Site icon Eyeview Sri Lanka

10வது வருடாந்த Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமையாளர்களை கௌரவித்தது Hayleys

Share with your friend

புத்தாக்கங்களில் ஒரு தசாப்தத்தின் சிறப்பைக் கொண்டாடும் Hayleys PLC, 16 வெவ்வேறு வணிகப் பிரிவுகளில் தனது குழுக்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக அதன் 10வது ஆண்டு Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது.

25 திட்டக் குழுக்களைச் சேர்ந்த 205 ஊழியர்கள் ஹேய்லிஸ் குழுமத்தின் மிக உயர்ந்த பாராட்டைப் பெற்றனர். இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி கண்டுபிடிப்புகள், மூலப்பொருட்கள் விநியோக சங்கிலியிலிருந்து ரோபோடிக் செயல்முறை தன்னியக்கமாக்கல் வரை அதிநவீன டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் இலங்கை முழுவதும் உள்ள பல்வேறு தொழில்துறை சவால்களுக்கு தனித்துவமான தீர்வுகளை வழங்குவதன் மூலம் புதிய பாதையை தொடங்குதல் இங்கே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

“ஹேய்லிஸின் Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வு 2012 இல் எங்களின் பல்வகைப்பட்ட வணிகக் குழுமத்தில் வழங்கப்பட்ட புத்தாக்கத்தின் சிறப்பை அங்கீகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இது நமது பெருநிறுவன கலாச்சாரத்தின் மிகவும் விரும்பத்தக்க அம்சமாகும்.”

“145 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் ஒரு நிறுவனமாக, சவால்களை எதிர்கொள்வது எங்களுக்கு ஒன்றும் புதிய விடயமல்ல. எங்கள் ஊழியர்கள் சமூகம் எங்களது மிகப்பெரிய சொத்து மற்றும் அவர்கள் எங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறார்கள். எங்களது திறமையான ஊழியர்களுக்கு இந்த ஆண்டு விருதுகளை வழங்கும் திட்டங்களின் மூலம் எங்கள் பல்வேறு பங்குதாரர்களுக்கு மதிப்பை உருவாக்க முடிந்தது. அவர்களின் நெகிழ்ச்சி மற்றும் விடாமுயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம்.” என ஹேய்லிஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டித்தகே தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG), புத்தாக்கம், தரம் மற்றும் லீன் (Lean) மேலான்மை மற்றும் சிறந்த சேவை ஆகியவற்றிற்காக பல விருதுகள் வழங்கப்பட்டன.

ஐந்து தனித்துவமான தொழில்நுட்ப விருதுகளுடன் ஆறு ஏற்றுமதி சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட காப்புரிமை பெற்ற கையுறை பாதுகாப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்தியதற்காக Dipped Products PLC (DPL) சிறந்த ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதைப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள கொடுக்கல் வாங்கல் செய்யும் வாடிக்கையாளர் நுண்ணறிவுகளின் ஆதரவுடன், DPL போட்டி மிகுந்த, உலகளாவிய நைட்ரைல் கையுறை சந்தையில் அதன் பெயரைப் பிரகாசிக்கச் செய்கிறது. குழுவின் உள்ளக பொறியியல் குழு, குறைந்த இடத்தில் வடிவமைக்கப்பட்ட ‘Fully integrated robot dipping automation’ புத்தாக்க பிரிவுக்கும் விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்பட்டன.

தலவாக்கலை தேயிலை தோட்ட நிறுவனம் (TTE) அதன் இயற்கைக்கு இணக்கமான இழைவரி திட்டத்திற்காக (eco-friendly zipline) தரம் மற்றும் லீன் (Lean) மேலாண்மை பிரிவில் விருதை வென்றது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலைகள் உயரும் போது புதிய தேயிலை இலைகளை தொழிற்சாலைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வாக இந்த புதிய யோசனை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முயற்சியின் விளைவாக, போக்குவரத்துச் செலவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, காற்று வெளியேற்றம் குறைக்கப்பட்டது. மேலும் இந்த வெளியீடு பணியிடத்தில் சிறந்த உற்பத்தித்திறனை உறுதிப்படுத்த குழுவிற்கு உதவியுள்ளது.

குழுமத்தின் முன்னணி நுகர்வோர் வர்த்தக நாமமான Singer (Sri Lanka) PLC, தொற்றுநோய் பரவிய காலங்களின் போது ‘வேலை-விளையாட்டு-மற்றும்-வீட்டில் இருந்து-படிப்பு’ தீர்வுகளுக்கான நுகர்வோர் தேவையின் எழுச்சியைப் பூர்த்தி செய்ததற்காக சேவை சிறப்பு வகை விருதை வென்றது. சிங்கர், வீட்டிலிருந்து பணிபுரியும் கோரிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியது மட்டுமல்லாமல், மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்க்கப்பட்ட கேமிங் போட்டிகளான சிங்கர் எஸ்போர்ட்ஸ் பிரீமியர் லீக்கின் மூலம் இலங்கையில் உள்ள விளையாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது.

Hayleys Fabric ஆனது ESG விருதினை வென்றவராக அங்கீகரிக்கப்பட்டது, இது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள தாவர இனமான Lagenandra Kalugalaensis ஐ மீட்டெடுப்பதற்கான அதன் முயற்சிகளுக்காக, Kalugala வன காப்பகத்தின் சுற்றளவில் ஒரே இடத்தில் மட்டுமே உள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) மற்றும் பேராதனை மற்றும் வடமேல் பல்கலைக்கழகங்களுடனான கூட்டு முயற்சியானது கள ஆய்வு மற்றும் விதை முளைப்பு மூலம் அரிய நீர்வாழ் தாவரத்தை அழிவிலிருந்து பாதுகாக்க உதவுகின்றது.

இந்த நிகழ்வின் போது, ஊழியர்கள் நான்கு பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் மேடையில் தங்கள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பும் கிடைத்தது. பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு நேரடி இசைக்குழு, குழு மற்றும் தனி நபர்பாடல் மற்றும் கடல் கழிவுகள் (மீள்சுழற்சி செய்யப்பட்ட நைலோன்) மற்றும் PET போத்தல்கள் (மீள்சுழற்சி செய்யப்பட்ட பொலியஸ்டர்) ஆகியவற்றால் செய்யப்பட்ட ஆடைகளைக் கொண்ட ஹேய்லிஸின் ஃபேப்ரிக் வடிவமைத்த ஃபேஷன் ஷோ ஆகியவையும் அடங்கியமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version