Eyeview Sri Lanka

10 ஆண்டுகால கூட்டாண்மையின் அடையாளத்தைக் குறிக்கும் 2024 நவலோக்க உயர் கல்வி நிறுவனம் – Swinburne பட்டமளிப்பு விழா

Share with your friend

நவலோக உயர் கல்வி நிறுவனமும் (NCHS), Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகமும் தசாப்தத்திற்கும் மேலான நீண்டகால உறவினை கொண்டாடும் விதமாக அதன் 2024 பட்டமளிப்பு விழா கடந்த (23) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற இந்த நிகழ்வு, NCHS மற்றும் Swinburne இடையேயான வலுவான உறவின் சிறப்பம்சத்தை பிரதிபலிக்கும் தருணமாகவும் அமைந்தது.

இலங்கை முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு தரமான, சர்வதேச அங்கீகாரம் பெற்ற கல்வியை வழங்குவதற்கான NCHSஇன் பயணத்தையும் அதன் சிறப்பான சேவைகளையும் அங்கீகரிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது. NCHSஇன் கொழும்பு மற்றும் கண்டி கல்லூரிகள் மூலம் இந்நாட்டு மாணவர்களின் கனவுகளை நனவாக்க அர்ப்பணிப்புடன் செயல்படுவதுடன், சர்வதேச தரத்திற்கு ஏற்ற கற்றல் சூழலை அவர்களுக்கு வழங்குவதில் மிகப் பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

இலங்கையின் கல்வித்துறையில் முக்கிய மைல்கல்லை குறிக்கும் கடந்த பத்தாண்டு கால வரலாறு பற்றி கருத்து தெரிவித்த NCHSஇன் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, ‘அவுஸ்திரேலியாவின் Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இந்நாட்டின் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை வழங்கிய பத்தாண்டு கால கூட்டாண்மையால் இந்த ஆண்டின் பட்டமளிப்பு விழா மிக விசேட தருணமாக அமைகிறது. இந்த கூட்டுறவு மற்றும் எமது ஏனைய சர்வதேச உறவுகளுடன் இணைந்து உலகளாவிய கல்வியை இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பு தெளிவாக பிரதிபலிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் Pascale G. Quester, ‘நீங்கள் பெறும் இந்த Swinburne தகுதி பட்டச்சான்றிதழுக்கு அப்பாற்பட்ட சிறப்பு தகுதி என குறிப்பிடலாம். நாங்கள் தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்பு வழங்குநர்களுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவதால், உங்கள் தகுதிகளுக்கு வேலைவாய்ப்பில் உயர்ந்த மதிப்பு கிடைக்கிறது. அதேபோல, நீங்கள் பெற்ற இந்த பட்டம் மேற்படிப்புக்கான புதிய ஆரம்பமாக அமையும் என்பது உறுதி’ என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கௌரவ Paul Stephens, பட்டதாரிகள் கற்றுக்கொண்ட புதிய திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விதம் குறித்து வலியுறுத்தியதுடன், ‘இந்த தருணத்தில் உங்களைப் போன்ற தகுதியும் திறமையும் கொண்ட நபர்கள் இலங்கைக்கு தேவைப்படுகிறார்கள். நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை இப்போது கவனத்தில் கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டார்.

NCHS மற்றும் Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நிறுவனங்களின் உயர் முகாமைத்துவம் மற்றும் அதிகாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

அவுஸ்திரேலியாவின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மற்றும் தலைவர் பேராசிரியர் Pascale G. Quester, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கௌரவ Paul Stephens, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் துஷான் ஜயவிக்ரம, கல்விப் பீடாதிபதி கலாநிதி எலன் ரொபர்ட்ஸ்டன், NCHSஇன் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச, பிரதித் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி விக்டர் ரமணன், பணிப்பாளர்களான உமேஷ் ரமணன் மற்றும் பேராசிரியர் லால் சந்திரசேன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், Swinburne சர்வதேச கல்வி கூட்டாண்மை உறவுகளுக்கான உதவி இயக்குநர் வலி ரத்னாவலியும் கலந்து கொண்டார்.

கல்விசார் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட அங்கீகாரத்துடன் கூடிய 2024 பட்டமளிப்பு விழா, NCHSஇன் சிறப்பான கற்றல் வசதிகள் மற்றும் சர்வதேச தரத்திலான கல்வி வசதிகள் மூலம் சிறப்புற அமைந்தது. இந்நாட்டின் நாளைய தலைவர்கள், புத்தாக்குநர்கள் மற்றும் உலகளாவிய குடிமக்களை உருவாக்கும் மைய நிறுவனமாக மாறுவதற்கும் NCHS நிறுவனத்திற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.

10 ஆண்டுகால இந்த தொடர்ச்சியான உறவின் மூலம் சிறப்பாக வெளிப்படுவது, இலங்கையின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், வேகமாக மாறிவரும் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அறிவு சார்ந்த சமூகத்திற்கு பங்களிப்பு செய்வதற்குமான NCHSஇன் உறுதியான அர்ப்பணிப்பாகும். வலுவான அடித்தளத்துடனும், திறமைகளாலும் தொழில்முறை உறவுகளாலும் செழுமையான இந்த பட்டதாரிகள் தங்களது துறையில் முன்னேறிச் செல்வார்கள. அதே வேளை சமூகத்திற்கு பெரும் சேவையையும் ஆற்றுவார்கள்.

NCHS பற்றிய மேலதிக விபரங்களுக்கு 011 2 777 666ஐ அழையுங்கள், அல்லது info@nchs.edu.lk க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் அல்லது www.nchs.edu.lk  எனும் எமது இணையதளத்தைப் பார்வையிடுங்கள்.


Share with your friend
Exit mobile version