கலைக்கழகப் பிரிவில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நியூவேரா (Newwera) அணி வெற்றிபெற்று 50,000 ரூபா பணப் பரிசைப் பெற்றுக்கொண்டது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சேரக்கிட்பிரேக்கர்ஸ் (CircuitBreakers) அணி இரண்டாவது இடத்தை வெற்றிகொண்டு 30,000 ரூபா பணப்பரிசைப் பெற்றுக்கொண்டதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சைபர்கிளான் (cyberClan) அணி மூன்றாவது இடத்தை வெற்றிகொண்டு 20,000 ரூபா பணப்பரிசைப் பெற்றுக் கொண்டது. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் அயுர (Aura) அணிக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. 

பாடசாலைப் பிரிவில் மாத்தறை ராஹூல பாடசாலையைச் சேர்ந்த அடொம் (Atom) அணி வெற்றிபெற்றதுடன், 30,000 பணப்பரிசையும் பெற்றுக் கொண்டது. எலிசபெத் மொயர் பாடசாலையின் சார்பில் கலந்துகொண்ட மொயர் ரொபோட்டிக்ஸ் (Moir Robotics) அணி இரண்டாவது இடத்தைப் பிடித்து 20,000 ரூபா பணப்பரிசைப் பெற்றுக் கொண்டது. மூன்றாவது இடத்தைப் பிடித்த கண்டி தர்மராஜ கல்லூரியின் றஜன்ஸ் ட்ரொனிக்ஸ் (RAJANS#TRONICS) அணி மற்றும் மொயர் ரொபோட்டிக்ஸ் (Moir Robotics) அணி ஆகியன தலா 15,000 ரூபாவைப் பெற்றுக் கொண்டன. ஹாட்லி கல்லூரியின் சார்பில் கலந்துகொண்ட யூனிவேர்ஸ் (Universe) அணி 3,000 ரூபா அறுதல் பரிசைப் பெற்றுக் கொண்டது.

இந்த வருட போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொறியியல் பீடத்தின் இலத்திரனியல்  மற்றும் மின்னணுவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அன்டன் ஹெட்டியாராச்சி குறிப்பிடுகையில், “ SLIIT இன் ROBOFEST கடந்த பல ஆண்டுகளாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே பிரபலமடைந்து ஆண்டு தோறும் எதிர்பார்க்கும் போட்டியாக மாறியுள்ளது. ஆர்வமுள்ள இளம் பொறியியலாளர்கள் தமது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான தமது ஆர்வத்தையும், திறமையையும் வெளிப்படுத்த இந்தப் போட்டி சிறந்ததொரு தளமாக அமைந்துள்ளது. ஆக்கப்பூர்வமான பார்வையை விரிவுபடுத்தவும், நிஜ உலக பயன்பாடுகளாக மாறக்கூடிய ஒரு தீர்வை உருவாக்கவும் ROBOFEST 2021  அவர்களுக்கு உதவியுள்ளது” என்றார்.

ROBOFEST 2021 இல் பல்கலைக்கழகப் பிரிவில் 13 பல்கலைக்கழகங்களிலிருந்து 37 குழுக்கள் பதிவு செய்திருந்தன. பாடசாலைப் பிரிவில் 29 பாடசாலைகளைச் சேர்ந்த 44 குழுக்கள் விண்ணப்பித்திருந்தன. பல்கலைக்கழகங்கள் பிரிவில்  மொரட்டுவ, பேராதனை, ஜயவர்த்தனபுர மற்றும் SLIIT ஆகிய பல்கலைக்கழகங்களிலிருந்து 18க் குழுக்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தன.  இவை தமது முதலாவது இலக்கைப் பூர்த்திசெய்தன. இறுதியாக 8 பேர் தெரிவுசெய்யப்பட்டனர். மேலதிகமாக பாடசாலைப் பிரிவில் 15 பாடசாலைகளைச் சுர்ந்த 18 அணிகள் முதலாவது இலக்கைப் பூர்த்திசெய்திருந்தன.

ROBOFEST 2021 இல் ஒட்டுமொத்தமாக 400ற்கும் அதிகமான மாணவர்கள் பதிவுசெய்ததுடன், 180 பேர் முதலாவது இலக்கைப் பூர்த்திசெய்ததுடன், 60 மாணவர்கள் இறுதிச் சுற்றில் பங்கெடுத்தனர்.


Share with your friend
Exit mobile version