நாட்டு மக்களுக்கு உயர் தரம் வாய்ந்த மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதை உறுதி செய்வதில் முன்னோடியாக அமைந்திருக்கும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ், Bureau Veritas இடமிருந்து சிறந்த விநியோக செயன்முறைகளுக்கான ‘Good Distribution Practices’ (GDP) சான்றைப் பெற்றுள்ளது.
GDP சான்றளிப்பினூடாக, உலக சுகாதார ஸ்தாபனத்தின் மருந்துப் பொருட்களின் சிறந்த விநியோக செயன்முறைகளை ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் பின்பற்றுவதை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த சான்றளிப்பினூடாக, விநியோகத் தொடரில் தர முகாமைத்துவ கட்டமைப்புகள் தொடர் தன்மையாக அமைந்திருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. Bureau Veritas என்பது புகழ்பெற்ற சான்றளிப்பு அமைப்பாக அமைந்திருப்பதுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் நிறுவனங்களுக்கு தமது செயற்திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு ஆதரவளிக்கின்றது.
இந்த கௌரவிப்பு தொடர்பில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் ஹேமாஸ் சேர்ஜிகல் அன்ட் டயக்னொஸ்டிக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் ஜுட் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இந்த உயர் சான்றினூடாக, எமது சகல பங்காளர்களினதும் பரந்த மற்றும் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், மருந்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்வது, களஞ்சியப்படுத்துவது மற்றும் விநியோகம் செய்வது போன்றவற்றில் சர்வதேச தர நியமங்களை பின்பற்றுவதை உறுதிசெய்வதாக அமையும். இலங்கையின் முதல் தர மருந்துப் பொருட்கள் இறக்குமதியாளரும் விநியோகத்தரும் எனும் வகையில், எமது கொள்கைகளின் பிரகாரம் ISO 9001:2015 மற்றும் GDP சான்றுகளின் அடிப்படையில் சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். இவை சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள சான்றுகளாக அமைந்திருப்பதுடன், ஒழுக்கம் மற்றும் தரம் ஆகியவற்றில் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் காண்பிக்கும் அர்ப்பணிப்பை தெளிவாக உறுதி செய்துள்ளது.” என்றார்.
Bureau Veritas இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் சாண் நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் GDP சான்றைப் பெற்றுக் கொண்டுள்ளதையிட்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம். சான்றைப் பெற்றுக் கொண்டுள்ளதனூடாக, நிறுவனத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்பதுடன், விநியோகத் தொடரின் சகல பிரிவுகளிலும் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். மேலும், பொறுப்பு வாய்ந்த வியாபார செயன்முறைகளுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் முடியும். இந்த கைகோர்ப்பு தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், தொடர்ந்தும் இந்தப் பங்காண்மையை முன்நோக்கி கொண்டு செல்வதுடன், நிர்வாக கட்டமைப்புகளில் சிறந்த சர்வதேச செயன்முறைகளை உள்வாங்குவதில் பங்களிப்பு வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் புத்தாக்கத்தை பின்பற்றுவதற்கான திறனைக் கொண்டுள்ளதுடன், தேசத்தின் மருந்தாக்கல் தொழிற்துறையில் ஒப்பற்ற விற்பனை மற்றும் விநியோக செயற்பாடுகளுடன், மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, நவீன நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. உயர் வினைத்திறனுடன், வியாபார பங்காளர்களுக்கு அவசியமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதனூடாக, ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் இலங்கையின் மாபெரும் மருந்துப் பொருட்கள் விநியோகத்தராக 30% சந்தைப் பங்கை தன்வசம் கொண்டுள்ளது.