- புத்தம் புதிய வாகனங்களை உள்நாட்டில் பொருத்தும் SOP அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை எய்தப்பட்டுள்ளது
- கடந்த 6 மாதங்களில் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளில் அதிகரிப்பு பதிவு
- 2021 ஒக்டோபர் மாதம் முதல் 10,000 உள்நாட்டில் பொருத்தும் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்
இலங்கை வாகன உதிர்பாகங்கள் உற்பத்தியாளர்கள், கடந்த சில மாதங்களில் நாட்டின் மேல் மாகாணத்தில் 5000 க்கும் அதிகமான புதிய தொழில் நியமனங்களை வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் திமந்த ஜயவர்தன இதனைத் தெரிவித்தார்.
ஆண்டின் முற்பகுதியில், தொழிற்துறைகள் அமைச்சுடன் இலங்கை வாகன உதிரிப்பாகனங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வாகனப் பொருத்துகைகள் தொழிற்துறை ஆகியன நியம செயற்பாட்டு செயன்முறை (SOP) வாகன உற்பத்தி/பொருத்துகை துறை மற்றும் இலங்கை வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிற்துறைக்காக அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நியமனங்கள் தொடர்பில் ஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “SOP அறிமுகத்துடன் துறைசார் பங்காளர்கள் கடுமையாக உழைப்பதை அவதானிக்க முடிந்ததுடன், புதிய சூழ்நிலை வாய்ப்புகளின் உச்சகட்ட பயனைப் பெற்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. அண்மைக் காலத்தில், தொழிற்பயிற்சி கல்வியகத்தில் NVQ நிலை 3-4 சான்றிதழ் தகைமையைப் பெற்றுள்ளனர். இவர்களில் பலர் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் துறை நிறுவனங்களில் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அடுத்த இரண்டு முதல் மூன்றாண்டுகளில், இந்தத் தொழிற்துறையில் சுமார் 45000 தொழில் வாய்ப்புகள் தோற்றம் பெறும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
பல்வேறு வாகன உதிரிப்பாகங்கள் தற்போது இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றில் டயர்கள், பற்றரிகள், புஷ்கள் மற்றும் காபெட் போன்ற இறப்பர் உதிரிப்பாகங்கள், சைலென்சர்கள், ஆசனங்கள், ரேடியேற்றர்கள், பொடி பெனல்கள் மற்றும் பந்தயக் கார்களுக்கான பம்பர்கள், ஆசனப் பட்டிகள் தாக்க உணரி ஆளிகள் மற்றும் எயார் பாக்கள், மற்றும் ட்ரக் ட்ரெய்லர்கள் போன்றன அடங்குகின்றன.
“சந்தையில் புதிய ட்ரக் உற்பத்தியாளர் ஒருவர் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2021 ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பத்தாயிரம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்படும். இந்த சைக்கிள்களில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பற்றரிகள், ஆசனங்கள், வயர் ஹார்னெஸ், பிளாஸ்ரிக் மற்றும் இறப்பர் பொருட்கள் மற்றும் டயர்கள் போன்றன அடங்கியிருக்கும்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்நாட்டில் வாகன உதிரிப்பாகங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான பல்வேறு கொள்கைகள் உள்ளடங்கியிருந்தன. “கடந்த ஆண்டில், SLACMA இனால் நிதி அமைச்சுக்கு 10 ஆண்டு கால திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு வாகன பொருத்துகை மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோகத் துறையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான முக்கிய பங்காக இது அமைந்திருக்கும். துறையில் ஒற்றுமை மற்றும் நிதி அமைச்சு மற்றும் தொழிற்துறைகள் அமைச்சிடமிருந்து எமக்குக் கிடைத்த நேர்த்தியான பதிலளிப்புகள் போன்றன இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு உதவியாக அமைந்திருந்தன.” என்றார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “தொழில் வாய்ப்புகள் உருவாக்கம் என்பதை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வயர் ஹார்னெஸ் என்பதை பெருமளவு பெண்கள் உற்பத்தி செய்கின்றனர். இதனூடாக, இந்தத் துறையில் பெண்களுக்கான தொழில் வாய்ப்பு 60 இலிருந்து 70 சதவீதமாக அதிகரித்திருந்தது. தொற்றுப் பரவலின் அழுத்தத்தின் போதும், மேம்படுத்தப்பட்ட மற்றும் அதிகரித்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருத்துகையில் தொழில் வாய்ப்புகள் உருவாக்கம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.” என்றார்.