Site icon Eyeview Sri Lanka

வணிக வனபயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்ப நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது.

Share with your friend

இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகவுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை  அண்;மையில் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பல தலைமுறைகளாக அனுபவத்தையும் பல வருட ஆய்வுகள் மற்றும் சோதனைகளின் மூலம் பெற்ற அறிவையும் கொண்ட ‘சதாஹரித’ குழுமத்தின் கௌரவத் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன தலைமையில் 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனமானது தேக்கு, மஹோகனி, வென்சந்தனம், ரம்புட்டான் போன்ற தாவரங்கள் பலவற்றை இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பயிரிட்டு இந்நாட்டுக்கு தேவையான அந்நியசெலாவணியை பெற்றுக்கொள்ள பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2013 ஆம் ஆண்டில், அகவுட் செடிகளை நடும் பணிகளை செய்யத் தொடங்கி, தற்போது 8 இலட்சத்துக்கும் அதிகமான செடிகளை ‘சதாஹரித’ பெருந்தோட்ட நிறுவனம் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்பட்டு, நாளுக்கு நாள் வெற்றிப்பாதையில் பயணித்த இந்த நிறுவனத்தின் தோட்டங்களில் இன்று அகவுட் செடிகள் மாத்திரம் 1360 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவி, இலங்கையில் மாத்திரமன்றி வெளிநாட்டு சந்தைகளிலும் பிரகாசிக்கும் வர்த்தக நாமமாக மாறியுள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சதாஹரித நிறுவனம், 2020  மே 21இல், அகவுட் பயிரிடல் முதல் அதனுடன் தொடர்புடைய பொருட்களின் உற்பத்தி வரையில், முழுமையான  வெளிப்படையான செயற்பாடுகள் மூலம் அகவுட் விதைகளில் இருந்து வாசனை திரவியங்களை பிரித்தெடுத்தல் அகவுட் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்து இலங்கையின் வர்த்தக நாமமாக ‘Sior Verde’ என்ற வர்த்தக நாமத்தை உலக சந்தையுடன் இணைத்து இந்நாட்டின்  பொருளாதாரத்தை உயர்த்த பெரும் பங்காற்றிவருகிறது.

அகவுட் தொடர்பான உற்பத்திகள் ‘Oud’ தயாரிப்புகளாக அழைக்கப்படுவதுடன், வாசனை திரவியங்கள், தேயிலை, ‘Oud’  எண்ணெய், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் துணை தயாரிப்புகள் இந்த பெறுமதியான தாவரத்தின் வேர் முதல் இலை வரையில் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கைக்குள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஏற்றுமதி உரிமத்தை கொண்ட நிறுவனம் என்ற வகையில்  அகவுட் தொடர்பான தயாரிப்புகளை சட்டப்பூர்வமாக உலக சந்தையில் சேர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. Sadaharitha Oud பயன்படுத்தப்பட்ட உற்பத்திகள் மற்றும் வாசனை திரவிய தயாரிப்புகள் பல ‘Sior Verde’ என்ற எங்களின் வர்த்தக நாமத்தின் கீழ் சந்தையில் சேர்க்கப்பட்டுள்ளன. Sadaharitha Oud வர்த்தக நாமத்தின் கீழ் தற்போது இலங்கையில் மாத்திரமன்றி கட்டார், மலேசியா, சிங்கப்பூர்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கிளைகள் பலவற்றை திறப்பதற்கு சதாஹரித நிறுவனத்தின் கௌரவத் தலைவர் திரு. சதீஸ் நவரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் மேன்மைப்படுத்தப்பட்ட அறிவின் கீழ் தற்போது நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய பெறுமதியை விடவும் அதிக பெறுமதியை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் Oud தொடர்பான  பல உப தயாரிப்புகளை சந்தையில் விடுவதற்கு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் தயாராகியுள்ளன. அதன் இரண்டம் கட்டம் . One Galle Face வர்த்தக கட்டிடத்  தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள Oud Galleria விற்பனை மற்றும் காட்சியறையில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் முன்னணி வாசனை திரவிய உற்பத்தியில் மாபெரும் வர்த்தக நாமமான அல்வீனா வாசனை திரவியங்கள் உற்பத்தி நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக சதாஹரித குழுமத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. அல்வீனா நிறுவனத்தின் செயற்பாட்டு நடவடிக்கையை சதாஹரித குழுமத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம் முழுவதும் பரப்ப அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட பின்னர் இரு தரப்பினராலும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.


Share with your friend
Exit mobile version