Site icon Eyeview Sri Lanka

விக்டோரியாவில் விடுமுறை இல்லங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் ஆரம்பம்

Share with your friend

திகன, Victoria Golf and Country Resort (VGCR) பகுதியை அண்மித்து 16 விடுமுறை இல்லங்களை நிர்மாணிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் அறிவித்துள்ளது. ‘Sunrise Ridge’ என பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக மொத்த மனைகளின் 60 சதவீதமானவை விற்பனையாகியிருந்தமை விசேட அம்சமாகும்.

கொல்ஃவ் திடலை முகப்பாகக் கொண்டும், விக்டோரியா நீர்த்தேக்கம் மற்றும் கண்டி மலைக் குன்றுகள் போன்றவற்றை காட்சிகளாக கொண்டும் அமைக்கப்படும் Sunrise Ridge, புகழ்பெற்ற கட்டடக் கலைஞரான மதுர பிரேமதிலகவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பிரத்தியேகமான இந்த பதினாறு மனைகள் 2 படுக்கையறைகளைக் கொண்டதாக அமைந்திருக்கும் என்பதுடன் சுமார் 2000 சதுர அடியில் அமையப்பெறும். ஆரம்ப விலை ரூ. 55.5 மில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மனைகளின் உரிமையாளர்களுக்கு 6 வருட காலப்பகுதிகளுக்கு தமது சொத்துகளை நிர்வகிப்பதற்கான சலுகை வழங்கப்படும்.

ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் பிரிவு தலைமை அதிகாரியும், நிறைவேற்று உப தலைவருமான நயன மாவில்மட கருத்துத் தெரிவிக்கையில், “பலர் தமது இரண்டாவது மனைகளை சிறந்த அமைவிடங்களில் கொண்டுள்ள போதிலும், அவற்றை பேணிப் பராமரிப்பது இலகுவான காரியமல்ல. வாடிக்கையாளர்களிடமிருந்து அந்த சுமையை இல்லாமல் செய்யும் தீர்வொன்றை வடிவமைக்க நாம் தீர்மானித்தோம். எனவே அவர்களுக்கு தமது சொந்த இருப்பிடத்திலிருந்தவாறு இனிய விடுமுறை அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். பிரத்தியேகமான சமூக கட்டமைப்பினுள் அமைந்த அழகிய இல்லங்களினூடாக, சிறந்த காட்சி அமைப்புகள், சிக்கலில்லாத பயண வசதிகள் போன்றவற்றுடன் அமைந்திருப்பதுடன், சுற்றுலா அபிவிருத்தியுடன் இலாமீட்டக்கூடிய வாய்ப்புகளும் வழங்கப்படும். இவற்றுடன் உலகத் தரம் வாய்ந்த கொல்ஃவ் திடலும் அருகாமையில் அமைந்துள்ளது.” என்றார்.

விக்டோரியா கொல்ஃவ் அன்ட் கன்ட்ரி ரிசோர்ட் ஐச் சேர்ந்த சொத்துகள் சிறந்த முதலீட்டு தெரிவாக அமைந்திருப்பதுடன், பராமரிப்பு மற்றும் செயற்படுத்தல் செலவுச் சுமை அற்ற உயர் தர வாழ்க்கை முறையை பேண எதிர்பார்ப்போருக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கும். விக்டோரியா கொல்ஃவ் அன்ட் கன்ட்ரி ரிசோர்ட் இனால் சகல பராமரிப்பு மற்றும் தொழிற்பாட்டு செலவுகளும் ஏற்கப்பட்டு வழங்கப்படும் முதலீட்டுத் திட்டமாக அமைந்திருக்கும் ‘Sunrise Ridge’ விடுமுறை இல்லங்களின் உரிமையாளர்களுக்கு ஐந்து வருட காலப்பகுதிக்கு கொல்ஃவ் கழகத்தில் இலவச அங்கத்துவத்தை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். மேலும், உணவு மற்றும் பானங்களுக்கு விலைக்கழிவுகள் மற்றும் 90 நாட்கள் வரை இலவசமாக தங்கியிருக்கும் வசதி போன்றவற்றுடன் ஹோட்டல் அறை வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதமும் வழங்கப்படும்.

விக்டோரியாவில் அமைந்துள்ள Sunrise Ridge என்பது ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸின் பிந்திய உள்ளடக்கமாக உள்ளது. சர்வதேச தரங்களுக்கமைய வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் சிறந்த கொல்ஃவ் திடல்களில் ஒன்றாக விக்டோரியா கொல்ஃவ் அன்ட் கன்ட்ரி ரிசோர்ட் தரப்படுத்தப்பட்டுள்ளது. நக்கள்ஸ் மலைத் தொடர் மற்றும் விக்டோரியா நீர்த்தேக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த காட்சியமைப்பை வழங்குவதாக அமைந்துள்ளன. மேலும், மாபெரும் கொல்ஃவ் முகாமைத்துவ நிறுவனமான Troon இன்டர்நஷனல் உடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் 120 ஏக்கர் காணி, 18 துளையுடனான சம்பியன்ஷிப் கொல்ஃப் திடல் ஆகியவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை தன்வசம் கொண்டுள்ளது.


Share with your friend
Exit mobile version