Site icon Eyeview Sri Lanka

2022ஆம் ஆண்டு Amana Takaful General Insurance க்கு உச்ச வளர்ச்சியில் முடிவடைந்தது!

Share with your friend

தொடர்ந்து 2 வருடங்களாக இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையை இக் காப்புறுதி நிறுவனமானது  தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தொடர்ந்து 2 ஆண்டுகளாக இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் காப்புறுதி நிறுவனமாக தனது நிலையைத் தக்கவைத்துக்கொண்ட Amana Takaful Insurance PLC (General) கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான வருமானங்கள் (Gross Written Premiums) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 37% இனால் அதிகரித்துள்ளதாக அறிவித்தது.

இதன் அடிப்படையில், இந்நிறுவனத்தின் GWP வருவாய்கள் மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதியில் 3.36 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமை காரணமாகவும், இந்த காலகட்டத்தில் அதன் சந்தைப் பங்கை குறிப்பிட்டளவு அதிகரிக்க முடிந்தமை காரணமாகவும், இந்நிறுவனம் அதன் போட்டியாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக, இக்காலகட்டத்தில், மோட்டார், மோட்டார் அல்லாத மற்றும் மருத்துவப் பிரிவுகள் முறையே 39%, 36% மற்றும் 32% வளர்ச்சியைக் கண்டுள்ளன. இதற்கிடையில், இந்த நிறுவனம் 347 மில்லியன் நிகர லாபத்தையும் பதிவுசெய்ததன் மூலம் 80% பாரிய இலாப வளர்ச்சியைக் கண்டுள்ளது.

“நாங்கள் பெற்றுள்ள வெற்றி எப்போதும் எங்கள் பங்குதாரர்களின் நல்வாழ்வைச் சார்ந்தே இருந்துள்ளது என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெஹான் ஃபைசல் கூறினார், “பயனுள்ள மூலோபாய திட்டமிடல், ஒப்பிடமுடியாத தரமான சேவை மற்றும் நெறிப்படுத்தப்பட்ட வணிக செயல்முறைகளை ஒன்றிணைத்ததன் மூலம் நாம் இந்த வெற்றியை அடைந்துள்ளோம். தனித்தன்மை வாய்ந்த மக்கள்-சார் காப்பீட்டு மாதிரியின் முன்னோடிகள் என்ற ரீதியில், எங்கள் இழப்பீட்டு செலுத்துதல் ஒழுங்கமைக்கப்பட்டு சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்தோம். எமது GWP வருவாயானது 37% மட்டுமே அதிகரித்துள்ள போதிலும், 2021 ஆம் ஆண்டுடன்ஒப்பிடும்போது, எங்கள் இழப்பீடுகளுக்கான செலுத்துதல் 53% அதிகரித்துள்ளது. நாங்கள் நிதி இடர் மேலாண்மை வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறோம், மேலும் காப்பீட்டு இழப்பீடுகளை சரியான நேரத்தில் செலுத்துவதே எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையை நம்மீது வைப்பதற்கான காரணம் ஆகும். அனைத்து இலங்கையர்களுக்கும் நியாயமான, வெளிப்படையான மற்றும் நன்மை பயக்கும் காப்புறுதி திட்டங்களுடன் சேவை செய்வதற்கு நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். அதே வேளையில், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரிடமிருந்தும் நாம் பெற்றுக்கொள்ளும் பின்னூட்டங்களை செவிமடுத்து அதன் படி சேவை செய்கின்றோம்.”

Amana Takaful Insurance PLC யின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஹசன் காசிம் கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் சரியான நேரத்தில் மேற்கொள்ளும் இழப்பீடு செலுத்துதல், நியாயமான, வெளிப்படையான கொள்கைகள், மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் ஆகியன எங்களது தனித்துவமான திட்டங்கள் மற்றும் சேவைத் தரங்கள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மக்களின் விருப்புவெறுப்புக்களை அறிவதற்கு நாம் மேற்கொள்ளும் பிரயத்தனம் காரணமாக எம்முடைய இந்த உத்தி ஒரு நேர்மறையான பின்னூட்ட சுழற்சியை உருவாக்கியுள்ளது. இந்த செயல்பாட்டின் வெற்றி எங்களது தொடர்ச்சியான வலுவான நிதி செயல்திறனில் தெளிவாகப் பிரதிபலிக்கின்றது. எங்கள் வளர்ச்சி மாதிரியானது குறுகிய மற்றும் நடுத்தர காலத்திற்கு நிலையானது என்று நாங்கள் நம்புகிறோம். அதுமட்டுமல்லாது,  நீண்ட காலத்திற்கு நாம் தொடர்ந்து வளர்ச்சியை உறுதிசெய்ய எங்கள் வளர்ச்சி மாதிரியை தகுந்தவாறு மாற்றியமைப்போம். எமக்கு ஆதரவளித்த எமது வாடிக்கையாளர்களுக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் எமது மக்களுக்கும் நன்றி தெரிவிக்க இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறேன் மற்றும் எமது மேன்மையான குறிக்கோள் இலங்கை மக்களுக்கு நட்பு ரீதியான காப்புறுதி என்பதாகும். 

Amana Takaful Insurance ஆனது வாடிக்கையாளர்களை மையப்படுத்திய, சிறந்த நெறிமுறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்ட காப்புறுதியின் (Takaful) தனித்துவமான கருத்தாக்கத்திற்கு முன்னோடியாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் 1998 இல் ஒரு பொது நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டதோடு, 2006 ஆம் ஆண்டு தொடக்கம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. Amana Takaful Insurance ஆனது இலங்கை முழுவதும் 40 இட்ற்கும் அதிகமான கிளைகளைக் கொண்டுள்ளதன் மூலம் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய அதன் புவியியல் அடிச்சுவட்டை விரிவுபடுத்தியுள்ளது. ISO 9001 அங்கீகாரம் பெற்ற அமைப்பான Amana Takaful Insurance நிறுவனமானது 2005 ஆம் ஆண்டு முதல் மாலைதீவில் வெளிநாட்டு பல இருப்புக்களைப் பராமரித்து வருகிறது. இந்த இருப்புக்கள் 2011 ஆம் ஆண்டு free-standing PLC ஆக மாலைதீவு பங்குச் சந்தையில் (MSE) பட்டியலிடப்பட்டது. Amana Takaful Insurance ஆனது முழுமையான பொது மற்றும் ஆயுள் காப்பீட்டுத் தீர்வுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட உடல்நலக் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகியவற்றை வழங்குகின்றது.


Share with your friend
Exit mobile version