Site icon Eyeview Sri Lanka

2023 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையில் பிரகாசித்த DIMO

Share with your friend

இலங்கையில் முன்னணியிலுள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, 13ஆவது முறையாக இடம்பெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2023 இல் பங்கேற்றதோடு, உலகின் சிறந்த பொறியியல் வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் பல்வேறு தீர்வுகளையும் நிறுவனம் அதில் காட்சிப்படுத்தியது. யாழ்ப்பாணத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் 2023 மார்ச் 03ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சியில், DIMO வலயம் பெருமளவிலான பார்வையாளர்களை ஈர்த்தது. இக்கண்காட்சி, 2023 மார்ச் 05 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வர்த்தக கண்காட்சியில் 1,200 சதுர அடி திறந்தவெளி மற்றும் 11,000 சதுர அடி உள்ளக வெளியில் தனது பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை DIMO காட்சிப்படுத்தி, சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்கமளிக்கும் வளர்ச்சி பங்காளி எனும் வகையில் DIMO நிறுவனம், DIMO Academy of Technical Skills மூலம் பல்வேறு பாடநெறிகளை  வழங்குகிறது. BLACK + DECKER, Dewalt, Stanley, STIHL, Di-Tec Power Tools and Home Appliances, DIMO Lumin lighting தீர்வுகள், இலங்கையின் முதலாவது CO2 உறிஞ்சும் SMART பூச்சான Graphenstone, WD-40 உராய்வு நீக்கிகள், Ferri Automotive பாகங்கள் மற்றும் Michelin, BF Goodrich, Kumho, Sailun, MRF, Alliance, JINYU, COMPASAL, Montex, CAMSO டயர் வர்த்தகநாமங்கள் ஆகிய DIMO தயாரிப்புகள் யாழ் வர்த்தக கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. 

அத்துடன், மஹிந்திரா உழவு இயந்திரங்கள், ஸ்வராஜ் உழவு இயந்திரங்கள், LOVOL அறுவடை இயந்திரங்கள், கலப்பை வகைகள், Home Biogas தயாரிப்பு வகைகளை உள்ளடக்கிய DIMO Agri Businesses நிறுவனத்தின் கீழுள்ள DIMO விவசாய இயந்திரங்களையும் இங்கு நிறுவனம் காட்சிப்படுத்தியது. நிறுவனம் அதன் TATA சேவைப் பொதிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் தொடர்பில் பார்வையாளர்களுக்கு தெளிவூட்டியதோடு, உள்நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட DIMO பட்டாவையும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. சேவைப் பிரிவில், எஞ்சினை முழுமையாக பிரித்து சேவை வழங்கும் தீர்வுகளை உள்ளடக்கிய DIMO Engine Care Services, டீசல் பம்ப் பழுதுபார்க்கும் சேவைகளை வழங்கும் DIMO Diesel Lab Services ஆகியனவும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

END


Share with your friend
Exit mobile version