Eyeview Sri Lanka

ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறைகளை அனுபவிக்க வசதியேற்படுத்தும் வகையில் Amazon Alexa உடன் கைகோர்க்க SLT-MOBITEL திட்டம்

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, Amazon Alexa சேவைகளுடன் முழுமையாக கைகோர்த்து இயங்க முன்வந்துள்ளது. இதனூடாக ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு புதிய மதிநுட்பமான மற்றும் டிஜிட்டல் வாழ்க்கைமுறைகளை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

இன்றைய உலகில் artificial Intelligence (AI) மற்றும் voice commanded சேவைகள் பெருமளவு ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், மக்களின் வாழ்க்கை முறையில் துரிதமாக மாற்றத்தை ஏற்படுத்திய வண்ணமுள்ளன. வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை இலகுவாக நிர்வகித்துக் கொள்ள உதவும் வகையில், Apple Siri, Google Assist போன்றன குரல்களால் கட்டுப்படுத்தக்கூடிய AI சேவைகளை வழங்குகின்றன.

Amazon இன் virtual smart assistant என அறியப்படும் Alexa, cloud அடிப்படையிலான artificial intelligence ஆக அமைந்திருப்பதுடன், மனிதர்களை மையப்படுத்திய தொழில்நுட்ப கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது. AI voice assistance ஆக Alexa இனால் பல ஸ்மார்ட் சாதனங்கள் இணைக்கப்பட்டு, பயன்படுத்துவோருக்கு புதிய டிஜிட்டல் வாழ்க்கை முறைகள் வழங்கப்படுகின்றன.

வீடுகளில் சிறந்த இணைப்பு அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள உதவும் வகையில், SLT-MOBITEL இனால் தற்போது ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு Alexa App அல்லது சாதனமொன்றுடன் இணைப்பை ஏற்படுத்தி தமது நிலையான இணைப்புகளை நிர்வகிப்பதற்கு புதிய வழிமுறை வழங்கப்படுகின்றது. SLT-MOBITEL இன் ஹோம் சேவைகளை Alexa உடன் முழுமையாக ஒன்றிணைத்து, வாடிக்கையாளர்களுக்கு smart assistant இன் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், குரல், புரோட்பான்ட், PEO TV, அழைப்பு நிலைய சேவைகள் போன்றவற்றில் SLT-MOBITEL க்கு பல தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். 

Alexa உடன் வாடிக்கையாளர்களுக்கு digital assistant ஒன்றைக் கொண்டிருக்க முடியும். வாடிக்கையாளர்களால் டேட்டா சேர்ப்பு, டேட்டா பாவனையை அறிந்து கொள்வது, தொலைக்காட்சி செனல்களை மாற்றுவது மற்றும் திரைப்படங்களை கொள்வனவு செய்வது போன்றவற்றை Alexa ஊடாக மேற்கொள்ள முடியும். பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவான வகையில் அமைந்திருக்கும் SLT-MOBITEL இன் ஒன்றிணைப்பிலமைந்த Alexa இனால் சிறந்த, பல நாளிகை, தன்னியக்கமான வாடிக்கையாளர் உதவி அனுபவங்கள் ஹோம் புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. 

SLT-MOBITEL Amazon Alexa திறன் என்பது தெற்காசிய தொழில்நுட்ப நிறுவனமான The Connection Workshop (Pvt) Ltd உடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது. Tedi Alexa voice assistant மற்றும் home automation சேவைகளை இலங்கையில் அறிமுகம் செய்வதில் இந்த நிறுவனம் முக்கிய பங்காற்றியிருந்தது. 


Share with your friend
Exit mobile version