Site icon Eyeview Sri Lanka

வியாபார செயற்பாடுகளுக்கு கடன் தேவைப்பட்டால்
HNB Finance போன்று வேறெதுவும் இல்லை….

Share with your friend

அச்சினி லியனகே

சுனிமல்ஸ் ஆடைத்தொழிற்சாலை மற்றும் 

ஹோட்டெல் வர்த்தகம்

இரண்டு தலைமுறைகளின் பாரம்பரியத்தை தற்போதைய புதிய சந்தை முறைக்கு மாற்றியமைக்க அவர் பாடுபடுகிறார். அந்த முயற்சியின் மூலம் இப்போது தன் தொழிலை நிலைநிறுத்த முடிந்தது. திருமதி அச்சினி லியனகே ஆடைத் தொழிற் சந்தையில் ஒரு பிரபலமான வியாபாரமாக தனது வியாபாரத்தை நிலை நிறுத்துவதற்கான தனது முயற்சிகள் குறித்து எம்மிடம் கலந்துரையாடினார்…..

“….. இந்த வியாபாரத்தை ஆரம்பித்தது எனது தந்தை…. எங்களது குடும்ப வியாபாரமாக நடத்திக் கொண்டு சென்ற இந்த கைநெசவு ஆடை உற்பத்தியானது தற்போது இந்த நிலைக்கு முன்னேற்றுவதற்கு நானும் எனது தங்கை ருவினியும் கடுமையாக உழைத்தோம். இலங்கை கிராமங்களிலுள்ள பெண்களினால் தயாரிக்கப்படும் கைநெசவு ஆடைகளை நாங்கள் அவர்களிடமிருந்து கொள்வனவு செய்து எங்களது காட்சியங்களின் ஊடாக விற்பனை செய்வதையே நாங்கள் செய்கிறோம்….. அதற்காக எமக்குச் சொந்தமான காட்சியறைகள் கண்டி, குருணாகல், கொழும்பு, பெலவத்தை, எல்ல போன்ற பிரதேசங்களில் அமைத்துள்ளோம்…. அங்கு சுனிமல் ஆடைகள் என்ற பெயரில்……. கிராமப்புறங்களிலுள்ள பெண்களிடம் கொள்வனவு செய்த ஆடைகளை சந்தைக்கு ஏற்றவாறு தயாரித்து, சிறந்த தரத்துடன் விற்பனை செய்கிறோம்…. இலங்கையில் விற்பனை செய்வதற்கு மேலதிகமாக நாம் வெளிநாடுகளுக்கும் எமது தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்கிறோம். இந்த வர்த்தகத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு செல்கையில் கண்டி ரஜபிஹில்ல மாவத்தையில் Avora என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றையும் புதிதாக ஆரம்பிக்க நாம் நடவடிக்கை எடுத்தோம்….. ஹோட்டலை நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்து அதற்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு பணத் தட்டுப்பாடு இருந்தது….. அதற்கு கடன் தொகையொன்றைப் பெற்றுக் கொள்ள சிறந்த இடமொன்றை தேடிக்கொண்டிருக்கும் போதுதான் எங்களுக்கு HNB Finance பற்றி அறியக் கிடைத்தது….. கடன் பெற தேவையான தகவல்களையும் விண்ணப்பங்களையும் பூர்த்தி செய்த பின்னர் அவ்வப்போது அந்த நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை…. கேட்ட கடன் தொகை எவ்வித இடையூறுகளும் இல்லாமல் கிடைத்தது…. அந்த உதவி எங்களுக்கு பெருமளவில் உதவியது. ஹோட்டலின் வேலையை முழுமையாக முடிக்கவும் உதவியது….. இப்போதும் நாம் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த HNB Financeக்கு செல்ல வேண்டியதில்லை. ஒரு தொழிலை நடத்துவதற்கு கடன் பெற விரும்பும் எவருக்கும், நான் கூறுவது….. ஒன்றும் யோசிக்காமல் HNB Financeக்குச் செல்லுங்கள்….. எனது அனுபவத்தில் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் கடன் தேவையை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் நிறைவேற்றுவதற்கு நிறுவனத்தின் அதிகாரிகள் எப்போதும் உறுதியுடன் இருக்கிறார்கள் என்பதை என்னால் அச்சமின்றி கூற முடியும்.


Share with your friend
Exit mobile version