Site icon Eyeview Sri Lanka

2022 இல் இலங்கையின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாக DHL Express அங்கீகாரம்

Share with your friend

DHL Express Sri Lanka நிறுவனம் 2022ஆம் ஆண்டில் இலங்கையில் பணியாற்றச் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக Great Place to Work® இனால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இந்த நிறுவனமானது தனது உறுதியான மற்றும் தனித்துவமான கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் சிறந்த பல்தேசிய நிறுவனம் என்ற விருதையும், சிறிய தொழில்முயற்சிகளுக்கான பிரிவில் தங்க விருதையும் வென்றது.

இதற்கு மேலதிகமாக DHL Express நிறுவனமானது ஆசியாவின் #1 Great Place to Work®என்ற பட்டத்தை தொடர்ச்சியாக நான்காவது தடவையாக இம்முறையும் வெற்றிகொண்டுள்ளதோடு, கடந்த ஏழு வருடங்களில் பணியிட கலாசாரம் தொடர்பான ஆசியாவின் பட்டியலில் ஆறாவது வருடமாகவும் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஆசிய பசுபிக்கில் 19 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் 2022இற்கான ‘Great Place to Work’ ஆக சான்றழிக்கப்பட்டுள்ளன. 

DHL Express Sri Lanka நிறுவனமானது கடந்த எட்டு வருடங்கள் தொடர்ச்சியாக Great Place to Work® என்ற விருதினால் அங்கீகரிக்கப்பட்டு வருவதுடனூடாக, ஊழியர்களுக்கு வலுவான கலாச்சாரம் மற்றும் பணிச்சூழலை உருவாக்குவதில் இந்த நிறுவனம் வழங்கிவரும் முக்கியத்துவம் இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த DHL Express Sri Lanka வின் இலங்கைக்கான தலைமையதிகாரி டிமித்ரி பெரேரா, “இந்த வருடமும் மீண்டும் Great Place to Work®ஆக அங்கீகரிக்கப்பட்டதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். சாதகமான கலாசாரம் மேல்மட்டத்திலிருந்து கொண்டு நடத்தப்பட்டாலும் இதற்கு அனைத்துப் பணியாளர்களினதும் கடுமையான ஆதரவு கிடைத்துள்ளது. வெற்றிபெறும் அணியாகச் செயற்படுவதற்கான சூழலை நாம் ஏற்படுத்தியிருப்பதுடன், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு எவ்வாறு இணைந்து செயற்பட வேண்டும் என்பதை இதன் ஊடாக அறியமுடியும். மக்கள் உன்னதமான இலக்குகளை அடையக்கூடிய மற்றும் தங்களுக்கும் வணிகத்திற்கும் சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடிய பணியிடத்தை உருவாக்குவதில் நாம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை இந்த விருதுகள் பிரதிபலிக்கின்றன” என்றார்.

தொற்று நோய் சர்வதேச பரவலைத் தொடர்ந்து DHL Express Sri Lanka நிறுவனமானது பணியாளர்களுடனான தொடர்பாடல்களை டிஜிட்டல் மயப்படுத்தி, குழுக்களுக்கிடையில் ஒருங்கிணைப்புக்களை ஊக்குவித்தது. பணியாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்கு முதன்மையான முன்னுரிமை அளிக்கப்பட்டதோடு, இந்த நிறுவனமானது ஆரோக்கியம் மற்றும் அக்கறையான சூழலொன்றை அமைப்பதில் தொடரச்சியான கவனம் செலுத்தி வந்தது..

DHL Express Sri Lanka நிறுவனத்துக்கு உள்நாட்டில் கிடைத்துள்ள தரப்படுத்தலானது அதன் தாய் நிறுவனத்தின் உயர் கட்டமைப்பைப் பிரதிபலிக்கின்றது. ஆசியாவின் Best Workplaces பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளதால், சர்வதேச விரைவு சேவை வழங்குநரின் நேர்மை மற்றும் நட்புறவு ஆகியவற்றின் உறுதியான நிறுவன கலாச்சாரத்தை வலியுறுத்துவதற்கான அடித்தளமான ‘மரியாதை மற்றும் பெறுபேறுகள்” என்பனவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மக்கள் தொடர்பான மூலோபாயம் மற்றும் ஊழியர்கள் என்பனவே சொத்தாக அமைவதுடன், அதன் மக்கள் மீது தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொண்டு, ஒரு சிலருக்கு மாத்திரமன்றி அனைவருக்கும் சிறந்த பணியிடத்தை உருவாக்க DHL Express  தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. இதுவரையில் விருதுபெற்ற பயிற்சித் தொகுதிகளில் 370,000 பணியாளர்கள் பங்குபற்றியிருப்பதுடன், பெண்களின் பிரதிநிதித்துவம் 27 சதவிகிதத்தை அடைந்திருப்பதுடன், பணியாளர்கள் 10,000 மணித்தியாலங்கள் தன்னார்வ முயற்சிகளில் தம்மை அர்ப்பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

DHL Express Sri Lanka நிறுவனத்தின் மனிதவளப் பிரிவின் தலைவர் தாரகா டி சில்வா குறிப்பிடுகையில், “தொற்று நோய் சர்வதேச பரவல் காலம் ஆரம்பித்ததிலிருந்து எமது பணியாளர்கள் குறித்த மூலோபாயம் உருவாகியிருந்ததுடன், பணியாற்றல் குறித்த புதிய தசாப்தத்தில் எமது குழுக்களின் உறுப்பினர்கள் வழங்கவிரும் ஈடு இணையற்ற பங்களிப்புத் தொடர்பில் நான் பெருமையடைகிறேன். நாம் எதனைச் செய்தாலும் அதில் மக்களே மையப்புள்ளியில் இருப்பார்கள், எமது நெறிமுறைகள் எப்போதும் பணியாளர்களின் நல்வாழ்வை உறுதிசெய்வதாகவே அமையும். Great Place to Work® 2022 விருதில் பல்வேறு விருதுகளை நாம் பெற்றுக்கொள்ள இதுவே உறுதுணையாக இருந்தன” என்றார். 

30 வருடங்களுக்கு மேலாக உலகளாவிய ரீதியில் சிறந்த பணியிடங்களை அடையாளம் காண்பதில் முன்னோடியாகத் திகழும் Great Place to Work நிறுவனம், உயர்-நம்பிக்கை, உயர் செயல்திறன் கொண்ட நிறுவன கலாச்சாரங்களை உருவாக்கியுள்ள நிறுவனங்களுக்குச் சான்றளிக்க பணியாளர்களின் கருத்துக்களை சேகரிக்கவும் மதிப்பீடு செய்யவும் கடுமையான வழிமுறையைப் பயன்படுத்துகிறது. முகாமைத்துவம், கொடுப்பனவு, நன்மைகள், வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள், கலாசாரம் மற்றும் தொழில் திருப்தி ஆகியவற்றில் ஊழியர்களின் மதிப்பீடுகளால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

இலங்கையில் Great Place to Work®நிறுவனமானது உலகளாவிய ரீதியில் உள்ள சிறந்த பணியிடங்களை அங்கீகரிப்பது மற்றும் அவை தொடர்பில் ஆராய்வதில் முன்னணியாளராகத் திகழ்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களில் சிறந்த பணியிடங்களை அடையாளம் காண்பதற்கும் அவை குறித்துப் புரிந்துகொள்வதற்கும் 58 நாடுகளில் கணக்கெடுப்புக்களை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட முறை உலகில் சிறந்த முறையாகக் காணப்படுவதுடன், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்று உலகின் ஏனைய நாடுகளில் நடத்தப்படுவதைப் போன்று ஆய்வுகள் மற்றும் பரீட்சைகள் கடுமையாகப் பின்பற்றப்பட்டன.


Share with your friend
Exit mobile version